ரமலான் புனித மாதத்தில் சென்னை திருவல்லிக்கேணி புதிய உயிர்ப்பையும் வண்ணங்களையும் அடையும். முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா முதல் தொழுகைக்குப் பயன்படுத்தும் மணிமாலை, அணிகலன்கள் வரை அனைத்துப் பொருட்களும் கிடைக்கும் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலைக் கடைகள் ரமலான் மாதத்தில் உற்சாகம் கொள்ளும். ருமானி சேமியா, பிரத்யேக வாசனை கொண்ட நோன்புக்கஞ்சி, நோன்பை முடிக்கும் சிற்றுண்டியாக வடைகள் மற்றும் சமோசாக்களும் ரமலான் மாதத்தில் திருவல்லிக்கேணியை நிறைக்கின்றன. ரமலான் மாதத்தில் திருவல்லிக்கேணி என்ற சிறுநகரம் கொள்ளும் உயிர்ப்பின் காட்சிகள் இவை…