ஆன்மிகம்

வார ராசிபலன்- 19-05-2016 முதல் 25-05-2016 வரை துலாம் முதல் மீனம் வரை

சந்திரசேகர பாரதி

துலாம் ராசி வாசகர்களே

குரு, ராகு ஆகியோர் 11-ம் இடத்தில் உலவுவது சிறப்பு. இதர கிரகங்களின் சஞ்சாரம் அனுகூலமாக இல்லை. குடும்ப நலம் பாதிக்கும். பேச்சிலும் செயலிலும் நிதானத்தைக் கடைப்பிடிப்பது அவசியம். வீண்வம்பு வேண்டாம். கண் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. பிள்ளைகளால் நல்லதும் அல்லாததுமான பலன்கள் கலந்தவாறு ஏற்படும். பொருளாதார நிலை உயரும். எதிர்பாராத ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும்.

அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். பெரியவர்கள், தனவந்தர்களது ஆதரவு கிடைக்கும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். இயந்திரப்பணியாளர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. வியாபாரிகள் அகலக்கால் வைக்கலாகாது. 20-ம் தேதி முதல் சுக்கிரன் 8-ம் இடம் மாறுவதால் கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் பிரச்சினைகள் குறையும்.

பரிகாரம்: விநாயகர், திருமாலை வழிபடவும்.

நிறங்கள்: சாம்பல் நிறம், பொன் நிறம்.

எண்கள்: 3, 4.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 19, 21, 24.

திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு.

விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் புதனும், 10-ல் ராகுவும் உலவுவது சிறப்பு. குரு 10-ல் இருந்தாலும் 2, 4, 6-ம் இடங்களைப் பார்ப்பது நல்லது. குடும்ப நலம் சீராகும். பேச்சில் திறமை வெளிப்படும். எதிர்ப்புகள் கட்டுக்குள் அடங்கியே இருக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி காண வழிபிறக்கும். கணிதம், எழுத்து, பத்திரிகை போன்ற துறைகள் ஆக்கம் தரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும்.

பொருளாதார நிலை ஏற்றம், இறக்கமாகவே காணப்படும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. ஜன்ம ராசியில் செவ்வாயும், சனியும் வக்கிரமாக உலவுவதாலும், 4-ல் கேது இருப்பதாலும் உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. மருத்துவச் செலவுகள் சற்று கூடவே செய்யும். சுக்கிரன் பலம் குறைந்திருப்பதாலும் 7-ல் சூரியன் உலவுவதாலும் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் கூடும். சகிப்புத்தன்மை தேவை.

எண்கள்: 4, 5.

பரிகாரம்: முருகன், ஆஞ்சநேயரை வழிபடவும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 19, 21, 24.

திசைகள்: தென்மேற்கு, வடக்கு.

நிறங்கள்: பச்சை, வெண்சாம்பல் நிறம்.

தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 5-ல் சுக்கிரனும், 6-ல் சூரியனும், 9-ல் குருவும் உலவுவது சிறப்பு. பக்தி மார்க்கத்திலும் ஞானமார்க்கத்திலும் ஈடுபாடு கூடும். அறநிலையப் பணியாளர்கள், சாதுகள், மகான்கள் ஆகியோருக்கு செல்வாக்கும் மதிப்பும் உயரும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். புதிய பதவி, பட்டங்கள் உங்களைத் தேடிவரும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடும். முக்கியஸ்தர்கள், மேலதிகாரிகள் ஆகியோர் ஆதரவாகச் செயல்படுவார்கள்.

பொருள்வரவு திருப்தி தரும். நூதன பொருட்சேர்க்கை நிகழும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். அரசுப்பணியாளர்களது நிலை உயரும். உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்களுக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். 20-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. கலைஞர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது.

எண்கள்: 1, 3, 6, 7.

பரிகாரம்: மகாவிஷ்ணுவை வழிபடுவது நல்லது.

நிறங்கள்: வெண்மை, மெரூன், ஆரஞ்சு , பொன் நிறம்.

திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு, கிழக்கு, வடகிழக்கு.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 19, 24.

மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 4-ல் புதனும்; சுக்கிரனும், 11-ல் செவ்வாயும்; சனியும் உலவுவது சிறப்பு. புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். நிலம், மனை, வீடு, வாகனங்களின் சேர்க்கையோ, அவற்றால் ஆதாயமோ கிடைத்துவரும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். வியாபாரம் வளர்ச்சி பெறும். மாணவர்களது திறமை வெளிப்படும். நண்பர்கள், உறவினர்கள் உதவி புரிவார்கள்.

20-ம் தேதி முதல் மனதிற்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் இடம் பெறும். ஒன்றுக்கும் மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைத்துவரும். 2-ல் கேதுவும், 5-ல் சூரியனும், 8-ல் குருவும், ராகுவும் உலவுவதால் சிறுசிறு இடர்பாடுகள் அவ்வப்போது ஏற்படும். பேச்சில் நிதானம் தேவை. மக்கள் நலனில் அதிக கவனம் செலுத்துவது நல்லது.

நிறங்கள்: நீலம், சிவப்பு, வெண்மை. பச்சை.

எண்கள்: 5, 6, 8, 9.

பரிகாரம்: துர்கையையும், விநாயகரையும், சிவபெருமானையும் வழிபடுவது நல்லது.

திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, தெற்கு, வடக்கு.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே19, 21.

கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும், 7-ல் குருவும், 10-ல் செவ்வாய்; சனியும் சஞ்சரிப்பதால் நல்ல தகவல் வந்து சேரும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தகவல் தொடர்பு இனங்கள் ஆக்கம் தரும். கலைஞர்கள், மாதர்களுக்குச் செழிப்பான சூழ்நிலை நிலவிவரும். கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவனுக்கும் அனுகூலம் ஏற்படும். செய்து வரும் தொழில் விருத்தி அடையும்.

தான, தர்மப்பணிகளிலும், தெய்வப்பணிகளிலும் ஈடுபாடு கூடும். நல்லவர்கள் பக்கபலமாக இருந்து உதவுவார்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். மனமகிழ்ச்சி கூடும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். இயந்திரப்பணிகள் லாபம் தரும். 20-ம் தேதி முதல் புதிய சொத்துகளும் பொருட்களும் சேரும். ஆடை, அணிமணிகள், அலங்காரப்பொருட்கள், வாசனைத் திரவியங்களால் வருவாய் கிடைக்கும்.

எண்கள்: 3, 6, 8, 9.

பரிகாரம்:ஸ்ரீரங்கநாதரையும் ரங்கநாயகியையும் வழிபடவும்.

திசைகள்: மேற்கு, தெற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு.

நிறங்கள்: நீலம், வெண்மை, சிவப்பு, ஆரஞ்சு, பொன் நிறம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மே 19, 21, 24.

மீன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் புதன்; சுக்கிரனும், 3-ல் சூரியனும், 6-ல் ராகுவும் உலவுவது சிறப்பு. குரு 6-ல் இருந்தாலும் அவரது பார்வை 10, 12, 2-ம் இடங்களுக்குப் பதிவது நல்லது. பண வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். பேச்சில் திறமையும் இனிமையும் கூடும். நிலபுலங்கள் லாபம் தரும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும்.

அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். அரசுப்பணியாளர்களது எண்ணம் ஈடேறும். புதிய பதவி, பட்டங்கள் இப்போது கிடைக்கும். அயல்நாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் விருத்தி அடையும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். செலவுகள் கட்டுக்குள் அடங்கியிருக்கும். 9-ல் செவ்வாயும் சனியும் வக்கிரமாக இருப்பதால் தந்தை நலனில் கவனம் தேவை. சகோதர நலனிலும் பிள்ளைகள் நலனிலும் கவனம் செலுத்த வேண்டிவரும்.

பரிகாரம்: குரு, தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நல்லது.

நிறங்கள்: ஆரஞ்சு, வெண்மை, பச்சை, இளநீலம், புகைநிறம்.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 5, 6.

திசைகள்: வடக்கு, தென்கிழக்கு, தென்மேற்கு.

தேதிகள்: மே 21, 24.

SCROLL FOR NEXT