மேஷம்
உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் 12-ல் சுக்கிரனும் உலவுவதால் பேச்சாற்றல் கூடும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உறுதுணையாய் இருப்பார்கள். கடன் கிடைக்கும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். அக்கம்பக்கம் உள்ளவர்களால் நலம் உண்டாகும். வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வீர்கள். மக்களால் அளவோடு நலம் உண்டாகும்.
இயந்திரப்பணியாளர்களுக்கும் இன் ஜினீயர்களுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். கலைஞர்கள் வெற்றிப்படிகளில் ஏறுவார்கள். மாதர்களது எண்ணம் நிறைவேறும். மாணவர்களது திறமை பளிச்சிடும். 10-ம் தேதி முதல் செவ்வாய் வக்கிர நிவர்த்தி பெறுவதால் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். நிலபுலங்கள் லாபம் தரும். வாரப் பின்பகுதியில் சந்திரன் 7-ம் இடம் மாறி, வக்கிர சனியோடும் ராகுவோடும் கூடுவதால் கூட்டாளிகளாலும், வாழ்க்கைத் துணைவராலும் சிறுசிறு பிரச்னைகள் ஏற்பட்டு விலகும்.
l அதிர்ஷ்டமான தேதிகள்: ,மே 11, 12. l திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, கிழக்கு.
நிறங்கள்: வெண்மை, பச்சை, சிவப்பு. l எண்கள்: 1, 5, 6, 9.
பரிகாரம்: பெரியவர்களின் ஆலோசனைகளைப் பெற்று, அதன்படி செயல்படுவது நல்லது. கெட்டவர்களின் தொடர்பு அடியோடு கூடாது. குரு, ராகு, கேது ஆகியோருக்குப் பிரீதி செய்வது அவசியமாகும்.
ரிஷபம்
உங்கள் ராசிக்கு 2-ல் குருவும், 6-ல் ராகுவும் 11-ல் ராசிநாதன் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். நண்பர்கள், உறவினர்களது வருகை மனத்துக்கு மகிழ்ச்சி தரும். புதிய சொத்துக்களும் பொருட்களும் சேரும். மக்களால் ஓரிரு எண்ணங்கள் நிறைவேறும். 5-ல் வக்கிர செவ்வாயும், 6-ல் வக்கிர சனியும் இருப்பதால் சில இடர்பாடுகளும் ஏற்படும். கர்ப்பிணிப் பெண்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் வர்த்தகம் லாபம் தரும். பயணத்தின் மூலம் ஆதாயம் கிடைக்கும். குடும்ப நலம் சீராகும். சினிமா, நாடகம், நாட்டியம் போன்ற கலைத் துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை உருவாகும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். வாழ்க்கைத் துணைவரால் நலம் உண்டாகும். கூட்டாளிகள் ஒத்துழைப்பார்கள்.
l அதிர்ஷ்டமான தேதிகள்: மே 11, 12, 14. l திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: பொன் நிறம், புகை நிறம், வெண்மை, இளநீலம். l எண்கள்: 3, 4, 6.
பரிகாரம்: சூரியனை வழிபடவும். சுப்பிரமணிய புஜங்கம், கந்தசஷ்டி கவசம் படிப்பது நல்லது.
மிதுனம்
உங்கள் ஜன்ம ராசிக்கு லாப ஸ்தானத்தில் சூரியனும் கேதுவும் உலவுவது சிறப்பாகும். வெற்றி வாய்ப்புகள் தேடிவரும். நண்பர்கள், உறவினர்களால் ஓரளவு நலம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கும் அரசுப் பணியாளர்களுக்கும் நிர்வாகத் துறையினருக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். முக்கியஸ்தர்களும் மேலதிகாரிகளும் உங்கள் நலனில் அக்கறைக் காட்டுவார்கள். உயர்பதவி, பட்டங்கள் தேடி வரும்.
ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மதிப்பு உயரும். மக்களால் நல்லதும் அல்லாததும் கலந்தவாறு பலன்கள் உண்டாகும். 5-ல் வக்கிர சனியும் ராகுவும் இருப்பதால் வயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்பட்டு விலகும். புதன் 12-ல் இருப்பதால் வியாபாரிகள் விழிப்புடன் செயல்பட்டால் நஷ்டப்படாமல் தப்பலாம். தாயாராலும், தாய் வழி உறவினர்களாலும் பிரச்சினைகள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது.
l அதிர்ஷ்டமான தேதிகள்: மே 11, 12, 14. l திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, இளநீலம், வெண்மை, மெரூன். l எண்கள்: 1, 6, 7.
பரிகாரம்: ‘ஓம் நமோ நாராயணா' என்று தினமும் 108 முறை சொல்வது நல்லது. ஏழை மாணவர்கள் கல்வி பயில உதவி செய்யவும்.
கடகம்
3-ல் வக்கிர செவ்வாயும், 4-ல் வக்கிர சனியும், 9-ல் சுக்கிரனும், 10-ல் சூரியன், கேது ஆகியோரும் 11-ல் புதனும் சஞ்சரிப்பதால் வாக்கு வன்மை கூடும். குடும்ப நலம் சிறக்கும். பண வரவு அதிகமாகும். துணிச்சலான காரியங்களில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். போட்டிகளிலும், வழக்குகளிலும் வெற்றி கிட்டும். நிலபுலங்கள் சேரும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். மாதர்கள் நிலை உயரும்.
மாணவர்களது நோக்கம் நிறைவேறும். உடன்பிறந்தவர்களாலும், நண்பர்களாலும், உறவினர்களாலும் அனுகூலம் உண்டாகும். கணவன், மனைவி உறவு நிலை திருப்தி தரும். கலைஞர்கள் சுபிட்சம் காண்பார்கள். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். அலைச்சல் வீண்போகாது. சுப காரியங்களுக்காகச் செலவு இருக்கும். 10-ம் தேதி முதல் செவ்வாய் வக்கிர நிவர்த்தி பெறுவதால் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: மே 11, 12, 14. l திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடக்கு, தெற்கு.
நிறங்கள்: மெரூன், சிவப்பு, வெண்மை, ஆரஞ்சு. l எண்கள்: 1, 5, 6, 7, 9.
பரிகாரம்: வேதம் படித்தவர்களுக்கு உதவி செய்யவும். துர்கை அம்மனை வழிபடவும்.
சிம்மம்
உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும், 8-ல் சுக்கிரனும், 9-ல் சூரியனும், 10-ல் புதனும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். அந்நியர்களால் நலம் உண்டாகும். செல்வாக்கும் மதிப்பும் உயரும். உடல்நலம் சீராகும். நல்ல இடத்துக்கு மாற்றம் கிடைக்கும். பயணத்தால் முக்கியமான எண்ணம் நிறைவேறும். ஏற்றுமதி-இறக்குமதி இனங்கள் லாபம் தரும். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
மாதர்கள் நிலை உயரும். அரசு விவகாரங்களில் திருப்பம் உண்டாகும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள். பொன்னும் பொருளும் சேரும். உடன்பிறந்தவர்கள் ஓரளவு உதவுவார்கள். மக்களால் மன மகிழ்ச்சி உண்டாகும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். 2-ல் செவ்வாயும் 3-ல் வக்கிர சனியும் உலவுவதால் குடும்பத்தில் சிறுசிறு சச்சரவுகள் ஏற்பட்டு விலகும்.
l அதிர்ஷ்டமான தேதிகள்: மே 11, 12, 14. l திசைகள்: தென்மேற்கு, கிழக்கு, வடகிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: பொன் நிறம், ஆரஞ்சு, புகை நிறம், பச்சை, இளநீலம். l எண்கள்: 1, 3, 4, 5, 6.
பரிகாரம்: விநாயகருக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.
கன்னி
கோசாரப்படி கிரக நிலை சிறப்பாக இல்லை. அவசரப்படாமல் நிதானமாக யோசித்து செயல் படுவது நல்லது. வீண் வம்பு, வழக்குகளைத் தவிர்க்கவும். இயந்திரம், எரிபொருள், மின்சாதனம், வெடிபொருள் ஆகியவற்றின் பக்கம் நெருங்கும்போது எச்சரிக்கை தேவை. குடும்ப நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு அவசியம். பொருளாதார நிலை சாதாரணமாகவே காணப்படும். கடன் வாங்கவும் நேரலாம். வாரப் பின்பகுதியில் பண வரவு சற்று அதிகரிக்கும்.
தெய்வப் பணிகளிலும், தர்மப் பணிகளிலும் ஈடுபாடு உள்ளவர்களுக்கு மனத் தெளிவு பிறக்கும். ஜனன கால ஜாதகப்படி தற்சமயம் யோக பலம் உள்ள தசை, புக்தி, அந்தரங்கள் நடைபெறுமானால் கவலைப்படத் தேவையில்லை. ஜாதக பலம் இல்லாதவர்கள் இறை வழிபாட்டில் நம்பிக்கையுடன் ஈடுபடுவது நல்லது.
l அதிர்ஷ்டமான தேதிகள்: மே 11, 12, 14. l திசை: வடக்கு.
நிறம்: வெண்மை, பச்சை, பிரெளன், ரோஸ். l எண்: 5.
பரிகாரம்: நவக்கிரக ஜப, ஹோமம் செய்வது நல்லது. அல்லது ஹோமம் நடக்கும் இடம் சென்று ஹோமத்துக்குத் தேவையான திரவியங்களைக் கொடுத்து, அதில் கலந்துகொள்ளலாம்.