துலாம் ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் புதனும், 3-ல் சுக்கிரனும், 11-ல் ராகுவும் உலவுவது சிறப்பு. தெய்வப் பணிகளிலும், தர்மப்பணிகளிலும் ஈடுபாடு உண்டாகும். செய்து வரும் தொழில் விருத்தி அடையும். பொருள் திரட்டுவதில் ஆர்வம் கூடும். திரவப் பொருட்கள் லாபம் கொண்டுவரும். நண்பர்கள் நலம் புரிய முன்வருவார்கள். உறவினர்களாலும் அனுகூலம் ஏற்படும். பயணத்தால் முக்கியமானதொரு எண்ணம் நிறைவேறும்.
பிற மொழி, மத, இனக்காரர்களது தொடர்பும் அதனால் அனுகூலமும் ஏற்படும். உடன்பிறந்த சகோதரிகள் உதவுவார்கள். காடு, மலை, வனாந்தரங்களில் தொழில் புரிபவர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். குடும்ப நல முன்னேற்றத்துக்காகச் செலவு செய்வீர்கள். கர்ப்பிணிப் பெண்கள் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 18 (பிற்பகல்), 20, 23 (பிற்பகல்).
திசைகள்: தென் மேற்கு, தென் கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: சாம்பல் நிறம், இள நீலம், பச்சை. l எண்கள்: 4, 5, 6.
பரிகாரம்: கணபதி, தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
விருச்சிக ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் சுக்கிரனும், 3-ல் செவ்வாயும், 10-ல் ராகுவும், 11-ல் குருவும் உலவுவது நல்லது. வார ஆரம்பம் சாதாரணமாகவே காணப்படும். 19-ம் தேதி முதல் நல்ல திருப்பம் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் நலம் உண்டாகும். தான, தர்மப் பணிகளிலும், தெய்வப் பணிகளிலும் ஈடுபாடு கூடும்.
தொலைதூரப் பயணம் நலம் தரும். நல்லவர்களின் தொடர்பும் அதனால் அனுகூலமும் பெறுவீர்கள். அயல்நாட்டு வணிகம் சிறக்கும். தோல் பொருட்கள், போக்குவரத்துச் சாதனங்கள் மூலம் வருவாய் கிடைக்கும். கலைஞர்களுக்குச் செழிப்புக் கூடும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். திடீர்ப் பொருள் வரவுக்கு இடமுண்டு. வேலை தேடுபவர்களுக்கு வாரப் பின்பகுதியில் அதற்கான சந்தர்ப்பம் கூடிவரும். பதவி உயர்வு, இடமாற்றம் கிடைக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 20, 23 (பிற்பகல்).
திசைகள்: தென் மேற்கு, வட கிழக்கு, தென் கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: வெண்சாம்பல் நிறம், பொன் நிறம், சிவப்பு. l எண்கள்: 3, 4, 6, 9.
பரிகாரம்: சனி, கேதுவுக்கு அர்ச்சனைகள் செய்யவும்.
தனுசு ராசி வாசகர்களே
உங்கள் ஜன்ம ராசியில் சுக்கிரனும், 3-ல் கேதுவும், உலவுவது சிறப்பு. தோற்றப் பொலிவு கூடும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்களின் சேர்க்கை நிகழும். கணவரால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் அனுகூலம் உண்டாகும். கூட்டுத் தொழில் லாபம் தரும். கலைத்துறையினருக்கு வெற்றி வாய்ப்புகள் கூடும். இதர கிரகங்களின் சஞ்சாரம் அனுகூலமாக இல்லாததால் பேச்சிலும் செயலிலும் நிதானம் தேவை.
எக்காரியத்திலும் அவசரம் கூடாது. நீர் நிலைகள், சறுக்கும் மற்றும் வழுக்கும் இடங்களில் செல்லும்போது பாதுகாப்புத் தேவை. பொருள் வரவைக் காட்டிலும் செலவுகள் கூடும். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது அவசியம். குடும்பத்தை விட்டு வெளியூர், வெளிநாடு செல்லும் நிலை சிலருக்கு ஏற்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 18 (பிற்பகல்), 23 (பிற்பகல்).
திசைகள்: வட மேற்கு, தென் கிழக்கு.
நிறங்கள்: மெரூன், இள நீலம், வெண்மை. l எண்கள்: 6, 7.
பரிகாரம்: நவக்கிரகங்களை வழிபடுவது நல்லது. மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றவர்களுக்கு உதவவும்.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 9-ல் குருவும், 11-ல் சூரியனும்; புதனும்; சனியும், 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பு. எதிர்ப்புகள் விலகும். காரியானுகூலம் உண்டாகும். பண வரவு திருப்தி தரும். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். கணவன்-மனைவி உறவு நிலை சீராகும். பெரியவர்கள், தனவந்தர்கள் ஆகியோரது ஆசிகளும் ஆதரவும் கிடைக்கும். கடல் வாணிபம் லாபம் தரும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு வரவேற்பு கூடும். புதிய முயற்சிகள் கைகூடும். பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும்.
ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில்களில் ஈடுபட்டுப் பயன் பெறச் சந்தர்ப்பம் கூடிவரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். தர்ம காரியங்கள், தெய்வ காரியங்களில் ஈடுபாடு கூடும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். வாரப் பின்பகுதியில் பயணத்தால் சிறு சங்கடம் ஏற்படும். புதியவர்களிடம் எச்சரிக்கை தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 18 (பிற்பகல்), 20.
திசைகள்: தென் கிழக்கு, வடக்கு, வட கிழக்கு, மேற்கு.
நிறங்கள்: நீலம், பச்சை, பொன் நிறம். l எண்கள்: 1, 3, 5, 6, 8.
பரிகாரம்: நாக தேவதைகளைப் பூஜிப்பது நல்லது.
கும்ப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன்; புதன்; சனியும், 11-ல் சுக்கிரனும் உலவுவது நல்லது. நிர்வாகத்திறமை கூடும். வியாபாரத்தில் முன்னேற்றம் காண வழி பிறக்கும். முக்கியமானவர்களின் சந்திப்பு நிகழும். அதனால் அனுகூலமும் ஏற்படும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் முன்னணிக்கு உயருவார்கள். கலைஞர்கள், மாதர்களுக்குச் செழிப்புக் கூடும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும்.
பெற்றோராலும், வாழ்க்கைத் துணைவராலும் நலம் உண்டாகும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் வளர்ச்சி காண்பார்கள். நண்பர்கள், உறவினர்களால் ஓரளவு நலம் உண்டாகும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். தொழில் ரீதியாகச் சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். இயந்திரப் பணியாளர்கள், இன்ஜினீயர்கள் பொறுப்புடன் காரியமாற்றுவது நல்லது. சகோதர நலனில் கவனம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 18 (பிற்பகல்), 20, 23 (பிற்பகல்).
திசைகள்: தென் கிழக்கு, மேற்கு, வடக்கு, கிழக்கு.
நிறங்கள்: இள நீலம், பச்சை, கரு நீலம், ஆரஞ்சு. | எண்கள்: 1, 5, 6, 8.
பரிகாரம்: துர்கை, சுப்பிரமணியரை வழிபடவும்.
மீன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 6-ல் ராகுவும், 7-ல் குருவும், 11-ல் செவ்வாயும் உலவுவது சிறப்பு. பிள்ளைகளாலும், வாழ்க்கைத் துணைவராலும் நலம் உண்டாகும். சுகமும் சந்தோஷமும் கூடும். மகப்பேறு பாக்கியம் கிட்டும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண வாய்ப்புகள் கூடிவரும். பொருளாதார நிலை திருப்தி தரும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் கூடிவரும். தொலைதூரத் தொடர்பு பயன்படும்.
வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் லாபம் தரும். கடல்சார்ந்த பொருட்களால் ஆதாயம் கிடைக்கும். வழக்கில் வெற்றி கிடைக்கும். போட்டிப் பந்தயங்களிலும்; விளையாட்டு விநோதங்களிலும் ஈடுபட்டுப் பரிசுகளையும் பாராட்டுகளையும் பெற வாய்ப்பு உருவாகும். உடன்பிறந்தவர்கள் நலம் புரிவார்கள். நிலபுலங்கள் லாபம் தரும். புதிய சொத்துகள் சேரும். தந்தை நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: நவம்பர் 18 (பிற்பகல்), 20, 23 (பிற்பகல்).
திசைகள்: தென் மேற்கு, வட கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: புகைநிறம், பொன் நிறம், சிவப்பு l எண்கள்: 3, 4, 9.
பரிகாரம்: மகாலட்சுமி, விநாயகரை வழிபடவும்.