ஆன்மிகம்

ஆகமங்களை உபதேசிப்பவர் சதாசிவர்

என்.ராஜேஸ்வரி

சிவன் ஐந்து முகங்களுடன் சதாசிவ மூர்த்தியாக - நான்கு முகங்கள் நான்கு திசையை நோக்கியும், ஒரு முகம் நான்குக்கும் மேலேயும், எட்டுக் கரங்களுடன் காட்சி அளிக்கிறார். சதாசிவ மூர்த்தி சிலை அரிதாக உள்ளது. பல கோயில்களில் ஓவியமாக வரையப்பட்டுள்ளது. சதாசிவர் சைவ சித்தாந்தத்தில் உள்ள 28 ஆகமங்களை உபதேசிக்கும் கடவுள் எனச் சொல்லப்படுகிறது என்ற அரிய தகவலைக் கொண்டுள்ளது இந்நூல்.

இயற்றியோரும் அவர்களது கால கட்டமும், அறுபத்து மூன்று நாயன்மார்களின் விவரம் மற்றும் அவர்கள் பாடிய திருத்தலங்கள், கோயில்களின் புகைப்படங்கள், குறிப்புக்கள், தேவாரத் திருத்தலங்கள், திருவாசகத் திருத்தலங்கள், திவிசைப்பா, திருப்பல்லாண்டுத் திருத்தலங்கள் ஆகியவை படங்களுடன் விளக்கமும் கொண்டு அமைந்துள்ள இப்புத்தகத்தில் கட்டுரைகள் அனைத்தும் எளிமையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பன்னிரு திருமுறைத் திருத்தலங்கள் ஒரு வழிகாட்டி கையேடு.

ஆசிரியர்: தி. அனந்த நாராயணன்

விலை: ரூ.300 (டிவிடி உள்ளடக்கியது)

வெளியீடு: T. அனந்த நாராயணன், ஸ்ரீநிகேதன்,

1. ராஜா தெரு, மந்தைவெளி,

சென்னை 600 028.

மின்னஞ்சல்: tan.vijaya@gmail.com

SCROLL FOR NEXT