ஆன்மிகம்

வார ராசிபலன் 08-06-2017 முதல் 14-06-2017 வரை (துலாம் முதல் மீனம் வரை)

சந்திரசேகர பாரதி

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 8-ல் புதனும் 11-ல் ராகுவும் உலவுவது நல்லது. இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லை. குடும்பத்தில் சச்சரவுகள் ஏற்படும். பொருளாதார நிலை சீராக இராது. கணவன் மனைவி உறவு நிலை பாதிக்கும். மக்களால் மன அமைதி குறையும். கொடுக்கல் வாங்கல், ஊகவணிகத் துறைகளால் அனுகூலமிராது. ஆடவர்களுக்குப் பெண்களால் சங்கடம் ஏற்படும். உஷ்ணாதிக்கத்தால் உடல் நலம் பாதிக்கும். தந்தை நலனில் அக்கறை தேவை. அரசாங்கம் மூலம் பிரச்சினைகள் சூழும். கண் உபத்திரவம் உண்டாகும்.

உடன்பிறந்தவர்கள் ஓரளவு உதவுவார்கள். நண்பர்கள், உறவினர்களால் நலம் உண்டாகும். கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகுத் துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். கறுப்பு நிறப்பொருட்கள் லாபம் தரும். பயணம் சார்ந்த இனங்களால் வருவாய் கிடைக்கும். 13-ம் தேதி முதல் புதன் 9-ம் இடத்திற்கு மாறுவதாலும், தன் சொந்த வீட்டில் உலவுவதாலும் தான, தர்மப்பணிகளிலும் தெய்வப்பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். சுப காரியச் செலவுகள் சற்று அதிகரிக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 8, 14. .

திசைகள்: தென்மேற்கு, வடக்கு.

நிறங்கள்: சாம்பல்நிறம், பச்சை

எண்கள்: 4, 5.

பரிகாரம்: சூரியனுக்கும் சனிக்கும் பிரீதி செய்து கொள்வது நல்லது.

விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 10-ல் ராகுவும் 11-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். புதியவர்களின் தொடர்பு பயன்படும். பயணத்தால் காரியம் இனிதே நிறைவேறும். பெரியவர்கள், தனவந்தர்கள் ஆதரவாக இருப்பார்கள். பொருளாதார நிலை உயரும். கொடுக்கல் வாங்கல் லாபம் தரும். ஊகவணிகம் மூலம் ஆதாயம் கிடைக்கும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். பொன் நிறப்பொருட்கள் லாபம் தரும். குடும்பத்தில் குதூகலம் கூடும். பேச்சில் திறமை பளிச்சிடும். முயற்சி வீண்போகாது.

ஜன்ம ராசியில் சனி இருப்பதாலும் ராசிநாதன் செவ்வாய் 8-ல் உலவுவதாலும் உடல் நலம் ஒருநாள் போல் மறுநாளிராது. தலை மற்றும் மறைமுக உறுப்பு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். எக்காரியத்திலும் அவசரப்படாமல் நிதானமாக யோசித்து ஈடுபட்டால் சங்கடங்களுக்கு ஆளாகாமல் தப்பலாம். இயந்திரங்கள், எரிபொருட்கள், மின்சாரம், வெடிப் பொருட்கள், கூரிய ஆயுதங்கள் ஆகியவற்றின் பக்கம் நெருங்கும்போது பாதுகாப்புத் தேவை. வாழ்க்கைத்துணை நலனிலும் சகோதர நலனிலும் கவனம் தேவை. 13-ம் தேதி முதல் புதன் 8-ம் இடத்திற்கு மாறுவதால் வியாபாரம் சூடு பிடிக்கும். மாணவர்களது நிலை உயரும். எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 8, 14.

திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு.

நிறங்கள்: வெண்சாம்பல்நிறம், பொன் நிறம

எண்கள்: 3, 4.

பரிகாரம்: செவ்வாய்க்கும் சனிக்கும் பிரீதி, பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது. திருமுருகனையும் ஆஞ்சநேயரையும் வழிபடவும்.

தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 5-ல் சுக்கிரனும் 6-ல் சூரியனும் புதனும் உலவுவது நல்லது. வாரத்தின் முதல் இரண்டு நாட்கள் சாதாரணமாகவே காணப்படும். எதிர்பாராத செலவுகள் ஏற்படும். இடமாற்றம் உண்டாகும். கெட்ட கனவுகள் காண்பீர்கள். கண் உபத்திரவம் உண்டாகும். சிலருக்கு காலில் அடிபடும். மனத்தில் ஏதேனும் சலனம் ஏற்படும். 10-ம் தேதி முதல் நல்ல திருப்பம் உண்டாகும். மனத்தில் தெளிவு பிறக்கும். புதிய பொருட்கள் சேரும். எதிர்ப்புக்கள் விலகும். மதிப்பு உயரும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் சுபிட்சம் கூடும்.

ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். நிறுவன, நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள். எலக்ரானிக், கம்ப்யூட்டர் துறைகள் லாபம் தரும். அரசு சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். வழக்கில் சாதகமான போக்கு தென்படும். பொருளாதார நிலையில் வளர்ச்சி காண வழிபிறக்கும். ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புக்களும் கூடிவரும். ஆடவர்களுக்குப் பெண்களால் நலம் உண்டாகும். புதிய பதவிகளும் பொறுப்புக்களும் கிடைக்கும். 13-ம் தேதி முதல் புதன் 7-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகாது. பிறரிடம் சுமுகமாகப் பழகுவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 11, 14. . .

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடக்கு.

நிறங்கள்: மெரூன், இளநீலம், வெண்மை, சிவப்பு.

எண்கள்: 1, 5, 6, 7.

பரிகாரம்: சனிக்கு நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபடுவது நல்லது. கால் ஊனமுள்ளவர்களுக்கு உதவி செய்யவும்.

மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரனும் 6-ல் செவ்வாயும் 9-ல் குருவும் 11-ல் சனியும் உலவுவது சிறப்பாகும். முக்கியமான எண்ணங்கள் வார முன்பகுதியில் நிறைவேறும். கணவன் மனைவி உறவுநிலை திருப்தி தரும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைக்கும். உடன்பிறந்தவர்களாலும், மக்களாலும், வாழ்க்கைத்துணைவராலும் நலம் உண்டாகும். பொருளாதார நிலை திருப்தி தரும். ஊகவணிகம் லாபம் தரும் . எதிரிகள் அடங்கிப் போவார்கள். வழக்கில் சாதகமான திருப்பம் ஏற்படும். கேளிக்கை, உல்லாசங்களிலும் ஈடுபாடு கூடும்.

நிலம், மனை, வீடு, வாகனச் சொத்துக்கள் சேரும். சொத்துக்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். புதிய ஆடை அணிமணிகளின் சேர்க்கை நிகழும். தொலைதூரத் தொடர்பு பயனபடும். வார நடுப்பகுதியில் எதிர்பாராத செலவுகள் வந்து சேரும். வாரப் பின்பகுதியில் பிறரால் பாராட்டப்படுவீர்கள். பொதுப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். 2-ல் கேதுவும், 8-ல் ராகுவும் உலவுவதால் சிறு இடர்ப்பாடுகள் அவ்வப்போது ஏற்படுமென்றாலும் குரு பலத்தால் சமாளிப்பீர்கள். 13-ம் தேதி முதல் புதன் வலுப்பெறுவதால் வியாபாரம் பெருகும். பண வரவு அதிகரிக்கும். கணிதத்துறை ஆக்கம் தரும். விளையாட்டுகளில் வெற்றி கிடைக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 8, 14. . .

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடகிழக்கு, தெற்கு.

நிறங்கள்: நீலம், வெண்மை, பொன் நிறம், சிவப்ப

எண்கள்: 3, 6, 8, 9.

பரிகாரம்: நாகேஸ்வரரை வழிபடுவது நல்லது.

கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும் 4-ல் புதனும் 10-ல் சனியும் உலவுவது நல்லது. செல்வாக்கும் மதிப்பும் உயரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். நண்பர்களும் உறவினர்களும் உதவி புரிவார்கள். முன்னேற்றத்துக்கான தகவல் வந்து சேரும். எதிப்புக்கள் விலகும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். மாணவர்களது திறமை வெளிப்படும். பொது நலப்பணியாளர்களுக்கு வரவேற்பு கூடும். தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோர் வளர்ச்சி காண்பார்கள். ஜன்ம ராசியில் கேதுவும் 7-ல் ராகுவும் இருப்பதால் கோபத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது.

பிறரிடம் சுமுகமாகப் பழகுவதன் மூலம் அதிக நலம் பெறலாம். 4-ல் சூரியன் இருப்பதால் அலைச்சல் அதிகமாகும். உடல் சோர்வு ஏற்படும். குரு பலம் இல்லாததால் சுப காரியங்கள் நிகழக் குறுக்கீடுகள் முளைக்கும். கொடுக்கல்-வாங்கலில் அதிக கவனம் தேவை. மக்கள் நலம் கவனிக்கப்பட வேண்டிவரும். 13-ம் தேதி முதல் புதன் 5-ம் இடத்திற்கு மாறுவது கோசாரப்படி சிறப்பாகாது என்றாலும் அவர் தன் சொந்த வீட்டில் உலவுவதால் நலம் புரிவார். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். எழுத்து, பத்திரிகை, வியாபாரத்தில் வருவாய் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 8, 11. . .

திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, வடக்கு.

நிறங்கள்: நீலம், வெண்மை, பச்சை.

எண்கள்: 5, , 6, 8.

பரிகாரம்: குருவையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும். நாக பூஜை செய்வது நல்லது.

மீன ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும், 3-ல் சூரியனும் 6-ல் ராகுவும் 7-ல் குருவும் உலவுவது சிறப்பாகும். புனிதப்பணிகளில் ஈடுபாடு கூடும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். உற்சாகம் பெருகும். குடும்பத்தில் குதூகலம் கூடும். பேச்சில் இனிமையும் திறமையும் வெளிப்படும். மாதர்களது நோக்கம் நிறைவேறும். உயர் பதவிகளும் பட்டங்களும் கிடைக்கும். செய்து வரும் தொழில் விருத்தி அடையும். அரசு உதவி பெற வாய்ப்பு உண்டாகும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும்.

நல்லவர்களின் நட்புறவு கிடைக்கும். கூட்டுத் தொழிலில் வளர்ச்சி காண வாய்ப்பு உண்டாகும். மகப்பேறு பாக்கியம் கிட்டும். மக்களால் முக்கியமான எண்ண்ங்கள் சில நிறைவேறும். அதிர்ஷ்ட இனங்கள் லாபம் தரும். பெரியவர்களும் தனவந்தர்களும் ஆதரவாக இருப்பார்கள். 13-ம் தேதி முதல் புதன் 4-ம் இடத்துக்கு மாறுவது விசேடமாகும். மாணவர்களுக்கு வெளிச்சமான சூழ்நிலை உதயமாகும். வியாபாரிகள் மந்த நிலை விலகப் பெறுவார்கள். சொத்துக்களின் சேர்க்கை நிகழும். சொத்துக்களால் வருவாயும் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூன் 8, 14.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, வடகிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: புகைநிறம், இளநீலம், வெண்மை, ஆரஞ்சு,

எண்கள்: 1, 3, 4, 6.

பரிகாரம்: மகாவிஷ்ணுவை வழிபடவும்.

SCROLL FOR NEXT