ஜோதிடத்தில் நவகிரகங்கள் பன்னிரண்டு ராசிகளில் மற்றும் 27 நட்சத்திரங்களில் இருக்கும் நிலையைக் கொண்டே மனித வாழ்க்கை நிர்ணயம் செய்யப்படுகிறது. என்பதை சென்ற பதிவுகளில் பார்த்தோம்.
ஜாதகக் கட்டத்தில் பூமி எங்கே இருக்கிறது?
தன்னை பகுத்தறிவாளர்கள் என சொல்லிக்கொள்ளும் பலர் கேட்கும் வினாக்களில் மிக முக்கிய வினா ஒன்று "ஜாதகத்தில் பல கிரகங்கள் குறிக்கும் ஜோதிடர்கள் ஏன் பூமியை விட்டுவிடுகின்றனர்?". இதற்கு பதிலுண்டு.
ஜோதிடம் வானவியல் சார்ந்த கலை என்று சென்ற பதிவுகளில் பார்த்தோம். இப்போது அதற்குரிய இன்னொரு விளக்கம். ஒளியின் பயணம் எப்போதும் நேர்கோட்டில் அமையும் என்று அறிவியலின் ஒரு பகுதியான இயற்பியல் கூறுகிறது. இதுவே ராமன் விளைவில் மூலமாக கொண்டு விளக்கப்பட்டிருக்கும். அறிவியலின் கூற்றுப்படி சூரிய ஒளியானது பூமியை சென்றடைய 7 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். ஆதாவது பிரபஞ்சத்தில் சூரிய ஒளி பயணித்து பூமியை அடைய 7 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். இந்த நிகழ்வானது நேர்க்கோட்டில் அமையும்.
இந்த அறிவியல் கூற்றுப்படி ஜாதக கட்டத்தில் சூரியனுக்கு ஏழாமிடத்தில் பூமி இருக்கிறது. உதாரணமாக சூரியன் மேஷத்தில் இருக்கும் சமயம் பூமியானது துலாமில் இருக்கும். சூரியன் மேஷத்தில் இருப்பதை சித்திரை மாதம் என்கிறது ஜோதிடம். அங்கே சூரியன் உச்ச நிலை பெறும் எனவும் கூறப்படுகிறது. சித்திரை மாதத்தில் சூரியன் தனது பலமான வெப்ப கதிர்களை பூமியில் செலுத்தும் எனவும் அதே சமயம் பூமி சுற்றி வரும் நீள்வட்டப்பாதையில் குறுகளான ஆரம் கொண்ட பாதையில் சித்திரை மாதத்தில் பயணிக்கும் என்பதே இதில் இருக்கும் அறிவியல் விளக்கம்.
இதை அமாவாசை மற்றும் பௌர்ணமி அன்று இருக்கும் கிரகநிலை தெளிவாகக் கூறும். ஜாதக கட்டத்தில் அமாவாசை அன்று சூரியன் சந்திரன் ஒரே நட்சத்திரத்தில் இருக்கும். ஆதாவது சூரியனுக்கும் பூமிக்கும் நடுவில் சந்திரன் இருக்கும். அதுபோல பௌர்ணமி அன்று சூரியன் சந்திரன் இருவரும் எதிரெதிர் நட்சத்திரத்தில் இருக்கும். ஆதாவது சூரியன் சந்திரன் ஒன்றுக்கொன்று எதிர்திசையில் இருக்கும். இதன் விளக்கமாக கூற சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி இருக்கும்.
எனவே ஜாதக கட்டத்தில் சூரியனுக்கு ஏழாமிடத்தில் பூமி இருக்கிறது எனலாம்.
(மேலும் அறிவோம்)