துலாம் ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு அதிபதி சுக்கிரன் 11-ம் இடத்தில் குரு, செவ்வாய் ஆகியோருடன் கூடியிருப்பது விசேஷம். தொலை தூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். பெற்றோரால் அளவோடு நலம் உண்டாகும். செய்துவரும் தொழில் விருத்தி அடையும். கற்பனை வளம் கூடும். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். தர்ம சிந்தனை வளரும். உடன்பிறந்தவர்கள், பிள்ளைகளால் அனுகூலம் உண்டாகும். விளையாட்டு விநோதங்களில் வெற்றி கிட்டும். தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு வாய்ப்பு கூடிவரும். வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு, இடமாற்றம், ஊதிய உயர்வு ஆகியவை கிடைக்கும். பெரியவர்களும் தனவந்தர்களும் ஆசி புரிவதுடன் ஆதரவாகவும் இருப்பார்கள்.
அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 31, நவம்பர் 2.
திசைகள்: வடமேற்கு, வடகிழக்கு, தெற்கு, தென்கிழக்கு.
நிறங்கள்: மெரூன், இளநீலம், வெண்மை, பொன் நிறம், சிவப்பு.
எண்கள்: 3, 6, 7, 9.
பரிகாரம்: காளி அல்லது துர்க்கைக்கு நெய் விளக்கேற்றி வழிபடவும்.
***
விருச்சிக ராசி வாசகர்களே
உங்கள் ராசிநாதன் செவ்வாய் 10-ல் வலுத்திருக்கிறார். ராகு 11-ல் உலவுவது சிறப்பு. நல்லவர்களது தொடர்பு நலம் சேர்க்கும். வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புகள் கனிந்துவரும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் தொழிலுக்கு உறுதுணையாக இருப்பார்கள். நிலபுலங்களால் ஆதாயம் கிடைக்கும். புதிய சொத்துகள் சேரும். பொறியியல், சட்டம், காவல், ராணுவம் துறைகளைச் சேர்ந்தவர்கள் சாதனை படைப்பார்கள். துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். மதிப்பு உயரும். வாரப் பின்பகுதியில் தொலைதூரத் தொடர்பு பயன்படும். தெய்வப்பணிகளிலும் தர்மப் பணிகளிலும் ஈடுபாடு கூடும். கணவன்-மனைவி உறவு நிலை சீராக இருக்கும். ஜன்ம ராசியில் சனி இருப்பதால் அதிகம் உழைக்க வேண்டிவரும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 30, நவம்பர் 3 (காலை).
திசைகள்: தென்மேற்கு, தெற்கு.
நிறங்கள்: சிவப்பு, வெண்சாம்பல் நிறம்
எண்கள்: 4, 9.
பரிகாரம்: ஆதித்தன், ஆஞ்சநேயரை வழிபடவும்.
***
தனுசு ராசி வாசகர்களே
உங்கள் ராசிநாதன் குரு 9-ல் உலவுவது மிகவும் சிறப்பு. சூரியன், செவ்வாய், புதன், சுக்கிரன், ராகுவின் சஞ்சாரமும் அனுகூலமாக இருப்பதால் எதிர்ப்புகள் விலகும். வழக்கில் நல்ல திருப்பம் ஏற்படும். வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புகள் கூடிவரும். பொருளாதார நிலை திருப்தி தரும். நல்லவர்களின் ஆசிகளும் ஆதரவும் கிடைக்கும். கணவன் மனைவி உறவு நிலை சீராகும். கூட்டுத் தொழில் லாபம் தரும். முக்கியப் பொறுப்புகளும் பதவிகளும் கிடைக்கும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகமாகும். தந்தையாலும் பிள்ளைகளாலும் அனுகூலம் உண்டாகும். கணிதம், பத்திரிகை, தரகு, மருத்துவம், ரசாயனம், ஆன்மிகம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயருவார்கள். அரசு உதவி கிடைக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 30, 31, நவம்பர் 2 (முற்பகல்).
திசைகள்: தென்மேற்கு, வடகிழக்கு
நிறங்கள்: பச்சை, புகை நிறம், வெண்மை, இளநீலம், பொன் நிறம், சிவப்பு.
எண்கள்: 1, 3, 4, 5, 6, 9.
பரிகாரம்: சனி, கேதுவுக்கு அர்ச்சனை செய்யவும். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிசெய்யவும்.
மகர ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும், 8-ல் சுக்கிரனும், 10-ல் சூரியனும் புதனும், 11-ல் ராசிநாதன் சனியும் உலவுவது சிறப்பு. ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு கூடும். கலைஞர்களுக்கு அளவோடு வளர்ச்சி தெரியவரும். மூத்த சகோதர, சகோதரிகளால் அனுகூலம் உண்டாகும். தொழில்நுட்பத் திறமை வெளிப்படும். நண்பர்கள், உறவினர்கள் உதவி புரிய முன்வருவார்கள். தந்தையால் நலம் கூடும். எதிரிகள் இருந்தாலும் சமாளிப்பீர்கள். வியாபாரம், கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு தொழில் ஆக்கம் தரும். தொழிலாளர்களது கோரிக்கைகள் சில இப்போது நிறைவேறும். கணவன்-மனைவி இடையே நல்லுறவு நீடிக்கும். பொருள் கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கை தேவை. இயந்திரப் பணியாளர்கள் பொறுப்புடன் காரியமாற்றவும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 31, நவம்பர் 2.
திசைகள்: மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, தென்கிழக்கு
நிறங்கள்: பச்சை, நீலம், மெரூன்.
எண்கள்: 1, 5, 6, 7, 8.
பரிகாரம்: முருகன், தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்வது நல்லது.
***
கும்ப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 7-ல் குருவும், 10-ல் சனியும் உலவுவது சிறப்பு. வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புகள் கூடிவரும். பிள்ளைகளாலும் வாழ்க்கைத்துணைவராலும் நலம் ஏற்படும். பண வரவு சற்று அதிகரிக்கும். புத்திசாலித்தனம் பளிச்சிடும். தந்தை நலம் சீராகும். ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புகள் கூடிவரும். நல்லவர்களின் தொடர்பால் நலம் பெறுவீர்கள். நல்ல காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சாதுக்களின் தரிசனம் கிடைக்கும். தெய்வப் பணிகள் ஈடேறும். உழைப்பு வீண்போகாது. 2-ல் கேது இருப்பதால் பேச்சில் நிதானம் தேவை. உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. 8-ல் ராகு இருப்பதால் பயணங்களில் விழிப்புத் தேவை. எதிலும் அவசரம் கூடாது. கலைத் துறையினர், பெண்களுக்கு எதிர்ப்புகள் இருக்கும். பக்குவமாகச் சமாளிப்பது நல்லது. வீண்வம்பு கூடாது. வாரப் பின்பகுதியில் உடல் நலனில் கவனம் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 31, நவம்பர் 2.
திசைகள்: வடகிழக்கு, மேற்கு, வடக்கு.
நிறங்கள்: பச்சை, நீலம், பொன் நிறம்.
எண்கள்: 3, 5, 8.
பரிகாரம்: சர்ப்ப சாந்தி செய்வது நல்லது. பராசக்தியை வழிபடவும்.
***
மீன ராசி வாசகர்களே
உங்கள் ஜன்ம ராசிக்கு 6-ல் செவ்வாய் உலவுவது விசேஷம். 8-ல் உலவும் புதனும் நலம் புரிவார். நல்ல தகவல் வந்து சேரும். உடன்பிறந்தவர்கள் ஓரளவு உதவுவார்கள். நண்பர்கள், உறவினர்களது சந்திப்பு பயன்படும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும். எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்களுக்கு வரவேற்பு அதிகரிக்கும். இயந்திரப் பணியாளர்கள், இன்ஜினீயர்கள் ஆகியோர் வளர்ச்சி காண்பார்கள். எதிரிகள் அடங்குவார்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். ராசிநாதன் குரு 6-ல் இருப்பதாலும், சூரியன் 8-ல் உலவுவதாலும் உடல் நலனில் கவனம் தேவை. வயிறு, மறைமுக உறுப்பு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். சுக்கிர பலம் இல்லாததாலும், 7-ல் ராகு உலவுவதாலும் வாழ்க்கைத் துணை நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். பெண்களால் சங்கடங்கள் உண்டாகும். அரசு விவகாரங்களில் விழிப்புத் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோப்ர 31, நவம்பர் 2.
திசை: வடக்கு, தெற்கு.
நிறம்: சிவப்பு, பச்சை.
எண்: 5, 9.
பரிகாரம்: நவக்கிரக வழிபாடு அவசியம். ருத்திர ஜபம் பாராயணம் செய்யலாம் அல்லது கேட்கலாம்