ஆன்மிகம்

ஜோதிடம் என்பது அறிவியலா?- 9: சந்திரனை ஏன் திங்கள் என்று அழைக்கிறோம்?

மணிகண்டன் பாரதிதாசன்

நட்சத்திர கூட்டங்கள் 30 பாகை (Degree) அளவில் பிரிக்கப்பட்டு அவைகள் நட்சத்திர மண்டலங்கள் என்று அழைக்கப்பட்டது. அந்த நட்சத்திரக் கூட்டத்தின் தோற்றத்தின்படி அவைகள் பெயர்கள் அமைந்தன.

அவை முறையே,

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

சந்திரன் எந்த வீட்டிலும் பகை பெற மாட்டார். இந்து மதப் புராணப்படி 27 நட்சத்திரங்களும் சந்திரனின் மனைவிகள் என்று அழைக்கப்படுகின்றன. எனவே, மனைவி வீட்டில் கணவன் பகை பெறுவதில்லை என்று கற்பனையுடன் புராணக் கதை சொல்லப்பட்டு இருக்கிறது. கால புருஷ சக்கரத்தில் 8 ஆவது இடமான விருச்சிகத்தில் நீச்சம் பெறுவதால், நமது ஜென்ம ராசிக்கு எட்டாம் இடத்தில் சந்திரன் செல்லும் இடத்தை கொண்டு சந்திர அஷ்டமம் என்ற நிலை கூறப்படுகிறது. அந்த நேரத்தில் நமது மனமானது ஏதேனும் ஒரு விதத்தில் பாதிக்கப்படுகிறது

ஒவ்வொரு நட்சத்திரக் கூட்டத்திலும் (ராசியிலும்) சூரியன் இருக்க, உருவாகும் பௌர்ணமியை வைத்து தமிழ் மாதங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அதனால்தான் திங்கள் எனும் பெயர் சந்திரனுக்கு வந்தது. திங்கள் என்றால் மாதம் என்று தமிழில் பொருள்படும். சந்திரன் மாதங்களை குறிகாட்டும் கிரகமாகும்.

ஒவ்வொரு மாதத்திலும் சந்திரன் எந்த நட்சத்திரம் மீது நின்று பௌர்ணமி உருவாகிறதோ அந்த நட்சத்திரப் பெயரிலே மாதங்கள் பெயரிடப்பட்டன.

இதில் சித்திரா பௌர்ணமி என்பது மிகப் பிரகாசமான சந்திரன் தோன்றும் மாதமென்பதால், சித்திரையிலிருந்து தமிழ் மாதம் தொடங்கியது. மேலும் மேஷத்தில் சூரியன் உச்சம் பெறும் காரணத்தாலே நிலவின் ஒளி அடர்த்தி சித்திரை மாதத்தில் அதிகம்.

உதாரணமாக மேஷத்தில் சூரியன் நின்று அதற்கு நேர் எதிரான துலாமில் சந்திரன் சித்திரை நட்சத்திரத்தில் நிற்க உருவாகும் பௌர்ணமியைக் கொண்டு அந்த மாதத்திற்கு சித்திரை என பெயரிடப்பட்டது. அது போலவே ரிஷபத்தில் சூரியன் நின்று அதற்கு நேர் எதிரான ராசியான விருச்சிகத்தில் சந்திரன் விசாகத்தில் நிற்க உருவாகும் பௌர்ணமி வைசாக அல்லது வைகாசி என பெயரிடப்பட்டது.

(மேலும் அறிவோம்)

SCROLL FOR NEXT