மேஷ ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 4-ல் சுக்கிரன், 5-ல் சூரியன், குரு, 6-ல் ராகு உலவுவது சிறப்பு. எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். வேலை வாய்ப்பு தேடிவரும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துகள் சேரும். நண்பர்கள் உதவுவார்கள். தாய் நலம் சீராகும். தாய் வழி உறவினரால் அனுகூலம் உண்டாகும். நீண்ட நாட்களாக நினைத்திருந்த ஓர் எண்ணம் நிறைவேறும். கலைத் துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிறுவன, நிர்வாகத் துறையினருக்கு அனுகூலமான போக்கு தென்படும். தந்தை நலம் சீராகும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். வாரப் பின்பகுதியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். மனதில் சிறு சலனம் உண்டாகும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடுவோர்க்குத் தெளிவு பிறக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 27, 29.
திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு.
நிறங்கள்: புகை நிறம், பொன் நிறம், இளநீலம், வெண்மை, ஆரஞ்சு.
எண்கள்: 1, 3, 4, 6.
பரிகாரம்:
முருகன், ஆஞ்சநேயரைத் தொடர்ந்து வழிபடவும்.
ரிஷப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், சுக்கிரன், 4-ல் சூரியன், 5-ல் புதன், 6-ல் சனி, 11-ல் கேது உலவுவது நல்லது. தொலைதூரத் தொடர்பு பயன்படும். நல்ல தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். தெய்வப் பணிகளில் ஈடுபாடு கூடும். பிள்ளைகள் நலம் சீராகும். கலைஞர்களுக்கு அளவோடு நலம் ஏற்படும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். கடல் சார்ந்த தொழிலில் அதிக வருவாய் கிடைக்கும். புதிய பதவி, பட்டங்கள் தேடிவரும். அரசுப் பணிகளில் அனுகூலமான திருப்பம் உண்டாகும். ஆன்மிகவாதிகள், அறப் பணியாளர்கள், ஜோதிடர்கள், ஆராய்ச்சியாளர்களுக்கு முன்னேற்றமான பாதை புலப்படும். அலைச்சல் வீண்போகாது. நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துகள் வாங்குவீர்கள். சொத்துகளால் வருவாயும் கிடைத்துவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 27, 29, செப்.1
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, வடக்கு, மேற்கு, கிழக்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, நீலம், ஆரஞ்சு, பச்சை.
எண்கள்: 1, 5, 6, 7, 8, 9.
பரிகாரம்:
துர்கைக்குச் செவ்வரளி மாலை அணிவித்து, நெய் தீபம் ஏற்றி வழிபடவும்.
மிதுன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன், 4-ல் புதன், 10-ல் கேது உலவுவது சிறப்பு. வார ஆரம்பத்தில் சந்திராஷ்டமம் என்பதால் முதல் இரண்டு நாட்கள் சாதாரணமாகவே இருக்கும். குடும்பத்தில் சலசலப்புகள் இருந்துவரும். பேச்சில் நிதானம் தேவை. யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம். ஜாமீன் கொடுப்பதும் கூடாது. 29-ம் தேதி முதல் நல்ல திருப்பம் உண்டாகும். புனிதப் பணிகளில் ஈடுபாடு கூடும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். கலைஞர்களுக்கு அளவோடு அனுகூலம் உண்டாகும். ஆன்மிகவாதிகள், அறப் பணியாளர்களுக்கு மதிப்பு உயரும். நண்பர்கள், உறவினர்கள் ஓரளவு உதவுவார்கள். வியாபாரத்தில் அதிக லாபம் பெறுவீர்கள். ஆராய்ச்சியாளர்கள், மாணவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். 3-ல் குருவும், 5-ல் சனியும் இருப்பதால் பிள்ளைகள் நலனில் கவனம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள் : ஆகஸ்ட் 29, செப். 1.
திசைகள்: கிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, வான்நீலம், மெரூன்.
எண்கள்: 1, 6, 7.
பரிகாரம்:
குரு, சனிக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
கடக ராசி வாசகர்களே
உங்கள் ராசியில் சுக்கிரன், 2-ல் சூரியன், குரு, 3-ல் ராகு உலவுவது சிறப்பு. முக்கியமானவர்கள் கைகொடுத்து உதவுவார்கள். குடும்பத்தில் குதூகலம் கூடும். சுப காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். அரசு உதவி கிடைக்கும். அரசுப் பணியாளர்களது எண்ணம் நிறைவேறும். தன ஸ்தானாதிபதி சூரியனும் தன காரகன் குருவும் ஒன்று கூடி 2-ல் இருப்பதால் செல்வ நிலை உயரும். திடீர் பொருள் வரவும் உண்டாகும். தந்தையால் அனுகூலம் ஏற்படும். அரசாங்கக் காரியம் இப்போது ஈடேறும். குடும்பத்தினர் உதவி செய்வார்கள். கலைத் துறையினருக்கு அளவோடு நலம் உண்டாகும். வெளிநாட்டுத் தொடர்பு பயன்படும். பேச்சாளர்கள், அரசியல்வாதிகள், ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகளுக்கெல்லம் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவீர்கள்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 27, செப். 1.
திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: புகை நிறம், இளநீலம், பச்சை, பொன் நிறம்.
எண்கள்: 1, 3, 4, 6.
பரிகாரம்:
ஆஞ்சநேயர், சுப்பிரமணியரை வழிபடவும்.
சிம்ம ராசி வாசகர்களே
உங்கள் ஜன்ம ராசியில் சூரியனும், 2-ல் புதனும், 3-ல் சனியும் உலவுவது சிறப்பு. குடும்பத்தில் சலசலப்புகள் குறையும். வியாபாரம் பெருகும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். அரசுப் பணியாளர்களது கோரிக்கைகள் சில நிறைவேறும். பிள்ளைகள் நலம் சீராகும். கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு, கமிஷன் ஏஜன்ஸி தொழிலைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். பொது நலப்பணிகளில் ஆர்வம் கூடும். தொழிலாளர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். உழைப்பு வீண்போகாது. வாரப் பின்பகுதியில் சந்திரன் 8-ம் இடம் மாறி, கேதுவுடன் கூடுவதால் வீண் செலவுகள் ஏற்படும். மன அமைதி குறையும். உடல் நலனில் கவனம் தேவை. புதியவர்களிடம் எச்சரிக்கை தேவை. விஷத்தாலும், விஷ ஜந்துகளாலும் பாதிக்கப்பட நேரலாம்; விழிப்புடன் இருப்பது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 27, 29.
திசைகள்: தென்கிழக்கு, மேற்கு, கிழக்கு.
நிறங்கள்: நீலம், சிவப்பு, ஆரஞ்சு.
எண்கள்: 1, 5, 6, 8.
பரிகாரம்:
செவ்வாய், ராகு, கேதுவுக்கு அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்யவும். விநாயகரை வழிபடவும்.
கன்னி ராசி வாசகர்களே
உங்கள் ராசி அதிபதி, புதன் ராசியிலேயே இருப்பதால் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். வாழ்க்கை வசதிகள் கூடும். பேச்சாற்றல் வெளிப்படும். புதிய யுக்தி முறைகளைக் கையாண்டு வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகு போன்ற துறைகளால் வருவாய் அதிகம் கிடைக்கும். 2-ல் சனியும், 7-ல் கேதுவும், 12-ல் குருவும், சூரியனும் இருப்பதால் குடும்பத்தில் சிறுசிறுபிரச்சினைகள் ஏற்படவே செய்யும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிட வேண்டாம். வாழ்க்கைத்துணைவருக்காகவும், பிள்ளைகளுக்காகவும் செலவு செய்ய வேண்டிவரும். அரசியல், நிர்வாகம், மருத்துவம், ஆன்மிகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னேற்றம் காணக் குறுக்கீடுகள் முளைக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஆகஸ்ட் 27, 29, செப்.1.
திசைகள்: தெற்கு, தென்கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: சிவப்பு, வெண்மை, நீலம், பச்சை.
எண்கள்: 5, 6, 9.
பரிகாரம்:
சிவ வழிபாடு நலம் தரும். நாகராஜரை வழிபடவும். விநாயகரை வழிபட்ட பின்பு எக்காரியத்திலும் ஈடுபடவும்.