ஆன்மிகம்

ஞானம் என்பது என்ன?

செய்திப்பிரிவு

ஒரு பெரிய பண்டிதர் ஆன்மீக குரு ஒருவரை தேடி வந்தார்.

“நீங்கள் நூல்களில் இல்லாத பெரிய விஷயங்களைக்கூடக் காட்டிக் கொடுக்கிறீர்களாமே?”

குரு புன்னகைத்தார்.

பண்டிதர் விடவில்லை.

“எனக்கு நீங்கள் கட்டாயமாக ஏதேனும் காட்டிக் கொடுக்க வேண்டும்.”

“சரி, இப்போது மழைக் காலமில்லையா? இன்று மழை வரும் போல இருக்கிறது. மழை பெய்யும்போது மைதானத்தில் சென்று கைகளை உயர தூக்கிக் கொண்டு நில். ஏதேனும் புரியலாம்.”

அடுத்த நாள் பண்டிதர் வெகு கோபமாக வந்தார்.

“என்ன ஆயிற்று?”

“நீங்கள் சொன்னதுபோல மழையில் நேற்று மாலை நின்றேன்.”

“ம்?”

“முழுக்க நனைந்து போனேன். எல்லாரும் சிரித்தார்கள். நான் என்னை ஒரு பெரிய முட்டாளாக உணர்ந்தேன்!”

“பரவாயில்லையே? முதல் நாளே பெரிய விஷயம் புரிந்துவிட்டதே!”

(http://anmikam4dumbme.blogspot.in தளத்தில் கதைகள் தவிர, பதஞ்சலி யோக சூத்திரம், பக்தி, ஞானம் ஆகிய பல அம்சங்களும் எளிமையாகவும் விரிவாகவும் தரப்பட்டுள்ளன. கதைகளை மட்டும் தனி நூலாக இங்கிருந்து இலவசமாகத் தரவிறக்கிக்கொள்ளலாம் http://freetamilebooks.com/ebooks/philosophical-stories/)

SCROLL FOR NEXT