ஆன்மிகம்

ரமலான் என்னும் விருந்தினர்

இக்வான் அமீர்

ரமலான் மாதத் தொடக்கம்

மகத்தான விருந்தாளியை எதிர் நோக்கி முஸ்லிம் உலகம் காத்திருக்கிறது. எண்ணற்ற அருட்கொடைகளைப் பரிசுகளாய் சுமந்துவரும் ரமலான் என்னும் அந்த விருந்தாளியைக் குறித்து நபிகளார் அதற்கு முந்தைய மாதமான ஷாபானின் இறுதித் தேதியில் ஆற்றிய உரையில் இப்படிச் சொல்கிறார்:

“மக்களே! மகத்தான, பாக்கியங்கள் நிறைந்த மாதம் ஒன்று எதிர்ப்பட இருக்கிறது. அந்த மாதத்தில் ஓர் இரவு இருக்கிறது. அது ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்த இரவாகும். இந்த மாதத்தில் நோன்பு நோற்பதை இறைவன் கடமையாக்கியுள்ளான். மேலும், இரவு வேளைகளில் தராவீஹ் எனப்படும் தொழுகையைத் தொழுவது உபரிச் செயலாக ஆக்கியுள்ளான்.

எவர் அந்த மாதத்தில் ஒரு நன்மையைச் செய்கிறாரோ அது மற்ற மாதங்களில் கட்டாய கடமையாக்கிய ஒரு செயலைச் செய்ததற்கான நற்கூலியைப் பெற்றுத் தரும். எவர் இந்த மாதத்தில் கடமையாக்கப்பட்ட ஒரு செயலைச் செய்கிறாரோ அது மற்ற மாதங்களில் 70 கடமைகளை நிறைவேற்றுவதற்கு ஒப்பான நற்கூலியைப் பெற்றுத்தரும்.

வரவேற்கத் தயாராகும் நபிகள்

மகத்துவம் மிக்க மாதமான ரமலான், இறைவனின் பிரத்யேகமான கருணையை உள்ளடக்கிய மாதமாகும். அதனால், ரமலானை வரவேற்கும் விதமாக நபிகளார் ஷாபான் மாதம் தொடங்குவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே அதை வரவேற்கத் தயாராகிவிடுவார். “அண்ணல் நபி மற்ற மாதங்களைவிட ஷாபான் மாதத்தில் அதிக நோன்பைக் கடைபிடிப்பார்கள்!” என்கிறார் அவரது துணைவியார் ஆயிஷா நாச்சியார்.

சாந்தியைத் தரும் பிறை

ரமலானின் பிறை பார்ப்பதில் மிகவும் ஆர்வம் காட்டும் நபிகளார் பிறை தெரிந்ததும் நெஞ்சுருக, “இந்தப் பிறையை அமைதி, சாந்தியைத் தரும் பிறையாக ஆக்கியருள்வாயாக! உனக்குப் பிடித்தமான நற்செயல்களைப் புரியும் பேற்றினை இதன் மூலம் எங்களுக்குத் தந்தருள்வாயாக!” என்று பிராத்தனை புரிவார்.

ஆர்வத்துடனும், உத்வேகத்துடனும் தானும் தனது குடும்பத்தாரும், அண்டை அயலாரும் நோன்பு நோற்பதற்கான சூழல்களை ஏற்படுத்துவது மிகவும் சிறந்தது. நோன்பு நோற்பதற்கு விலக்கு அளிக்கப்பட்டவர்கள் ரமலானின் மதிப்பை முன்னிட்டு வெளிப்படையாக உண்ணுவதிலிருந்தும், பருகுவதிலிருந்தும் தவிர்த்துக் கொள்வது சிறப்பானது.

புனித ரமலான் மாதம் திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதமாகையால், அதிகதிகம், திருக்குர்ஆன் ஓதுவதையும் குர்ஆன் ஓதுவதைச் செவிமடுப்பதையும் பழக்கமாக்கிக் கொள்வதும் சிறப்பானது.

இயல்பாகவே நபிகளார் கொடை மனம் கொண்டவர். தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ள விரும்பாதவர். அத்தகையவர் ரமலான் மாதத்தில் இன்னும் அதிகமாகத் தான தர்மங்கள் செய்பவராக இருந்தார். அந்தக் கொடைத் தன்மை வேகமாக வீசும் பாலைவனப் புயல்போன்றிருக்கும் என்கிறது வரலாறு.

திருக்குர்ஆன் ரமலான் மாதத்தின் கடைசி பத்து ஒற்றைப் படை நாட்களில் அருளப்பட்டதால், கண்ணியம் மிக்க அந்த நாட்களின் ஒவ்வொரு மணித்துளியும் மிகவும் முக்கியமானது. அந்த நாட்களின் முக்கியத்துவம் குறித்து திருக்குர்ஆன் இப்படி எடுத்துரைக்கிறது:

“திண்ணமாக இந்த திருக்குர்ஆனை கண்ணியம் மிக்க ஓர் இரவில் இறக்கி வைத்தோம். கண்ணியம் மிக்க அந்த இரவு என்னவென்று உமக்குத் தெரியுமா? மாட்சிமை மிக்க அந்த இரவு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்த இரவாகும். அதில் வானவர்களும், ஜிப்ரீயலும் தம் இறைவனின் அனுமதியுடன் அனைத்துக் கட்டளைகளையும் ஏந்தியவண்ணம் இறங்குகிறார்கள். அந்த இரவு முழுவதும் நலம் பொருந்திய இரவாய் திகழ்கிறது… வைகறை வரை..!”

ரமலானின் கடைசி ஒற்றைப்படை இரவுகளில் நபிகளார் அதிகம் இப்படி இறைஞ்சுபவராக இருந்தார்: “இறைவா! நீ பெரிதும் மன்னிப்பவன். மன்னிப்பதை விருப்பமாகக் கொண்டவன். எனவே என்னை மன்னித்தருள்வாய் இறைவா!”

புனித ரமலான் மாதம் திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதமாகையால், அதிகதிகம், திருக்குர்ஆன் ஓதுவதையும் குர்ஆன் ஓதுவதைச் செவிமடுப்பதையும் பழக்கமாக்கிக் கொள்வதும் சிறப்பானது.

ஒவ்வொரு ரமலான் மாதத்திலும் வானவர் தலைவர் ஜிப்ரீயல் (காப்ரியல்) நபிகளாருக்கு திருக்குர்ஆன் முழுவதையும் ஓதிக் காட்டுவார். அதேபோல, நபிகளார் திருக்குர்ஆன் ஓதுவதையும் கேட்பார்.

மன்னிப்பு மற்றும் ஈகை

ரமலான், ஒரு நற்செயல் பல மடங்காய் பல்கிப் பெருகும் மாதமாகையால், ஏழைகள், தேவையுள்ளோர், அனாதைகள், விதவைகள் ஆகியோரின் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றக் கிடைக்கும் சந்தர்ப்பத்தை நழுவவிடக் கூடாது. தேவையுள்ளோர் மீது கரிசனம் காட்டுவது, பொருளுதவி செய்வது, இனிய முறையில் பழகுவது, பணியாட்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்வது, அவர்களுக்கு இயன்றவரையிலான சலுகைகள் அளிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

இயல்பாகவே நபிகளார் கொடை மனம் கொண்டவர். தனக்கென்று எதையும் வைத்துக்கொள்ள விரும்பாதவர். அத்தகையவர் ரமலான் மாதத்தில் இன்னும் அதிகமாகத் தான தர்மங்கள் செய்பவராக இருந்தார். அந்தக் கொடைத் தன்மை வேகமாக வீசும் பாலைவனப் புயல்போன்றிருக்கும் என்கிறது வரலாறு.

SCROLL FOR NEXT