மேஷ ராசி வாசகர்களே
இந்த வாரம் சமூகத்தில் உயர்ந்தவர்கள் மத்தியில் புதியதொரு மரியாதையும் வரவேற்பும் உங்களுக்கு கிடைக்கப்பெறும. தாயின் உடல்நலத்தில் சிறு சிறு தொந்தரவுகள் உண்டாகி நல்ல பராமரிப்பின் காரணமாய் உடல்நலம் பெறும். வெகுகாலம் தீராத பிரச்சினைகள் மனதுக்கு சந்தோஷமான தீர்வைத் தரும். கணவன் மனைவி குடும்ப ஒற்றுமையில் சீரான நிலையே காணப்படும். திருமண வாய்ப்புக்காக காத்திருப்பவர்களுக்கு உறவினர் சார்ந்த வகையில் சில தடைகள் வந்நது விலகும். அரசு, தனியார் துறைகளில் உள்ளவர்கள், ஆடம்பரச் செலவினங்களைத் தவிர்த்து தங்களின் குடும்பத்தினர் மகிழ்ச்சிக்காக சுபச்செலவுகளை செய்யும் வாய்ப்புகள் உருவாகும். உங்களுக்குத் தேவையான பணம் நிறைந்த வகையில் கிடைக்கும். தொழிலதிபர்கள், உணவுப்பொருள் உற்பத்தி செய்பவர்கள் நிறைவான விளைச்சல் காரணமாக புதிய சந்தை வசதிகளையும் அதிக பொருளாதார வரவுகளையும் பெறுவார்கள். அறைகலன்களை உற்பத்தி செய்பவர்கள் விற்பனை மூலம் மேன்மை பெறுவார்கள். பெண்கள் பணிகளில் மேன்மை பெறுவார்கள். திருமண வாய்ப்புகளுக்காகக் காத்திருக்கும் பெண்களுக்கு சரியான வரன் அமையும். கலைஞர்கள் தங்கள் தொழிலில் மிகுந்த அக்கறையுடன் செயல்பட்டு நிறைவான அங்கீகாரத்தைப் பெறுவார்கள்.
அதிர்ஷ்டமான கிழமைகள்: செவ்வாய், புதன்
திசைகள்: கிழக்கு, தென்மேற்கு
நிறங்கள்: சிவப்பு, பச்சை
எண்கள்: 6, 9
பரிகாரம்: செவ்வாய்கிழமை அன்று அருகிலிருக்கும் முருகன் கோவிலுக்குச் சென்று வலம் வரவும்.
ரிஷப ராசி வாசகர்களே
இந்த வாரம் மனதில் உத்வேகம் உருவாகி உயர்வான செயல்களைச் செய்வீர்கள். நிலுவையில் இருந்த பணம் உங்களுக்குத் திரும்பக் கிடைக்கும். அரசு, தனியார் வங்கிகளின் உதவிகளைப் பெற்று வீட்டை வசதிக்கேற்ப மாறுதல் செய்வீர்கள். பணியாளர்களிடம் நீங்கள் காட்டி வந்த கடுமையான போக்கு மாறி செயலில் கனிவான தன்மை நிறைந்திருக்கும். இதனால் நற்பெயர் பெறுவதுடன் ஊழியர்களின் எதிர்பாராத உதவிகளும் மனதை மகிழ்ச்சி கொள்ளச் செய்யும். வியாபாரிகள், பொருட்களைக் குத்தகை முறையில் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் பெறுவார்கள். மின்சாரம் தொடர்புடைய பொருட்களை விற்பனை செய்பவர்கள் தங்கள் தொழிலில் முன்னேற்றம் அடைவர். தொழிலில் ஏற்பட்ட நிலுவைக் கடன்கள் அடைவதற்கு வாய்ப்புகள் ஏற்படும். பெண்களுக்குச் சீரான வாய்ப்புகள் வந்தாலும் அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும். முன்யோசனையுடன் திட்டமிடுதல் அவசியம். குழந்தைகளின் கல்வியில் புதிய உற்சாகமும் நம்பிக்கையும் கிடைக்கும். இருப்பினும் உடல்நிலையில் கவனமுடன் இருக்க வேண்டி வரும். சினிமா, நாடகம், தொலைக்காட்சிக் கலைஞர்கள், தங்கள் திறனை நன்கு பயன்படுத்தி ரசிகர்களிடம் புகழ் பெறுவதுடன் பொருளாதார வகையிலும் நிறைந்த முன்னேற்றம் பெறுவார்கள்.
அதிர்ஷ்டமான கிழமைகள்: புதன், வெள்ளி.
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெள்ளை, வெளிர் பச்சை.
எண்கள்: 2, 3, 6
பரிகாரம்: வெள்ளிக்கிழமை அன்று அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று வரவும். மல்லிகை மலரைச் சாற்றி வழிபடவும்.
மிதுன ராசி வாசகர்களே
இந்த வாரம் நடைமுறைப்படுத்த முடியாமல் முடங்கிக் கிடந்த திட்டங்கள் அனைத்தும் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்துவிடும். உங்கள் ஒவ்வொரு வெற்றிக்கும் உறவினர்கள், நண்பர்கள் காரணமாக இருப்பார்கள். பொருளாதாரத்தில் உயர்வு உண்டாகும். குடும்பத்தில் கணவன்-மனைவி ஒற்றுமையால் அனுகூலங்கள் கிடைக்கும். தந்தைவழி உறவினர்கள் உங்கள் வளர்ச்சி கண்டு பொறாமைப்படுவார்கள். நிர்வாகத் திறமையை வளர்த்துக்கொள்ளத் தேவையான பயிற்சிப் படிப்புகளை மேற்கொள்ளும் வாய்ப்பு உருவாகும். தங்கநகைகள் உற்பத்தி, விற்பனையில் ஈடுபடும் தொழிலதிபர்கள் நன்மதிப்பும் பொருளாதார உயர்வும் பெறுவார்கள். பெண்கள் அரசுத்துறை மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் மேல் அதிகாரிகளின் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். திருமணம் ஆன பெண்கள் புத்திரதோஷம் அமைப்பிற்குள் வருவதால் உரிய முறையில் பரிகாரம் செய்து நிறைவான வகையில் சந்தாண பாக்கியம் அடையலாம். கலைத்துறையினர் தொழில் வாய்ப்புகள் பெற்று வருமானம் அதிகரித்து வீடு, மனை வாங்கும் யோகம் பெறுவார்கள். சினிமா, சின்னத்திரை, நாடகம், விளம்பர மாடலிங் துறைகளில் பணிபுரியும் கலைஞர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியத்தைப் பெறுவதில் கண்ணும் கருத்துமாக செயல்படுவர்.
அதிர்ஷ்டமான கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
திசைகள்: மேற்கு, வடமேற்கு, தென்மேற்கு
நிறங்கள்: பச்சை, வெளிர் நீலம்
எண்கள்: 5,6
பரிகாரம்: புதன்கிழமை அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 11 முறை வலம் வரவும்.
கடக ராசி வாசகர்களே
இந்த வாரம் குடும்பத்தில் ஒற்றுமை கூடும். அரசாங்க அதிகாரிகளின் அனுகூலம் கிடைக்கும். நிலம் தொடர்புடைய தொழில்களைச் செய்பவர்கள் லாபம் பெறுவார்கள். ஆன்மிக எண்ணங்கள் தோன்றும். எதிரிகள் மறைந்திருந்து கெடுதல் செய்வார்கள். கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள், அரசுத்துறைகளில் உயர்பதவியில் இருப்பவர்கள் குறுக்கீடுகளின் காரணமாக சோர்வு மனப்பான்மைக்கு ஆளாகி மீள்வார்கள். தொழில் ரீதியாக புதிய ஆலோசகர்கள் கிடைப்பார்கள். வாகனங்களில் செல்லும்போது கவனம் தேவை. அரசு, தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்களுக்கு மந்தநிலை ஏற்படும். கலைத்துறையினர் கடன் வாங்கி செலவழிக்கும் நிலை உண்டாகும். தொழில் ரீதியாக உங்களை புறந்தள்ள நட்புடன் பழகியவர்களே முயற்சி செய்வார்கள். கடின உழைப்பைக் கொண்டே முன்னேற முடியும். வெளியுலகப் பிரச்சினைகள் உங்களைத் துன்பப்படுத்தினாலும் குடும்பத்தினர் தகுந்த முறையில் ஆதரித்து உறுதுணையாக இருப்பார்கள். மாணவர்கள் சிறப்பான பலனைக் காணலாம். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும்.
அதிர்ஷ்டமான கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி
திசைகள்: வடக்கு, வடகிழக்கு
எண்கள்: 2,3,6
நிறங்கள்: வெள்ளை, ரோஸ்
பரிகாரம்: திங்கள்கிழமை அன்று அருகிலிருக்கும் அம்மன் ஆலயத்திற்கு சென்று எழுமிச்சை தீபம் ஏற்றவும்.
சிம்ம ராசி வாசகர்களே
இந்த வாரம் உங்களின் மனக்கவலைகள் மாறிவிடும். நல்லவர்களிள் உதவி உங்கள் மனதை மகிழ்விக்கும். நீங்கள் பேசும் ஒவ்வொரு பேச்சும் மற்றவர்களால் வேதவாக்காக ஏற்றுக்கொள்ளப்படும். ஆன்மிக உணர்வுடன் செய்த நற்செயல்கள் தகுந்த பலனைத் தரும். வீடு, மனை, வாகனங்கள் புதியவை வாங்கவும் இருப்பவற்றை சீர்திருத்தவும் வாய்ப்புகள் வந்து சேரும். குழந்தைகள் வகையில் செலவுகள் அதிகரிக்கும். அரசு,தனியார் துறையினருக்கு வேலை சார்ந்த பயணங்கள் உண்டு. மனத்தில் புதிய உற்சாகம் கிடைக்கும். பணவரவு நிகழும். வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும். அரசு, தனியார் துறைகளில் பணிபுரியும் பெண்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சேமித்த பணத்தை குடும்பத்தின் சுபச் செலவுகளுக்காக பயன்படுத்துவார்கள். கலைத்துறையினர் திறமையை நன்கு வளர்த்துக்கொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கை நடத்துவார்கள். மாயாஜால நிகழ்ச்சிகள் நடத்தும் கலைஞர்களுக்கு வரவேற்பு கிடைக்கும். அரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும். மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். கல்விக்கு உதவி கிடைக்கும்.
அதிர்ஷ்டமான கிழமைகள்: ஞாயிறு, வியாழன்
திசைகள்: கிழக்கு, தென்மேற்கு
எண்கள்: 1,3,9
நிறங்கள்: சிவப்பு, அடர் நீலம்
பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை அன்று அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று ஒன்பது முறை வலம் வரவும்.
கன்னி ராசி வாசகர்களே
இந்த வாரம் சுபகாரியச் செலவுகள் நிகழும். அலைச்சலான சூழ்நிலைகள் உண்டு. உங்கள் பேச்சும் செயலும் தெய்வாம்சம் பொருந்தியதாக இருக்கும். தைரியமான செயல்களைச் செய்து தகுந்த புகழை அடைவீர்கள். வீடு, மனை, வாகனங்களுக்கான பராமரிப்புச் செலவுகளை சிக்கலின்றி செய்யலாம். குழந்தைகள் வகையில் அனுகூலம் உண்டு. புதிய சிந்தனைகள் உருவாகும். வியாபாரிகள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். மனதில் நல்ல உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். அறச்செயல்கள் செய்வதில் மனம் ஈடுபாடு கொள்ளும். குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்களுக்கு நற்பலன்கள் ஏற்படும். சமூகத்திலும் உறவினர்களிடமும் நற்புகழ் கிடைக்கும். கலைத்துறையைச் சார்ந்தவர்கள் கூடுதலாக முயற்சிக்க வேண்டும். வெளியூர் பயணங்கள் வந்து சேரும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு செல்வாக்கில் சிறிது சரிவு ஏற்படலாம். அதே வேளையில் பதவியும், பொறுப்பும் வந்து சேரும். பணம் வந்த வழி தெரியாமல் செலவழியும். வீண் அலைச்சலும், வாக்குவாதமும் அவ்வப்போது வாட்டி வதைக்கும். மாணவர்கள் சிறப்பாகப் படிப்பார்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு
எண்கள்: 1,3,5
நிறங்கள்: பச்சை, மஞ்சள்
பரிகாரம்: புதன்கிழமை அன்று அருகிலிருக்கும் ஐயப்பன் அல்லது சாஸ்தா கோவிலுக்குச் சென்று நெய்தீபம் ஏற்றி வரவும்.