துலாம் ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 4-ல் புதனும் 6-ல் செவ்வாயும் 11-ல் ராகுவும் உலவுவது சிறப்பாகும். நண்பர்கள் உங்களுக்கு நலம் புரிவார்கள். மக்கள் நலம் கவனிப்பின்பேரில் சீராகும். நிலபுலங்கள் லாபம் தரும். புதிய சொத்துக்களும் பொருட்களும் வாங்குவீர்கள். மனத்தில் துணிவு அதிகமாகும். தன்னம்பிக்கையோடு செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். வழக்குகளிலும் போட்டி பந்தயங்களிலும் விளையாட்டுகளிலும் வெற்றி கிடைக்கும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள்.
சுப காரியங்களில் பங்கு கொள்ள வாய்ப்பு உண்டாகும். கணவன் மனைவி இடையே சில பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். செய் தொழிலில் அதிக கவனம் செலுத்தி வருவது நல்லது. அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். பயணத்தால் அனுகூலம் ஏற்படும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். தோல் பொருட்கள், பயணம் சார்ந்த வகையில் ஆதாயம் உண்டு. வியாபாரிகள் வளர்ச்சி காண்பார்கள். கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகுத் தொழில்கள் லாபம் தரும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. தாய் நலனிலும் வாழ்க்கைத்துணை நலனிலும் கவனம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 2, 3, 8 (பிற்பகல்).
திசைகள்: தென்மேற்கு, வடக்கு, தெற்கு.
நிறங்கள்: சாம்பல்நிறம், பச்சை, சிவப்பு.
எண்கள்: 4, 5, 9.
பரிகாரம்: விநாயகரையும் மகாலட்சுமியையும் வழிபடவும். ஏழைப் பெண்களுக்கு உதவி செய்யவும்.
விருச்சிக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும் 5-ல் சுக்கிரனும் 10-ல் ராகுவும் உலவுவது நல்லது. எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். மக்களால் உங்களுக்கும் உங்களால் மக்களுக்கும் நலம் உண்டாகும். குழந்தைகளின் முன்னேற்றத்தில் அக்கறை காட்டுவீர்கள். அரசாங்க உதவி கிடைக்கும். அரசுப்பணியாளர்களது நோக்கம் நிறைவேறும். முக்கியஸ்தர்களின் சந்திப்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். ஆடவர்களுக்குப் பெண்களாலும் மனைவியாலும் நலம் உண்டாகும். திரவப் பொருள் லாபம் தரும்.
புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்களின் சேர்க்கையையோ, அவற்றால் ஆதாயத்தையோ பெறுவீர்கள். பயணம் சார்ந்த இனங்கள் லாபம் தரும். நிர்வாகத்திறமை கூடும். தகவல் தொடர்பு இனங்கள் ஆக்கம் தரும். ஜன்ம ராசியில் சனியும் 3-ல் புதனும் 4-ல் கேதுவும் 12-ல் குருவும் உலவுவதால் அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். உடல் சோர்வு ஏற்படும். உடல் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். வியாபாரிகளும் தொழில் அதிபர்களும் விழிப்புடன் செயல்படுவது நல்லது. தாய் நலனில் அக்கறை தேவைப்படும். சிலர் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க வேண்டிவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 2, 3, 6.
திசைகள்: தென்மேற்கு, கிழக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: வெண்சாம்பல்நிறம், ஆரஞ்சு, இளநீலம், வெண்மை.
எண்கள்: 1, 4, 6.
பரிகாரம்: விநாயகரையும் ஆஞ்சநேயரையும் வழிபடவும். ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்யவும்.
தனுசு ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் 3-ல் கேதுவும் 4-ல் சுக்கிரனும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழும். விருந்துகளிலும் கேளிக்கை, உல்லாசங்களிலும் ஈடுபாடு கூடும். நண்பர்களும் உறவினர்களும் உதவிபுரிவார்கள். புதிய பொருட்சேர்க்கை நிகழும். நிலபுலங்கள் லாபம் தரும். சுகமும் சந்தோஷமும் கூடும். மக்களால் மனமகிழ்ச்சி பெருகும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ளச் சந்தர்ப்பம் உருவாகும். மந்திர உபதேசம் கிடைக்கும். வாக்கு வன்மை கூடும். மாணவர்களது நிலை உயரும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும்.
தியானம், யோகா, ஜோதிடம் போன்ற இனங்களைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். பொன்னும் பொருளும் சேரும். மகப்பேறு பாக்கியம் சிலருக்கு கிடைக்கும். மக்களால் முக்கியமான எண்ணங்கள் இப்போது நிறைவேறும். வெளிநாடு சென்று பொருள் திரட்டும் வாய்ப்பு சிலருக்கு கூடிவரும். திருமணம் ஆகாதவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பம் உருவாகும். திருமணமானவர்களுக்கு இல்வாழ்க்கை இன்பமயமானதாக அமையும். 12-ல் சனி இருப்பதை மறக்கலாகாது. வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. கண், காது, கால் தொடர்பான உபாதைகள் ஏற்படலாம். குருபலத்தால் சமாளிக்க முடியும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 2, 3, 6, 8 (பிற்பகல்).
திசைகள்: வடக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு.
நிறங்கள்: மெரூன், பச்சை, இளநீலம், வெண்மை, பொன் நிறம்.
எண்கள்: 3, 5, 6, 7.
பரிகாரம்: சனிப்பிரீதி செய்யவும். அனாதைகளுக்கும் வயது முதிர்ந்தவர்களுக்கும் கால் ஊனமுள்ளவர்களுக்கும் உதவி செய்யவும்.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாயும் சுக்கிரனும் 11-ல் சனியும் உலவுவது நல்லது. முன்னேற்றத்துக்கான தகவல் ஒன்று வந்து சேரும். எதிர்ப்புக்கள் விலகும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். நிலம், மனை, வீடு, வாகனம் சேரும். சொத்துகளால் வருவாயும் கிடைத்துவரும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கலைத்துறையினருக்கு வெற்றிகள் குவியும். மாதர்களது எண்ணம் ஈடேறும். துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பிரச்சினைகள் எளிதில் தீரும். மக்கள் நலம் கவனிப்பின்பேரில் சீராகும்.
உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைத்தே தீரும். பொது நலப்பணியாளர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும். இதர கிரகங்களின் சஞ்சாரம் அனுகூலமாக இல்லாததால் பேச்சில் கடுமை கூடாது. புதியவர்களை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகள் பொறுப்புடன் செயல்படுவது அவசியம். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. தலை சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். வீண் வம்பு, சண்டைகளைத் தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 2, 3, 6, 8 (பிற்பகல்).
திசைகள்: தென்கிழக்கு, தெற்கு, மேற்கு.
நிறங்கள்: நீலம், சிவப்பு, வெண்மை.
எண்கள்: 6, 8, 9.
பரிகாரம்: நாகரை வழிபடவும். சூரியனுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்யவும்.
கும்ப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும் 9-ல் குருவும் 10-ல் சனியும் உலவுவது நல்லது. பண நடமாட்டம் அதிகமாகும். கொடுக்கல் வாங்கல் இனங்கள் லாபம் தரும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிகழும். விருந்துகளிலும், உல்லாசங்களிலும் ஈடுபாடு அதிகரிக்கும். பேச்சில் திறமையும் இனிமையும் கூடும். அதே நேரத்தில் கண்டிப்பும் இருக்கும். தெய்வப் பணிகளிலும் தர்மப்பணிகளிலும் நாட்டம் கூடும். பொது நலப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள்.
பெற்றோரால் மக்களுக்கும் மக்களால் பெற்றோருக்கும் அனுகூலம் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு அதற்கான வாய்ப்புக் கூடிவரும். திருமணம் ஆனவர்களுக்கு இல்லறம் நல்லறமாய்த் திகழும். குடும்பத்தார் ஆதரவாக இருப்பார்கள். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் உத்தியோகஸ்தர்களுக்கும் அனுகூலமான போக்கு நிலவிவரும். சூரியன், புதன், ராகு, கேது அனுகூலமாக இல்லாததால் கண் உபத்திரவம் ஏற்படும். புதியவர்களிடம் எச்சரிக்கை தேவை. வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தவும். கோபத்தைக் குறைத்துக் கொள்ளவும். அரசுப்பணிகளில் விழிப்புத் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 2, 3, 6, 8 (பிற்பகல்).
திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு, மேற்கு.
நிறங்கள்: நீலம், வெண்மை, பொன் நிறம்.
எண்கள்: 3, 6, 8.
பரிகாரம்: ஆதித்தனையும் மகாவிஷ்ணுவையும் வழிபடவும். நாகரைத் தொடர்ந்து பூஜிப்பது நல்லது.
மீன ராசி வாசகர்களே
உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும் 6-ல் ராகுவும் 11-ல் சூரியனும் புதனும் உலவுவது நல்லது. புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். கலைத்துறையினருக்கு வாய்ப்புகள் கூடிவரும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். தோற்றப்பொலிவு கூடும். திரவப் பொருட்கள் லாபம தரும். பயணத்தின் மூலம் முக்கியமான காரியங்கள் நிறைவேறும். புதிய பதவிகளும் பட்டங்களும் சிலருக்கு கிடைக்கும். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் கைகூடும்.
நண்பர்களும் உறவினர்களும் உதவி புரிவார்கள். அரசுப் பணிகள் நிறைவேறும். நிறுவன, நிர்வாகத்துறையினருக்கு அனுகூலமான போக்கு தென்படும். கணவரால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் நலம் உண்டாகும். கூட்டுத் தொழில் லாபம் தரும். எதிரிகள் அடங்குவார்கள். குரு 8-ல் இருப்பதால் உத்தியோகஸ்தர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஆன்மிகவாதிகளுக்கும் பொருளாதாரம் சம்பந்தமான இனங்களைச் சார்ந்தவர்களுக்கும் பிரச்னைகள் சூழும். காரியத்தில் அதிக கவனம் தேவை. விரும்பத்தகாத இடமாற்றம் சிலருக்கு ஏற்படும். ஜன்ம ராசியில் செவ்வாய் இருப்பதால் எக்காரியத்திலும் பதற்றம் கூடாது. நிதானம் அவசியம் தேவை. உடல் நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: பிப்ரவரி 2, 3, 6, 8 (பிற்பகல்).
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: புகைநிறம், ஆரஞ்சு, இளநீலம், பச்சை.
எண்கள்: 1, 4, 5, 6.
பரிகாரம்: குருவுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது. வேத விற்பன்னர்களுக்கு உதவி செய்யவும்.