ஆன்மிகம்

வேலுண்டு... 
வினை இல்லை..

ராஜேஸ்வரி ஐயர்

தமிழர்கள் தமிழகத்தில் `வேலை’ வைத்து கும்பிட்டு வந்தனர். இந்த பூசாரிக்குதான் வேலன் என்று பெயர் – வேலை பூஜிப்பவன் வேலன். இந்த வேலுக்கு கோவில் என்று இல்லாமல், வேலை மண்ணில் ஊன்றும் இடமெல்லாம், போற்றுதல் இருந்தது. 


சோழ, பல்லவ ராஜாக்களிடம், தமது சமஸ்கிருத புலமையால் வட தேசத்திலிருந்து வந்தவர்கள் முருகனுக்கான கோயில் கட்டுவது குறித்த தகவல்களை அளிக்க, முருகனுக்கு கோயில்கள் எழத் தொடங்கியது. இது வட நாட்டில் வழிபாட்டில் இருந்த ஷண்முகன் (ஆறுமுகம்) உருவமே.

இக்கோயிலின் வாயிலில் வேலை நட்டு, பலி கொடுத்து வந்தார்கள் குறவர் குலத்தைச் சேர்ந்தவர்கள். இவர்கள் தனியே வேலைக் கும்பிட்டதால், முருகனின் சிலா ரூபத்தில் ஒட்டியபடி வேல் அமைக்கும் வழக்கம் இல்லை. வேல் தனியாகத்தான் சாற்றி வைக்கப்படும். திருச்செந்தூரில்கூட வேல் சாற்றித்தான் வைக்கப்படுகிறதே தவிர, சிலா ரூபத்துடன் ஒட்டி அமைக்கப்படவில்லை. இதற்கு காரணம் சிலா ரூபமும், வேலும் இணைந்தால் ஏற்படும் அபரிமிதமான சக்தியைப் பூஜிக்கக் கூடிய வழி அறிந்திருக்கப்படவில்லை என்றார் சிற்பக்கலை ஆய்வாளர் முனைவர் ஹரிப்பிரியா ரங்கராஜன். 


முருகன் வடிவங்கள் குறித்த ஆய்வுசெய்து நூல்கள் வெளியிட்டுள்ள வளையப்பேட்டை ரா. கிருஷ்ணனிடம் கேட்டபோது, திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னதியில் கல் விக்கிரத்தில் தண்டம் என்ற ஆயுதம் கிடையாது. வலது கையில் வேலும், இடது கையில் சேவலும் உண்டு. இத்தகைய அமைப்பு தமிழகத்தில் வேறு எங்கும் கிடையாது. அருணகிரிநாதர் காலத்திற்குப் பின்னர் முருகனுடைய இந்த அமைப்பு தமிழகம் முழுவதும் பரவத் தொடங்கியது என்றார்.

SCROLL FOR NEXT