ஆன்மிகம்

திருச்சானூர் பத்மாவதி கோயில் பிரம்மோற்சவம் நவ.29-ல் துவக்கம்

செய்திப்பிரிவு

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் 9 நாள் நடக்க உள்ள பிரம்மோற்சவ விழா வரும் 29-ம் தேதி தொடங்குகிறது.

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வரும் 29-ம் தேதி தொடங்கி டிசம்பர் 7-ம் தேதி வரை நடக்க உள்ளது. தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு வாகனங்களில் பத்மாவதி தாயார் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார். பிரம்மோற்சவ விழாவுக்கான ஏற்பாடுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தினர் செய்துவருகின்றனர்.

தேவஸ்தான செயல் அலுவலர் கனுமோரி பாபிராஜூ, இணை செயல் அலுவலர் பாஸ்கர் முன்னிலையில் திருப்பதி மற்றும் திருச்சானூர் பகுதிகளில் உள்ள பெண் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் அழைப்பு விடுக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடந்தது.

இதில், பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், வளையல் போன்ற மங்கலப் பொருட்கள் வழங்கி பிரம்மோற்சவ விழாவுக்கான அழைப்பு விடுத்தனர்.

SCROLL FOR NEXT