சென்னை நெசப்பாக்கத்தில் அருள்மிகு வரசித்தி விநாயகர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் 30.06.17 வெள்ளிக்கிழமையன்று நடைபெறவுள்ளது. நூற்றாண்டு பழமை வாய்ந்த திருக்கோயில் இது. இத்திருக்கோயில் முழுமையாகப் புனரமைக்கப்பட்டுப் புதிய ஐந்து நிலை ராஜ கோபுரம், கொடி மரம், மகாமண்டபம் கருங்கற்களால் ஆன மூன்று நிலையுடைய கருவறை விமானம், ஸ்ரீவள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீதட்சிணாமூர்த்தி, ஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர், ஸ்ரீகனகதுர்கை, ஸ்ரீபக்த ஆஞ்சநேயர், ஸ்ரீசண்டிகேஸ்வரர் மற்றும் ஸ்ரீநாகர் ஆகிய சன்னிதிகளுக்குத் திருப்பணிகள் நிறைவு பெற்று மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.