ஆன்மிகம்

மேல்கோட்டை திருநாராயணன்

செய்திப்பிரிவு

கர்னாடக மாநிலத்தில் மாண்டியா மாவட்டத்தில் மேல்கோட்டை அருகே அமைந்துள்ள இந்த சிற்றூர் திருநாராயணபுரம். கர்ப்பகிருஹத்தில் மூலமூர்த்தி திருநாராயண பகவான் சங்க சக்ரத்துடன் சதுர்புஜம், அபயஹஸ்தம், தண்டாயுதம்(கதை) ,அற்புதமான ரத்னம் இழைத்த தங்கக்கிரீடம், பூநூல் ,நாகாபரணம் முதலிய திவ்ய அலங்காரத்துடன் காணப்படுகிறார். தாயார் யதுகிரிநாச்சியார். மேல்கோட்டை நாராயணபுரத்தில் பங்குனி மாதத்தில் நடைபெறும் 'வைரமுடி சேவை' விழாவில், இராமானுஜர் சந்நிதிக்கு முன்னாள் உற்சவ மூர்த்தியை நாச்சியாருடன் எழுந்தருளச் செய்து வைரமுடி அணிவித்து விழா கொண்டாடுகின்றனர். இராமன் முடிசூட்டு விழாவைக் காண தசரதருக்குக் கிடைக்காத பேறு இராமானுஜருக்கு கிடைத்ததாம்.

SCROLL FOR NEXT