தமிழ், பக்தி, ரசனை, இயற்கைச் சூழல்- இவையனைத்தையும் ஒன்று சேர்த்தது ஆழ்வார்கள் தமிழ்! பக்தியே இல்லையென்றாலும், தமிழுக்காகப் படிக்கலாம். ஆழ்வார்கள் மத்தியில் பிரபலமான பறவை கருங்குருவி. இதனைக் கரிச்சான் குஞ்சு என்றும் கூறுவர். கருங்குருவியின் இயல்பு பற்றி ஊன்றிக் கவனித்த பன்னிரு ஆழ்வார்களில் ஒருவர்,
‘கன்னங் கருங்குருவி
மின்னலெனும் விளக்கேற்றும் கார்காலம்’ என்கிறார்.
அதாவது கார்கால நேரமது, கருமேகங்கள் சூழ, சுற்றம் சூழல் இருட்டாகிறது. தாய்க்குருவியான ஒரு கருங்குருவிக்கு அச்சம் எழுகிறது. ‘’ஐயோ, கூட்டில் குஞ்சுகள் உள்ளனவே! இருள் கண்டு அஞ்சுமே’’ என்றெண்ணி மின்மினிப்பூச்சி ஒன்றை அலகால் எடுத்து, அதை களிமண்ணில் பதித்து தனது கூட்டில் சென்று சேர்த்து விளக்கேற்றியதாம்.
அதுபோலத்தான், தேவையான நேரத்தில் இறைவன் தாயாகி நமக்கு விளக்கேற்றுவான்!