மேஷம்
மேஷ ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரன், 3-ல் சூரியன், 6-ல் செவ்வாய், ராகு உலவுவதால் புனிதப் பணிகளில் ஈடுபடுவீர்கள். நிலபுலங்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். நண்பர்கள், உறவினர்களது சந்திப்பு மன மகிழ்ச்சியைத் தரும். குடும்பத்தில் குதூகலம் நிலவும். பணப் புழக்கம் வாரப் பின்பகுதியில் கூடும். கலைத் துறையினருக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும்.
அரசு மூலம் எதிர்பார்த்த காரியம் இப்போது நிறைவேறும். எதிரிகள் விலகுவார்கள். அயல்நாட்டுத் தொடர்பு வலுக்கும். பெரியவர்கள், மேலதிகாரிகள் ஆகியோரால் நலம் உண்டாகும். 14-ம் தேதி முதல் சுக்கிரன் 3-ம் இடம் மாறுவதால் உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். நல்ல தகவல் வந்து சேரும். 14-ம் தேதி முதல் செவ்வாய் 7-ம் இடம் மாறி, வக்கிர சனியுடன் கூடுவதால் எதிர்ப்புக்கள் சற்று கூடும். பிறரிடம் சுமூகமாகப் பழகுவது நல்லது. வாழ்க்கைத் துணை நலனில் கவனம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 11, 14, 16.
திசைகள்: தென்கிழக்கு, கிழக்கு, தெற்கு, தென்மேற்கு.
நிறங்கள்: வெண்மை, இளநீலம், பச்சை, ஆரஞ்சு, சிவப்பு.
எண்கள்: 1, 4, 6, 9.
பரிகாரம்: கணபதி ஜபம், ஹோமம் செய்யவும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரன், 2-ல் புதன், 6-ல் சனி, 11-ல் கேது உலவுவதால் புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். தோற்றப்பொலிவு கூடும். பெண்களின் எண்ணம் ஈடேறும். குடும்பத்தில் அமைதி நிலவும். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். எலெக்ட் ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும்.
3-ல் குரு, 5-ல் செவ்வாய், ராகு உலவுவதால் பிள்ளைகள் நலனில் கவனம் தேவை. வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும். 14-ம் தேதி முதல் சுக்கிரன் 2-ம் இடம் மாறுவதால் பண வரவு கூடும். பேச்சில் இனிமையும் திறமையும் வெளிப்படும். விருந்து, உபசாரங்களில் பங்கேற்க வாய்ப்புகள் வரும். 14-ம் தேதி முதல் செவ்வாய் 6-ம் இடம் மாறுவதால் மனத்துணிவு கூடும். எதிர்ப்புக்கள் விலகும். இயந்திரப் பணிகள் லாபம் தரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 14, 16
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, வடக்கு
நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம், பச்சை
எண்கள்: 5, 6. 7.
பரிகாரம்: துர்கை அம்மன், தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 2-ல் குரு, 10-ல் கேது, 12-ல் சுக்கிரன் உலவுவதால் குடும்ப நலம் சிறக்கும். பண வரவு அதிகரிக்கும். பேச்சாற்றல் கூடும். காரியத்தில் வெற்றி கிட்டும். கடன் தொல்லை குறையும். ஜலப்பொருட்கள் லாபம் தரும். எதிரிகள் அடங்கி இருப்பார்கள். கணவன் மனைவி உறவு நிலை சீராக இருக்கும். வியாபாரிகள் தங்கள் திறமைக்குரிய பயனைப் பெறுவார்கள். வாழ்க்கை வசதிகளைப் பெருக்க வாய்ப்புகள் உண்டாகும். பெரியவர்கள், தனவந்தர்கள் ஆதரவாக இருப்பார்கள்.
வாரப் பின்பகுதியில் புனிதமான காரியங்களில் ஈடுபடுவீர்கள். 4-ல் செவ்வாய், ராகு இருப்பதால் பயணத்தின்போதும் இயந்திரங்களில் பணிபுரியும்போதும் விழிப்புத் தேவை. தாய் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். 14-ம் தேதி முதல் சுக்கிரன் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவதால் புதிய பொருட்களின் சேர்க்கை நிகழும். பிள்ளைகளால் நலம் உண்டாகும். 14-ம் தேதி முதல் செவ்வாய் 5-ம் இடம் மாறி, வக்கிர சனியுடன் கூடுவது சிறப்பாகாது. வயிறு சம்பந்தமான பிரச்சினைகள் ஏற்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 11, 16
திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு, வடகிழக்கு, வடக்கு
நிறங்கள்: இளநீலம், பச்சை, வெண்மை, மெரூன், பொன் நிறம், மஞ்சள்
எண்கள்: 3, 5, 6, 7
பரிகாரம்: முருகன், துர்கைக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்யவும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாய், ராகு, 11-ல் சுக்கிரன் உலவுவதால் மனோபலம் கூடும். வீர தீர சாகச காரியங்களில் ஈடுபடுவீர்கள். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். போட்டிகளில் வெற்றி கிட்டும். சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். போக்குவரத்து, பயணம் சம்பந்தமான இனங்களில் தொடர்புடையவர்கள் வளர்ச்சி காண்பார்கள். கலைஞர்களுக்கு வெற்றி வாய்ப்புக்கள் கூடும். மாதர்களது எண்ணம் ஈடேறும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும்.
கணவன் மனைவி உறவு நிலை திருப்தி தரும். சூரியனும் புதனும் 12-ல் இருப்பதால் அரசியல், நிர்வாகம், வியாபாரம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன் செயல்படுவது நல்லது. தந்தை நலனில் கவனம் தேவை. 14-ம் தேதி முதல் சுக்கிரன் 12-ம் இடம் மாறுவதால் சுபச் செலவுகள் சற்று அதிகரிக்கும். 12-ம் தேதி முதல் செவ்வாய் 4-ம் இடம் மாறி, வக்கிர சனியுடன் கூடுவதால் சுகம் குறையும். நண்பர்கள், உறவினர்களால் மன அமைதி கெடும். தாய் நலனில் அக்கறை தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 11, 14
திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு, தெற்கு
நிறங்கள்: சிவப்பு, வெண்மை, சாம்பல் நிறம்
எண்கள்: 4, 6, 9
பரிகாரம்: சூரிய நாராயணரை வழிபடவும். ஏழை மாணவர்கள் கல்வி பயில உதவவும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 3-ல் சனி, 11-ல் சூரியன், புதன் உலவுவதால் பொதுநலப்பணிகளில் ஈடுபாடு கூடும். அரசுப் பணியாளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அனுகூலமான போக்கு தென்படும். நிறுவன, நிர்வாகத் துறையினருக்குச் செழிப்புக் கூடும். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் இனங்கள் லாபம் தரும். வியாபாரத்தில் வளர்ச்சி காணலாம். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு கூடும்.
14-ம் தேதி முதல் சுக்கிரன் 11-ம் இடம் மாறுவதால் கலைத் துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். 14-ம் தேதி முதல் செவ்வாய் 3-ம் இடம் மாறுவதால் மனத்துணிவு கூடும். செயலில் வேகம் பிறக்கும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். 2-ல் ராகு, 8-ல் கேது இருப்பதால் குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் ஏற்பட்டு விலகும். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். குரு 12-ல் இருப்பதால் சுபச் செலவுகள் கூடும். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். நிலபுலங்கள் சேரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 11, 14, 16
திசைகள்: கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு
நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை, இளநீலம்.
எண்கள்: 1, 5, 6.
பரிகாரம்: துர்கை, விநாயகரை வழிபடவும். வேதம் படிப்பவர்களுக்கு உதவவும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 9-ல் சுக்கிரன், 10-ல் சூரியன், புதன், 11-ல் குரு உலவுவதால் நல்ல தகவல் வந்து சேரும். நண்பர்கள், உறவினர்களின் சந்திப்பு நலம் தரும். மகப்பேறு அல்லது பிள்ளைகளால் பாக்கியம் கிட்டும். எதிரிகள் விலகுவார்கள். பணப் புழக்கம் அதிகரிக்கும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்ளச் சந்தர்ப்பம் கூடிவரும். பெரியவர்கள், தனவந்தர்கள் ஆதரவாக இருப்பார்கள். தொழில்நுட்பத் திறமை வெளிப்படும். தர்ம குணம் மேலோங்கும்.
தொலைதூரத் தொடர்பால் நலம் உண்டாகும். பொன்னும் பொருளும் சேரும். 14-ம் தேதி முதல் சுக்கிரன் 10-ம் இடம் மாறுவது கோசாரப்படி சிறப்பாகாது என்றாலும் புதனும் சுக்கிரனும் ஒன்று கூடுவதால் சுப காரியங்கள் நிகழும். தொழில் அபிவிருத்தி அடையும். 14-ம் தேதி முதல் செவ்வாய் 2-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் அதிகரிக்கும். பேச்சில் நிதானம் தேவை. இளைய சகோதர, சகோதரிகளால் பிரச்சினைகள் சூழும். வாழ்க்கைத் துணை நலனில் கவனம் தேவை. எக்காரியத்திலும் நிதானம் வேண்டும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: ஜூலை 11, 14, 16
திசைகள்: கிழக்கு, வடகிழக்கு, வடக்கு, தென்கிழக்கு
நிறங்கள்: வெண்மை, இளநீலம், பச்சை, ஆரஞ்சு, பொன் நிறம்
எண்கள்: 1, 3, 5, 6
பரிகாரம்: துர்கை, விநாயகர், முருகனை வழிபடவும். பிறரிடம் சுமூகமாகப் பழகவும்.