ஆன்மிகம்

வார ராசிபலன் 17-11-2016 முதல் 23-11-2016 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

சந்திரசேகர பாரதி

மேஷ ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 8-ல் புதனும், 9-ல் சுக்கிரனும், 10-ல் செவ்வாயும், 11-ல் கேதுவும் உலவுவது நல்லது. முக்கியமான தகவல் ஒன்று வந்து சேரும். உடன்பிறந்தவர்களால் உங்களுக்கும் உங்களால் அவர்களுக்கும் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள் நலம் புரிவார்கள். புதிய சொத்துகள் சேரும். திரவப் பொருள் லாபம் தரும். கலைஞர்களுக்குப் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். இயந்திரப் பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள்.

மனதில் துணிவும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். செயற்கரிய காரியங்களில் ஈடுபட்டு, அதில் வெற்றி பெறுவீர்கள். ஆன்மிக, அறநிலையப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். சூரியன், ராகு, குரு, சனியின் சஞ்சாரம் அனுகூலமாக இல்லாததால் மக்கள் நலம் பாதிக்கும். தொழிலாளர்கள், அரசுப் பணியாளர்கள் ஆகியோர் பொறுப்புடன் காரியமாற்றவும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 18 (பிற்பகல்), 20, 23 (பிற்பகல்).

திசைகள்: தென் கிழக்கு, வட மேற்கு, தெற்கு, வடக்கு. l ‎நிறங்கள்: மெரூன், இளநீலம், சிவப்பு.

எண்கள்: 5, 6, 7, 9.‎ l பரிகாரம்: பராசக்தியை வழிபடவும்.

ரிஷப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 5-ல் குருவும், 8-ல் சுக்கிரனும், 10-ல் கேதுவும், உலவுவது நல்லது. குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். பண வரவு திருப்தி தரும். பேச்சில் திறமை கூடும். நல்ல தகவல் வந்து சேரும். மனதில் துணிவு பிறக்கும். பெண்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். விருந்து, உபசாரங்களிலும்; கேளிக்கை, உல்லாசங்களிலும் ஈடுபாடு அதிகரிக்கும்.

புதிய ஆடை, அணிமணிகள் சேரும். அலைச்சல் கூடும். என்றாலும் பலன் கிடைக்கும். தெய்வப் பணிகள் நிறைவேறும். கணவன்-மனைவி இடையே சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். மருத்துவம், ரசாயனம், விஞ்ஞானம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள்.

அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 18 (பிற்பகல்), 20, 23 (பிற்பகல்).

திசைகள்: வட மேற்கு, வட கிழக்கு, தென் கிழக்கு.

நிறங்கள்: மெரூன், இளநீலம், பொன் நிறம். l எண்கள்: 3, 6, 7.

பரிகாரம்: துர்க்கைக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது.

மிதுன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும், 6-ல் சூரியன், புதன், சனியும் உலவுவது நல்லது. மதிப்பும் அந்தஸ்தும் உயரும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைக்கும். புதியவர்கள் அறிமுகமாகி ஆதரவாக இருப்பார்கள். பயணத்தால் ஒரு எண்ணம் நிறைவேறும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். அரசியல்வாதிகள், அரசுப் பணியாளர்கள், விஞ்ஞானிகள், தொழிலாளர்கள், விவசாயிகள் வளர்ச்சி காண்பார்கள்.

இயந்திரப் பணியாளர்கள், இன்ஜினீயர்கள் பொறுப்புடன் செயல்பட்டால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். உடன்பிறந்தவர்களாலும் தந்தையாலும் சில இடர்ப் பாடுகள் ஏற்படும். எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் தொழில் லாபம் தரும். கணவன்-மனைவி உறவு நிலை சீராக இராது. பக்குவமாகப் பேசிப் பழகுவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 18 (பிற்பகல்), 20, 23 (பிற்பகல்).

திசைகள்: தென் மேற்கு, மேற்கு, வடக்கு, கிழக்கு.

நிறங்கள்: புகை நிறம், பச்சை, கருநீலம், ஆரஞ்சு. l எண்கள்: 1, 4, 5, 8.

பரிகாரம்: சுப்பிரமணியரை வழிபடவும். விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து அர்ச்சனை செய்யவும்.

கடக ராசி வாசகர்களே

கோசாரப்படி கிரகநிலை அனுகூலமாக இல்லை. எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடுவது நல்லது. பேச்சிலும் செயலிலும் வேகம் கூடாது. உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. புதியவர்களை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம். பொருள் கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்தவும். கெட்ட பழக்க வழக்கங்களுக்கும் கெட்டவர்களின் தொடர்புக்கும் இடம் தரலாகாது.

உத்தியோகஸ்தர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், கலைஞர்கள், பெண்கள் ஆகியோருக்கெல்லாம் முன்னேற்றம் தடைபடும். விரும்பத்தகாத இடமாற்றம் ஏற்படும். உடன்பணிபுரிபவர்களிடம் விழிப்புடன் பழகுவது அவசியம். உங்கள் கடமைகளை நீங்களே செய்வது நல்லது. பிறரை நம்ப வேண்டாம். புதிய துறைகளில் அதிகம் முதலீடு செய்ய இந்த நேரம் சிறப்பானதாகாது.

அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 20, 23 (பிற்பகல்). l திசை: வட மேற்கு.

நிறம்: வெண்மை. l எண்: 2.

பரிகாரம்: கணபதி, நவக்கிரக ஜப, ஹோமம் செய்வது நல்லது.

சிம்ம ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும், 4-ல் புதனும், 5-ல் சுக்கிரனும், 6-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பு. மனதிற்கினிய சம்பவங்கள் நிகழும். பொருளாதார நிலை திருப்தி தரும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். முக்கியமான எண்ணங்கள் ஈடேறும். குடும்பத்தில் குதூகலம் கூடும். சுப காரியங்கள் நிகழும். நண்பர்களும் உறவினர்களும் ஓரளவு உதவுவார்கள்.

கலைத்துறை ஆக்கம் தரும். பெண்களின் நோக்கம் நிறைவேறும். புதிய ஆடை, அணிமணிகள், வாசனைத் திரவியங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், விஞ்ஞானிகள் ஆகியோர் நிலை உயரப் பெறுவார்கள். செயற்கரிய காரியங்களில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். அலைச்சல் வீண்போகாது. தாய் நலனில் கவனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 18 (பிற்பகல்), 23 (பிற்பகல்).

திசைகள்: தென் கிழக்கு, வட கிழக்கு, தெற்கு, வடக்கு.

நிறங்கள்: இள நீலம், வெண்மை, பச்சை, பொன் நிறம்.

எண்கள்: 3, 5, 6, 9. l பரிகாரம்: துர்க்கை, விநாயகரை வழிபடவும். நாகர் வழிபாடு செய்வது நல்லது.

கன்னி ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும்; சனியும், 4-ல் சுக்கிரனும், 6-ல் கேதுவும் உலவுவது நல்லது. எடுத்த காரியங்களில் எப்பாடுபட்டாவது வெற்றி பெறுவீர்கள். அரசுப் பணிகள் ஆக்கம் தரும். முக்கியஸ்தர்களின் தொடர்பும் அதனால் அனுகூலமும் உண்டாகும். பொதுநலப் பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். நிர்வாகத்திறமை கூடும்.

தொழிலாளர்கள், விவசாயிகளுக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். ஜலப்பொருட்கள் லாபம் தரும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு கூடும். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். கணவன்-மனைவி உறவு நிலை சீராக இருந்துவரும். வாரப் பின்பகுதியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் பாதுகாப்பு தேவை. வீண் அலைச்சலைத் தவிர்க்கவும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 18 (பிற்பகல்), 20.

திசைகள்: தென் கிழக்கு, மேற்கு, வட மேற்கு.

நிறங்கள்: வெண்மை, இள நீலம், மெரூன். l எண்கள்: 1, 6, 7, 8.

பரிகாரம்: துர்க்கை மற்றும் காளிக்கு நெய்தீபமேற்றவும்.

SCROLL FOR NEXT