ஆன்மிகம்

ஜோதிடம் என்பது அறிவியலா?- 11: புதன் மற்றும் குரு தரும் அறிவுகளின் வேறுபாடு

மணிகண்டன் பாரதிதாசன்

அறிவும் நுண்ணறிவும்

புதன் தருவது புத்தி (அ) அறிவு. குரு தருவது நுண்ணறிவு (அ) பகுத்தறிவு. இதில் அறிவு (Intelligence) மற்றும் (Intellect) நுண்ணறிவு. இவற்றின் வேறுபாடு என்ன?

அறிவு (Intelligence) - நல்லவை மற்றும் கெட்டவை அனைத்தும் உணர்ந்து அறிந்து கொள்ளும் திறன்.

நுண்ணறிவு (or) பகுத்தறிவு (Intellect) - நல்லவை மற்றும் கெட்டவை பகுத்து அறிந்து, பின் அவற்றை நம் வாழ்வில் பயன்படுத்தும் திறன்.

அறிவு (அல்லது) புத்தி என்பதன் அர்த்தம் 'உணர்ந்து பின் அறிதல்' என்பதாகும். அதாவது, நம் ஐம்புலன்களால் உணர்ந்து கற்றுக்கொள்வது. எடுத்துக்காட்டாக, இனிப்பு மற்றும் துவர்ப்பு எனும் சுவைகளை எப்படி இருக்கும் என்பதை நம் புலன்களில் ஒன்றான நாக்கின் மூலமே உணர்கிறோம். இந்த சுவைகளை உணர்ந்தால் ஒழிய, நீங்கள் உணர்ந்த சுவையை வெறும் வார்த்தைகளால் விவரிக்க இயலாது. இதனாலே, புதன் ஐம்புலன்கள் பெறும் (உணர்ந்து அறியும்) அறிவினை தரும் கிரகமாகிறார்.

குரு என்பவரும் அறிவினை தரும் கிரகம் தான். ஆனால் அவர் தருவது நுண்ணறிவு. குரு பகுத்தறிவின் காரகன். ஆதாவது, உண்மைகளை 'பகுத்து உணர்ந்து, பின் அறிதல்'. எனவே தான் நுண்ணறிவு கொண்ட மனிதர்கள் 'குரு' என்ற ஸ்தானத்திற்கு பொருத்தமானவர்களாக உள்ளனர். 'கு' என்றால் இருள். 'ரு' என்றால் பிரகாசமான ஒளி என்று பொருள். மன இருளை அகற்றி, ஞான ஒளி தருபவர் 'குரு' என்ற நிலையை அடைவார்கள்.

எனவே, புதன் - அறிவு / புத்தி தருபவர், குரு - நுண்ணறிவு / பகுத்தறிவு தருபவர்.

புதன் கேந்திரங்களில் குரு அமைந்து ஆட்சி, உச்சம், நட்பு பெறுதல் சிறப்பு. இதனால், ஜாதகன் நுண்ணறிவு கொண்டவனாகவும், தீர்க்க சிந்தனை கொண்டவனாக குரு மாற்றுவார்.

(மேலும் அறிவோம்)

SCROLL FOR NEXT