லண்டனில் உள்ள வெஸ்ட் ஈலிங் பகுதியில் நடந்த ஆடித் தேரோட்டத்தில், ஐரோப்பாவெங்கும் குடியேறி வாழும் 10 ஆயிரம் தமிழ் மக்கள் பக்திப் பரவசத்துடன் திரண்டனர். லண்டனில் தமிழர்கள் இணைந்து கொண்டாடும் மிகப் பெரிய நிகழ்ச்சிகளில் ஒன்று ஆடித் தேரோட்டமாகும். லண்டனில் உள்ள ஸ்ரீகனகதுர்க்கை அம்மன் ஆலயம் சார்பாக இத்தேரோட்டம் நடைபெற்றது. பால்குடம் ஏந்திய பெண்கள், நாக்கில் வேல் குத்திய ஆண்கள் எனப் பெரும் கூட்டத்தை ஐரோப்பிய வீதியில் பார்ப்பது தமிழ்நாட்டை நினைவுபடுத்துவதாக, பங்கேற்ற பக்தர்கள் குறிப்பிட்டனர்.