பிறந்தநாள் வாழ்வில் முக்கியமானது. அதுவும் புதுச்சேரி அன்னையின் பிறந்த நாளில் ஆசிரமத்திலுள்ள அவரது அறையை தரிசிப்பது சிறப்பான அனுபவமாய் நமக்குள் நிலைக்கும்.
வரும் பிப்ரவரி 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்னை பிறந்ததினம் வருகிறது. அன்றைய தினம் அவரது அறை பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட உள்ளது. புதுவையில் அரவிந்தர் ஆசிரமத்தில் அன்னையின் பிறந்த நாளையொட்டி அவர் தங்கியிருந்த அறை பக்தர்கள் தரிசனத்துக்காக திறந்திருக்கும்.
அன்னையின் அறையை தரிசிக்க விரும்புவோர் முன்கூட்டியே இலவச டோக்கனை ஆசிரமத்தில் பெறலாம். டோக்கன் தரும் பணி தற்போது நடக்கிறது. காலை 5 மணியளவில் டோக்கனை பெற்றுக்கொண்டு, அதில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் அன்னையின் அறையை தரிக்க முடியும். உலகம் முழுவதுமிருந்து பக்தர்கள் அன்னையின் அறையை தரிசிக்க வருவார்கள். நீங்களும் தரிசிக்க புதுச்சேரி வாங்களேன். அத்துடன் அவரது சமாதியிலும் தியானம் செய்து இறை அனுபவத்தை தரிசிக்கலாம்.