அல்லாஹூ மூன்று செயல்களை வெறுக்கிறான்.
l தேவையற்ற பேச்சுகளைப் பேசுவது
l பொருட்களை வீண் விரயம் செய்வது
l அதிகம் கேள்விகள் கேட்பது
இந்த மூன்று பொன்மொழிகளும் புகாரியில் காணக் கிடைக்கின்றன. அதிகப் பேச்சும் அதிகச் செலவும் அதிகமான கேள்விகளும் ஆபத்தை உண்டாக்கும். சில சமயங்களில் அதிகமாகப் பேசிக்கொண்டிருந்தால் கேட்பவர்கள் வெறுத்துவிடுவார்கள். அதிகமாகச் செலவு செய்வதால் பாவங்களையும் விலைக்கு வாங்கும் நிலை வந்துவிடும். அதிகமான கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருப்பதால் சந்தேகமும் சஞ்சலமும் உண்டாகக் காரணமாகி விடும்.
தேவையற்ற வீண் பேச்சும் தேவையற்ற வீண் விவாதமும் தேவையற்ற வீண் கேள்விகளும் வாழ்க்கையில் இருத்தல் கூடாது. இவை அனைத்தும் உயர்வின் எதிரிகள். அளவான பேச்சும் அளவான செலவும் அவசியமான கேள்விகளுமே உயர்வின் படிகள்.