ஆன்மிகம்

வார ராசிபலன் 28-04-2016 முதல் 04-05-2016 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

சந்திரசேகர பாரதி

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும் 5-ல் குருவும், 11-ல் கேதுவும் சஞ்சரிப்பதால் புனிதமான காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரால் பிள்ளைகளுக்கும் பிள்ளைகளால் பெற்றோருக்கும் அனுகூலம் உண்டாகும். புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். நண்பர்கள் உதவுவார்கள். காரியத்தில் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை உயரும். ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடிவரும். ஆன்மிக, அறநிலையப் பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். புதிய பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். அரசாங்கத்தாரால் எதிர்பார்த்திருந்த காரியம் இப்போது நிறைவேறும். வியாபாரிகள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. இயந்திரப் பணியாளர்களுக்கும் இன்ஜினீயர்களுக்கும் முன்னேற்றம் தடைபடும். வாரக் கடைசியில் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் தேவை. உடன்பிறந்தவர்களால் மன அமைதி குறையும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 29, மே 2.

திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு, வடகிழக்கு.

‎நிறங்கள்: மெரூன், வெண்மை, பொன் நிறம்.

எண்கள்: 1, 3, 6, 7. ‎

பரிகாரம்: ஏழை மாணவர்களுக்கு உதவுவது நல்லது.

ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 10-ல் கேது, 12-ல் சுக்கிரன் உலவுவதால் அளவோடு நலம் உண்டாகும். எதிலும் விசேஷமான நன்மைகளை எதிர்பார்க்க இயலாமல் போகும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. நல்லவர்களின் நட்புறவை வலுப்படுத்திக்கொண்டு அவர்களது ஆலோசனைகளின்படி செயல்பட்டால் சங்கடங்களிலிருந்து தப்பலாம். அரசு விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. கண், கால், பாதம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கலைத் துறையினருக்கு நலம் உண்டாகும். புதிய துறைகளில் முதலீடு செய்ய இந்த நேரம் சிறப்பானதாகாது. கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. இடமாற்றம், நிலை மாற்றம் ஏற்படும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிக்கவும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 29, மே 2, 4 (முற்பகல்).

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம்.

எண்கள்: 6, 7.

பரிகாரம்: துர்க்கை, காளிக்கு நெய் விளக்கேற்றி வழிபடவும்.

மிதுன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும், 6-ல் செவ்வாயும், சனியும், 11-ல் சூரியனும் புதனும் சுக்கிரனும் உலவுவது சிறப்பு. நல்லவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கூட்டுத் தொழில் லாபம் தரும். கணவரால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் நலம் உண்டாகும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிறுவன, நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்கள் ஏற்றம் பெறுவார்கள். ஒன்றுக்கும் மேற்பட்ட தொழிலால் ஆதாயம் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். மனதில் துணிவு கூடும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். பிள்ளைகளால் முக்கியமான எண்ணம் நிறைவேறும். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. வாரப் பின்பகுதியில் ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். திரவப் பொருட்களால் வருவாய் கிடைக்கும். கலைத் துறையினருக்குத் திறமைக்குரிய வளர்ச்சி தெரியவரும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 2, 4 (முற்பகல்).

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடக்கு, கிழக்கு.

நிறங்கள்: கறுப்பு, பச்சை, வெண்மை, ஆரஞ்சு .

எண்கள்: 1, 4, 5, 6, 9.

பரிகாரம்:

கணபதி ஜப, ஹோமம் செய்வது நல்லது.

கடக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும், 5-ல் செவ்வாயும், 10-ல் சூரியனும், புதனும் சஞ்சரிப்பது சிறப்பு. எதிர்ப்புகள் கட்டுக்குள் அடங்கி இருக்கும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். செய்துவரும் தொழில் விருத்தி அடையும். புதிய பதவிகளும் பட்டங்களும் தேடிவரும். அரசியல்வாதிகள், அரசுப் பணியாளர்களுக்கு நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். பணப் புழக்கம் அதிகமாகும். மருத்துவம், ரசாயனம், விஞ்ஞானம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். வாரக் கடைசியில் தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். தொலைதூரத் தொடர்பால் அனுகூலம் உண்டாகும். 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் இருப்பதால் சிறுசிறு இடர்ப்பாடுகள் அவ்வப்போது ஏற்படும். விஷ பயம் உண்டாகும். இரவு நேரத்தில் வெளியே செல்லும்போது பாதுகாப்பு தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 29, மே 4 (முற்பகல்).

திசைகள்: வடகிழக்கு, தெற்கு, கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: பொன் நிறம், ஆரஞ்சு, சிவப்பு.

எண்கள்: 1, 3, 5, 9.

பரிகாரம்:

நாக வழிபாடு செய்து வருவது நல்லது.

சிம்ம ராசி வாசகர்களே

உங்கள் ராசிநாதன் சூரியன் 9-ல் தன் உச்ச ராசியில் உலவுவதாலும், சுக்கிரன் அனுகூலமாக இருப்பதாலும் நலம் உண்டாகும். செவ்வாயும் தன் சொந்த வீட்டில் இருப்பதால் நலம் புரிவார். மனத்துக்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் இடம்பெறும். எதிரிகள் அடங்குவார்கள். கணவன்-மனைவி உறவு நிலை சீராகும். முக்கியமான பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். அரசியல்வாதிகளுக்கு மதிப்பு உயரும். அரசுப் பணியாளர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். தர்ம குணம் வெளிபடும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். நிலபுலங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். ஜன்ம ராசியில் ராகுவும், வக்கிர குருவும், 4-ல் சனியும், 7-ல் கேதுவும் இருப்பதால் உடல் நலம் ஒரு நாள் போல் மறுநாள் இராது. அலைச்சலால் உடல் சோர்வு ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 29, மே 2.

திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: சிவப்பு, இளநீலம், வெண்மை.

எண்கள்: 1, 6, 9.

பரிகாரம்: துர்க்கை, விநாயகரைத் தொடர்ந்து வழிபடவும்.

கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாயும் சனியும், 6-ல் கேதுவும், 8-ல் புதனும் சுக்கிரனும் உலவுவது நல்லது. குரு 12-ல் இருந்தாலும் வக்கிரமாக இருப்பதால் நலம் புரிவார். நண்பர்கள், உறவினர்களது தொடர்பால் நலம் உண்டாகும். புதிய சொத்துகள் சேரும். சொத்துகள் மூலம் ஆதாயம் கிடைக்கும். எதிரிகளின் கரம் வலுக் குறையும். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். ஜாதக பலம் உள்ளவர்களுக்கு வழக்கில் வெற்றி பெறவும் வாய்ப்புக் கூடிவரும். ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். பொருளாதார நிலையில் வளர்ச்சி காணலாம். ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடிவரும். மறைந்த பொருள் கிடைக்கும். 8-ல் சூரியனும், 12-ல் ராகுவும் இருப்பதால் உஷ்ணாதிக்கத்தால் உடல்நலம் பாதிக்கப்பட நேரலாம். கவனம் தேவை. பயணம் சார்ந்த இனங்களில் விழிப்புத் தேவை. கண் உபாதை ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 29, மே 2, 4 (முற்பகல்).

திசைகள்: வடக்கு, வடமேற்கு, தெற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: பச்சை, மெரூன், இளநீலம்.

எண்கள்: 5, 6, 7, 9.

பரிகாரம்:

ஆதித்ய ஹ்ருதயம் படிக்கவும்.

SCROLL FOR NEXT