அப்போது இஸ்ரேல் தேசம் முழுவதும் இயேசு பயணம் மேற்கொண்டி ருந்தார். பயணத்தின்போது நோயுற்றவர்களை அவர் குணப்படுத்துகிறார். இந்த அற்புதங்களைப் பற்றிய செய்தி சுற்றியுள்ள எல்லா கிராமங்களுக்கும் பரவுகிறது. அதனால் கண் தெரியாதவர்கள், காது கேட்காதவர்கள், ஊன முள்ளவர்கள், நோய்வாய்ப் பட்டவர்கள் என ஏராளமானோர் இயேசுவைக் காண வருகிறார்கள். அவர்கள் எல்லோரையும் இயேசு குணப்படுத்துகிறார்.
ஒரு சமயம் ஓய்வு நாளன்று இயேசு கற்பித்துக் கொண்டி ருக்கிறார். ஓய்வுநாள் என்பது யூதர்கள் ஓய்வெடுக்கும் நாள். அப்போது கூன் விழுந்த பெண் ஒருவர் இயேசுவைப் பார்க்க வருகிறார்.
"18 ஆண்டுகளாக கூன் விழுந்து நிமிர்ந்து நிற்க முடியாமல் கஷ்டப்படுகிறேன். என் மீது கருணைக் காட்டுங்கள்" என்கிறாள் அந்தப் பெண். உடனே இயேசு தன் கைகளை அவள் மேல் வைக்கிறார். உடனடியாக அவள் நிமிர்ந்து நிற்கத் தொடங்குகிறாள். ஆம், அவள் சுகமடைந்து விடுகிறாள்!
இதைப் பார்த்த அந்த மதத் தலைவர்களுக்குப் பயங்கர கோபம். அவர்களில் ஒருவர், "நாம் வேலை செய்வதற்கு ஆறு நாட்கள் இருக்கின்றன. அந்த நாட்களில்தான் குணப்படுத்த வேண்டும், ஓய்வு நாளில் அல்ல" என்று கூட்டத்தைப் பார்த்து சத்தம் போடுகிறார்.
அதற்கு இயேசு, "ஓய்வு நாளில் நீங்கள் யாருமே உங்கள் கழுதையை அவிழ்த்துக் கொண்டுபோய் அதற்குத் தண்ணீர் காட்ட மாட்டீர்களா? அப்படியிருக்கும்போது, 18 ஆண்டுகளாக நோயுற்றிருக்கிற இந்த ஏழைப் பெண்ணை ஓய்வுநாளில் சுகப்படுத்தக் கூடாதா?’ என்று கேட்கிறார். இதைக் கேட்டதும் சத்தம் எழுப்பிய நபர் தலைகுனிந்தார்.
ஜெருசலமுக்குக் செல்லும் வழியில் கண் பார்வை இல்லாத இரு பிச்சைக்காரர் கள் இயேசு வருவது பற்றி அறிந்து அவரிடம் செல்கிறார் கள். கூட்டத்திற்கு மத்தியில் "இயேசுவே எங்களுக்கு உதவி செய்யும்" என்று சப்தமாகக் குரல் எழுப்புகிறார்கள்.
இயேசு அவர்களை அழைத்து, "நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்கிறார். அதற்கு அவர்கள், "கர்த்தரே, எங்கள் கண்களை திறக்கும்படி செய்யும்" என்றனர். இயேசு அவர்களுடைய கண்களைத் தொடுகிறார், உடனடியாக அவர்களுக்குப் பார்வை கிடைக்கிறது.
இயேசு ஏன் இந்த அற்புதங் களைச் செய்கிறார் என்று உங்களுக்குத் தெரியுமா? ஏனென்றால் அவர் மக்களை நேசிக்கிறார், தம்மீது அவர்கள் விசுவாசம் வைக்க வேண்டு மென்று விரும்புகிறார். அதனால் அவர் ராஜாவாக ஆட்சி செய்யுwம் போது, பூமி யில் யாருக்குமே எந்த நோயும் வராதென்று நாம் நிம்மதியாக இருக்கலாம்.