ஆன்மிகம்

பரிகாரத் தலம்: திருப்பம் தரும் திருப்பதி

ஜி.விக்னேஷ்

பக்தர்களைக் காந்தம் போல் இழுப்பவன் திருமலை வாசன் நிவாசன். அதேபோல் பக்தர்கள்பால் மிகுந்த ஈர்ப்புடையவனும் அவனே. திருமலை திருப்பதியில் திருவேங்டமுடையானுக்குத் தேவையான பூக்களைத் தோட்டம் அமைத்து விளைவித்தவர் அனந்தாழ்வான்.

பெருமாளுக்கு மலர் சேவை செய்வதைத் தனியொருவராகச் செய்யவே மனதில் எண்ணம் கொண்டார். அதில் உறுதியாகவும் இருந்தார். இந்நிலையில் தனது தோட்டத்தை விரிவுபடுத்தி, மேலும் மலர் உற்பத்தியை அதிகரிக்க விரும்பினார்.

தன் மனைவியின் உதவியை மட்டுமே நாடிய அவர், நிலத்தைச் செப்பனிட்டார். அப்பொழுது சிறுவன் ஒருவன், அவரது மனைவியிடம் இருந்து மண் சட்டியை வாங்கி தொலை தூரத்தில் கொண்டு கொட்டிவிட்டு வந்தான். இதனை கவனித்த அனந்தன் அவனை விரட்டினார். ஆனால் சிறுவனோ இந்த வேலையில் தொடர்ந்து ஈடுபட்டான். கோபம் கொண்ட அனந்தன் தான் இருந்த இடத்தில் இருந்து கடப்பாரையை வீச, அது சிறுவனின் முகவாய்க்கட்டையில் பட்டது.

சிறுவனாக வந்தது வேங்கடமுடையானே என்பதை உணர்ந்த பக்தர்கள் கோவிந்த கோஷம் எழுப்பினார்கள். இன்றும் திருமலைக் கோவிலில் பிரதான வாசலில் வலப்புறம் சுவரின் மேல்புறத்தில் இந்த கடப்பாரையைக் காணலாம். அதனடியில் அனந்தாழ்வான் கடப்பாரை என்றும் எழுதப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாகத் தூறு கூடப் பிடிக்காமல் வரலாற்றுச் சான்றாக இருக்கிறது.

வேங்கடமுடையான் முகவாய்க்கட்டையில் மட்டுமே வெண்ணிறப் பட்டையுடன் காட்சி அளிக்கிறார். இன்றும் விஷ்ணுவின் அவதாரங்கள் மற்றும் வேறு எந்த அர்ச்சாவதாரத்திலும் காணக் கிடைக்காத காட்சி இது.

பக்தனான அனந்தாழ்வானின் மனைவியின் பாரம் போக்க ஓடோடி வந்து களத்தில் இறங்கியவன் என்பதால் திருமலை சென்று திரும்பி வந்தால் தங்கள் வாழ்விலும் துயர் நீக்கி நல்ல திருப்பம் ஏற்ப்படும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

தன் மனைவியின் உதவியை மட்டுமே நாடிய அவர், நிலத்தைச் செப்பனிட்டார். அப்பொழுது சிறுவன் ஒருவன், அவரது மனைவியிடம் இருந்து மண் சட்டியை வாங்கி தொலை தூரத்தில் கொண்டு கொட்டிவிட்டு வந்தான். இதனை கவனித்த அனந்தன் அவனை விரட்டினார். ஆனால் சிறுவனோ இந்த வேலையில் தொடர்ந்து ஈடுபட்டான். கோபம் கொண்ட அனந்தன் தான் இருந்த இடத்தில் இருந்து கடப்பாரையை வீச, அது சிறுவனின் முகவாய்க்கட்டையில் பட்டது.

உடனடியாக அச்சிறுவன் ஓடி மறைந்தான். பின்னர் வேங்கடமுடையான் சன்னதியில் அர்ச்சகர் பூஜை செய்யும் பொழுதே, மூலவர் முகவாய்க் கட்டையில் இருந்து ரத்தம் கொட்டத் தொடங்கியது. இச்செய்தி திருமலை எங்கும் பரவ, கேள்விப்பட்ட அனந்தனும் கோயிலை நோக்கி ஓடி வருகிறார். அர்ச்சகர் துணியை வைத்துத் துடைத்தும் ரத்தம் கொட்டுவது நிற்கவில்லை. வேங்கடமுடையானுக்கு நாமம் இட்டுவிட்டு மீதி வைத்திருந்த பச்சைக் கற்பூரத்தை அனந்தாழ்வான் எடுத்து முகவாய்க்கட்டையில் ரத்தம் பெருக்கெடுக்கும் இடத்தில் அடைக்க ரத்தம் உடனடியாக நின்றுவிட்டது.

சிறுவனாக வந்தது வேங்கடமுடையானே என்பதை உணர்ந்த பக்தர்கள் கோவிந்த கோஷம் எழுப்பினார்கள். இன்றும் திருமலைக் கோவிலில் பிரதான வாசலில் வலப்புறம் சுவரின் மேல்புறத்தில் இந்த கடப்பாரையைக் காணலாம். அதனடியில் அனந்தாழ்வான் கடப்பாரை என்றும் எழுதப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாகத் தூறு கூடப் பிடிக்காமல் வரலாற்றுச் சான்றாக இருக்கிறது.

SCROLL FOR NEXT