ஆன்மிகம்

ஆஸ்திரேலியாவில் தைப்பொங்கல் கொண்டாட்டம்

செய்திப்பிரிவு

ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி முருகன் கோவிலில் நேற்று முன்நாள் தைப்பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி சிட்னி மாநகரில் உள்ள Mays Hill எனும் இடத்தில் உள்ள முருகன் கோவிலில் நேற்று முன்நாள் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.

முன்னதாக, காலை 5:30 மணிக்கு மூலவர் முருகனுக்கான அபிஷேகத்தினைத் தொடர்ந்து கோபுர வாசலில் பொங்கல் பானை வைக்கப்பட்டது.

காலைப் பூஜையினைத் தொடர்ந்து 7:15 மணிக்கு சூரிய பூஜை நடைபெற்றது. கூட்டு வழிபாட்டிற்குபின், மதியம் 12:00 மணிக்கு உச்சிக்காலப் பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இலங்கை, இந்தியா, சிங்கப்பூர், பிஜி மற்றும் மலேசிய நாட்டு வாழ் இந்துக்கள் ஆயிரக்கணக்கனோர் இக்கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

சிட்னி மாநகரில் இருந்து Mays Hill 24 கி.மீ தொலைவில் உள்ளது.

SCROLL FOR NEXT