மேஷ ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு அதிபதி செவ்வாய் 5-ல் இருந்தாலும் குருவுடன் கூடியிருப்பதால் நலம் புரிவார். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். குடும்பத்தில் குதூகலம் கூடும். பணநடமாட்டம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் சீராகும். மன மகிழ்ச்சி அதிகரிக்கும். பேச்சில் இனிமையும் திறமையும் கூடும். கேளிக்கை, உல்லாசங்களிலும் விருந்துகளிலும் கலந்துகொண்டு மகிழ்வீர்கள். நல்ல தகவல் வந்து சேரும். நண்பர்களும் உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். மக்கள் நலம் மகிழ்ச்சி தரும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். அரசு சம்பந்தமான காரியங்கள் நிறைவேறும். பயணத்தால் காரியம் ஈடேறும். மருத்துவர், ஆசிரியர், உத்தியோகஸ்தர்களுக்குச் செழிப்பு கூடும். 4-ம் தேதி முதல் வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். மாணவர்களது நிலை உயரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 3, 4, 7.
திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, தெற்கு.
நிறங்கள்: புகை நிறம், பொன்நிறம், இளநீலம், வெண்மை, ஆரஞ்சு.
எண்கள்: 1, 3, 4, 6, 9.
பரிகாரம்:
சனிக்கு அர்ச்சனைகளைச் செய்வது நல்லது. மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்யவும்.
ரிஷப ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 4-ல் புதனும் சுக்கிரனும், 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். நண்பர்கள், உறவினர்களது சந்திப்பும் அதனால் அனுகூலமும் பெறுவீர்கள். புதிய சொத்துக்கள் சேரும். ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்களின் சேர்க்கையும் நிகழும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் நிலை உயரப் பெறுவார்கள். மாணவர்களது திறமை பளிச்சிடும். கலைத் துறையினருக்கு எதிர்ப்புகள் இருக்குமென்றாலும் அதைக் கடந்து முன்னேற வழி பிறக்கும். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். இடமாற்றமும் நிலை மாற்றமும் உண்டாகும். கற்பனை ஆற்றல் அதிகரிக்கும். வாரப் பின்பகுதியில் குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். பண வரவு சற்று அதிகரிக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 3, 4, 7.
திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: மெரூன், வெண்மை, இளநீலம், பச்சை.
எண்கள்: 5, 6, 7.
பரிகாரம்:
பராசக்தியை வழிபடவும். ஆதரவற்ற பெண்களுக்கு உதவுவது நல்லது.
மிதுன ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 3-ல் சுக்கிரனும் செவ்வாயும் 6-ல் சனியும் 10-ல் கேதுவும் உலவுவதால் வெற்றி வாய்ப்புகள் அதிகரிக்கும். உற்சாகம் பெருகும். எதிரிகள் ஓடி ஒளிவார்கள். போட்டிகள், பந்தயங்கள், விளையாட்டுகள் ஆகியவற்றில் ஈடுபாடு உள்ளவர்களுக்குப் பரிசுகளும் பாராட்டுகளும் கிடைக்கும். இயந்திரப் பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். தகவல் தொடர்பு இனங்கள் ஆக்கம் தரும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள்.
சூரியன், குரு, ராகு ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் பெற்றோர் நலனில் கவனம் தேவை. உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக்கொள்ளவும். பொருளாதாரக் காரியங்களில் விழிப்பு தேவை. நண்பர்களே விரோதிகளாவார்கள் என்பதால் எச்சரிக்கை தேவை. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. வியாபாரம் பெருகும். மாணவர்களது நிலை உயரும். நண்பர்கள், உறவினர்களால் அளவோடு நலம் உண்டாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள் : அக்டோபர் 3, 4, 7.
திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு, மேற்கு, தெற்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, சிவப்பு, நீலம், மெரூன்.
எண்கள்: 6, 7, 8, 9.
பரிகாரம்:
புதன், குரு ஆகியோருக்குப் பிரீதி செய்யவும்.
கடக ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் குருவும் சுக்கிரனும் 3-ல் சூரியனும் ராகுவும் உலவுவது சிறப்பாகும். நல்ல எண்ணங்கள் மனதில் உருவாகவும் நிறைவேறவும் சந்தர்ப்பம் கூடிவரும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் வருவாய் வந்து சேரும். வியாபாரம் பெருகும். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். மாதர்களது எண்ணம் நிறைவேறும். மாணவர்கள் நிலை உயரும். ஆசிரியர்களுக்கும் பேராசிரியர்களுக்கும், சட்ட வல்லுனர்களுக்கும் பேச்சாளர்களுக்கும் முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். பயணத்தால் அனுகூலம். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும். சொத்துக்களால் ஆதாயம் கிடைக்கும். ஏற்றுமதி, இறக்குமதி இனங்கள் லாபம் தரும். 4-ம் தேதி முதல் புதன் 3-ம் இடத்திற்கு மாறுவது சிறப்பாகாது.
அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 3, 4, 7.
திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு, கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: ஆரஞ்சு, புகை நிறம், இளநீலம், பொன் நிறம், சிவப்பு.
எண்கள்: 1, 3, 4, 5, 6, 9.
பரிகாரம்: சனி, கேது ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்துகொள்வது நல்லது.
சிம்ம ராசி வாசகர்களே!
உங்கள் ராசியில் சுக்கிரன் உலவுவது ஒன்றே கோசாரப்படி சிறப்பானதாகும். இதர கிரகங்கள் அனுகூலமாக இல்லாததால் குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். வீண்வம்பு, சண்டைகளைத் தவிர்ப்பது நல்லது. பொருளாதார நிலை சாதாரணமாகவே காணப்படும். அதிகம் உழைக்க வேண்டிவரும். உடல் சோர்வு ஏற்படும். தாய் நலம் பாதிக்கும்.
எதிரிகள் இருப்பார்கள். கடன் உபத்திரவம் உண்டாகும். நண்பர்கள், உறவினர்களிடம் எச்சரிக்கையுடன் பழகுவது நல்லது. முன்பின் தெரியாதவர்களை நம்பி நகையையோ, பணத்தையோ கொடுக்க வேண்டாம். கலைத் துறையினருக்கு அளவோடு அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவி உறவு நிலை சீராக இருந்துவரும். 4-ம் தேதி முதல் புதன் 2-ம் இடத்திற்கு மாறுவதால் பண வரவு சற்று அதிகரிக்கும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் நிகழ வாய்ப்புக் கூடிவரும். வியாபாரிகளுக்கு மந்த நிலை விலகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 3, 4.
திசை: தென்கிழக்கு.
நிறங்கள்: வான் நீலம், வெண்மை
எண்: 6.
பரிகாரம்:
நவக்கிரக வழிபாடு அவசியமாகும்.
கன்னி ராசி வாசகர்களே!
உங்கள் ராசிக்கு 3-ல் சனியும், 12-ல் சுக்கிரனும் உலவுவது சிறப்பாகும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயனைப் பெற்றுவருவீர்கள். பொதுப்பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். தொழிலாளர்களது கோரிக்கைகள் சில இப்போது நிறைவேறும். ஜலப் பொருட்கள் லாபம் தரும். எண்ணெய் வகையறாக்களாலும் ஆதாயம் கிடைக்கும். கலைத் துறையினருக்கு அளவோடு வளர்ச்சி தெரியவரும். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் அலைச்சல் அதிகமாகும். கணவன் மனைவி இடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். கூட்டுத் தொழிலில் கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள், இயந்திரப் பணியாளர்கள் ஆகியோர் கடமைகளைச் சரிவர ஆற்றிவந்தால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம். பயணத்தின்போது பாதுகாப்பு தேவை. 4-ம் தேதி முதல் தொழிலில் வளர்ச்சி காண வழி பிறக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 3, 4, 7.
திசைகள்: தென்கிழக்கு, மேற்கு.
நிறங்கள்: வெண்மை, நீலம்.
எண்கள்: 6, 8.
பரிகாரம்:
குரு, செவ்வாய், ராகு, கேது ஆகிய கிரகங்களுக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்துகொள்வது நல்லது.