துலாம் ராசி வாசகர்களே
சூரியன், குரு, ராகு ஆகியோர் சாதகமாக உலவுகிறார்கள். ராசிநாதன் சுக்கிரன் 6-ல் இருப்பது சிறப்பாகாது. உடல் நலனில் கவனம் தேவை. வீண்வம்பு, வழக்குகளைத் தவிர்க்கவும். பிள்ளைகளால் மன அமைதி குறையும். வாழ்க்கைத்துணைவரால் செலவுகள் கூடும். குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் உண்டாகும். பக்குவமாகப் பேசிச் சமாளிப்பது நல்லது. அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத் துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். பொருளாதார நிலை சீராகவே இருந்துவரும்.
தெய்வப்பணிகளும் தர்மப்பணிகளிலும் ஈடுபாடு கூடும். பயணம் சார்ந்த இனங்கள் லாபம் தரும். அரசுப் பணியாளர்களது நிலை உயரும். புதிய பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஓரளவு உதவுவார்கள். எதிர்ப்புகள் கட்டுக்குள் அடங்கி இருக்கும். அயல்நாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் விருத்தி அடையும். வாரக் கடைசியில் புனிதமான காரியங்களில் கலந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 7, 12.
திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, கிழக்கு.
நிறங்கள்: சாம்பல் நிறம், ஆரஞ்சு, பொன் நிறம்.
எண்கள்: 1, 3, 4.
பரிகாரம்: விநாயகர், மகாலட்சுமியை வழிபடுவது நல்லது.
விருச்சிக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு அதிபதி செவ்வாய் ராசியிலேயே உலவுவது நல்லது. சூரியனும் குருவும் பரிவர்த்தனை பெற்றிருப்பதும் சிறப்பு. புதன், சுக்கிரன், ராகு ஆகியோர் அனுகூலமாக உலவுகிறார்கள். முக்கியமான எண்ணங்கள் நிறைவேறும். பண வரவு கூடும். கலைஞர்கள் சுபிட்சம் காண்பார்கள். பெண்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் நலம் உண்டாகும்.
வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் வளர்ச்சி காண்பார்கள். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். பிள்ளைகளால் நலம் உண்டாகும். கணவன் மனைவி உறவுநிலை சீராக இருந்துவரும். ஜன்ம ராசியில் சனியும், 4-ல் கேதுவும் இருப்பதால் உங்கள் நலனிலும் தாய் நலனிலும் கவனம் தேவை. சொத்துகள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புடன் இருக்கவும். வாரப்பின்பகுதியில் சிறு சங்கடம் ஏற்படும். மனதில் ஏதேனும் சலனம் உண்டாகும். வீண் விவகாரங்களில் ஈடுபட வேண்டாம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 7, 11.
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: வெண்சாம்பல் நிறம், இளநீலம், சிவப்பு.
எண்கள்: 1, 3, 4, 5, 6.
பரிகாரம்: ஆஞ்சநேயர், விநாயகரை வழிபடுவது நல்லது.
தனுசு ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 4-ல் சுக்கிரன், 9-ல் குரு உலவுவது சிறப்பு. மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு உண்டாகும். நண்பர்கள், உறவினர்களால் அளவோடு நலம் ஏற்படும். கலைஞர்களுக்கு வெற்றிகள் குவியும். பெண்களின் நிலைமையில் வளர்ச்சி தெரியவரும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்கள் ஆகியவற்றின் சேர்க்கையோ, ஆதாயமோ கிடைக்கும். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு கூடும்.
எதிர்ப்புகள் கட்டுக்குள் அடங்கியே இருக்கும். கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். கூட்டுத் தொழிலில் வளர்ச்சி காணலாம். உத்தியோகஸ்தர்களது நோக்கம் நிறைவேறும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும். இயந்திரப்பணியாளர்களும் இஞ்சினீயர்களும் பொறுப்புடன் காரியமாற்றுவது நல்லது. கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 7, 11.
திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு.
நிறங்கள்: வெண்மை, மெரூன், ஆரஞ்சு.
எண்கள்: 3, 6, 7.
பரிகாரம்: சுப்பிரமணியரை வழிபடவும்.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியன்; சுக்கிரன், 4-ல் புதன், 11-ல் செவ்வாய்; சனி உலவுவது விசேஷம். முன்னேற்றத்துக்கான நல்ல தகவல் வந்து சேரும். மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எதிரிகள் விலகிப் போவார்கள். வழக்கு, போட்டி, விளையாட்டுகளில் வெற்றி கிடைக்கும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத் திறமை பளிச்சிடும். கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். மாணவர்களது நிலை உயரும். பொறியியல், சட்டம், காவல், ராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள்.
நிலபுலங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ பெறுவீர்கள். 2-ல் கேது, 8-ல் ராகு உலவுவதால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. பயணத்தால் சிறு சங்கடம் ஏற்படும். வீண்வம்பு வேண்டாம். கணிதம், விஞ்ஞானம், வியாபாரம், எழுத்து, பத்திரிகை போன்ற தொழிலால் அதிக வருவாய் கிடைக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 7, 11.
திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, தெற்கு, வடக்கு.
நிறங்கள்: நீலம், சிவப்பு, வெண்மை.
எண்கள்: 1, 5, 6, 8, 9.
பரிகாரம்: விநாயகர், துர்கையை வழிபடுவது நல்லது.
கும்ப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 7-ல் குரு, 10-ல் செவ்வாய்; சனி சஞ்சரிப்பதால் பொருளாதார நிலை உயரும். குடும்ப நலம் சிறக்கும். சுப காரியங்கள் கைகூடும். விருந்து, உபசாரங்களிலும்; கேளிக்கை, உல்லாசங்களிலும் ஈடுபாடு அதிகரிக்கும். கணவரால் மனைவிக்கும், மனைவியால் கணவருக்கும் அனுகூலம் உண்டாகும். கூட்டுத்தொழில் லாபம் தரும்.
திருமணம் ஆகாதவர்களுக்கு அதற்கான வாய்ப்புக் கூடிவரும். திருமணம் ஆனவர்களுக்கு மகப்பேறு பாக்கியம் உண்டாகும். 3-ல் புதன் இருப்பதால் வியாபாரிகள் விழிப்புடன் செயல்பட்டால் நஷ்டத்தைத் தவிர்க்கலாம். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்தினால்தான் முன்னேற்றம் காணமுடியும். கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது. புதியவர்களிடம் விழிப்புடன் பழகுவது அவசியம்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஏப்ரல் 7, 11.
திசைகள்: மேற்கு, தெற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: நீலம், வெண்மை, சிவப்பு.
எண்கள்: 6, 8, 9.
பரிகாரம் : ஸ்ரீரங்கநாதர், ரங்கநாயகியை வழிபடுவது நல்லது. ஏழை மாணவர்கள் கல்வி பயில உதவவும்.
மீன ராசி வாசகர்களே
உங்கள் ராசியில் சுக்கிரன், 2-ல் புதன், 6-ல் ராகு உலவுவதால் புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். கேளிக்கை, உல்லாசங்களிலும்; விருந்து, உபசாரங்களிலும் ஈடுபாடு அதிகரிக்கும். நண்பர்கள், உறவினர்கள், தொழில் கூட்டாளிகள் உதவி புரிவார்கள். பேச்சில் திறமை கூடும். குடும்ப நலம் சிறக்கும். வியாபாரம் பெருகும். கலைத்துறை ஊக்கம் தரும். பெண்கள் எண்ணம் ஈடேறப் பெறுவார்கள்.
மாணவர்களது நிலை உயரும். ஜன்ம ராசியில் சூரியனும் 6-ல் குருவும் இருப்பதால் உடல்நலம் அவ்வப்போது பாதிக்கும்; கவனம் தேவை. தலை, அடிவயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். 9-ல் செவ்வாயும் வக்கிர சனியும் இருப்பதால் வெளிநாட்டுத் தொடர்பு அளவோடு நலம் தரும். தந்தை நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். நிலபுலங்கள் ஓரளவு லாபம் தரும். எதிரிகளைச் சமாளிப்பீர்கள். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட தேதிகள்: ஏப்ரல் 7, 11.
திசைகள்: வடக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு.
நிறங்கள்: வெண்மை, பச்சை, இளநீலம், புகை நிறம்.
எண்கள்: 4, 5, 6, 9.
பரிகாரம்: சூரிய நாராயணரை வழிபடவும். ஆதித்ய ஹ்ருதயம் படிப்பதும் கேட்பதும் நல்லது.