ஆன்மிகம்

ராமகிருஷ்ணரின் மொழிகள் - குழந்தைகள் உன்னுடையவை அல்ல

செய்திப்பிரிவு

எல்லா கடமைகளையும் செய், ஆனால் மனத்தை இறைவனிடம் வை. மனைவி, மக்கள், தாய், தந்தை எல்லாருடனும் சேர்ந்து வாழ். அவர்களுக்குச் சேவை செய். அதேவேளையில் அவர்கள் உன்னுடையவர்கள் அல்ல என்பதை உள்ளத்தில் தெரிந்து வைத்துக் கொள்.

பணக்கார வீட்டு வேலைக்காரி அங்கே எல்லா வேலைகளையும் செய்கிறாள். ஆனால் அவளது மனம் கிராமத்தில் உள்ள தன் வீட்டையே சதா நினைத்துக் கொண்டிருக்கிறது. அவள் அந்தப் பணக்காரரின் குழந்தைகளைத் தன் குழந்தைகளைப் போலவே கவனிக்கிறாள்; என் ராமன், என் ஹரி என்றெல்லாம் சீராட்டுகிறாள். இருந்தாலும், அந்தக் குழந்தைகள் தன்னுடையவர்கள் அல்ல என்பது அவளுக்கு நன்றாகத் தெரியும்.

ஆமை தண்ணீரில் இங்குமங்கும் திரிகிறது. ஆனால் அதன் மனமெல்லாம் எங்கிருக்கும் தெரியுமா? நான் கரையில் இட்ட முட்டைகளின் மீது. அதுபோல் இல்லறத்தில் உனக்குரிய கடமைகளையும் செய், ஆனால் மனத்தை இறைவனிடம் வை.

SCROLL FOR NEXT