மேஷ ராசி வாசகர்களே
உங்கள் ராசிநாதன் செவ்வாய் 10-ல் அதிபலத்துடன் உலவுகிறார். சுக்கிரன், கேது ஆகியோரது சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பண வரவு சற்று அதிகரிக்கும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். கணவரால் மனைவிக்கும் மனைவியால் கணவருக்கும் நலம் உண்டாகும். கூட்டுத் தொழில் லாபம் தரும். புதிய முயற்சிகள் கைகூடும்.
எதிரிகள் பயந்து ஒளிவார்கள். வழக்கு, வியாஜ்ஜியங்களிலும் விளையாட்டு விநோதங்களிலும் வெற்றி கிடைக்கும். மனத்தில் துணிவும் தன்னம்பிக்கையும் கூடும். பிரச்சினைகள் குறையும். நண்பர்கள் உதவுவார்கள். நிலம், மனை, வீடு, வாகனங்கள் சேரும். சொத்துக்களால் வருவாயும் கிடைத்துவரும். ஆன்மிக, அறநிலையப் பணியாளர்களுக்கு வரவேற்பு கூடும். கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள்.
அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 1, 4, 5.
திசைகள்: தென்கிழக்கு, வடமேற்கு, தெற்கு.
நிறங்கள்: மெரூன், இளநீலம், சிவப்பு.
எண்கள்: 6, 7, 9. l பரிகாரம்: சூரியன், குரு, சனிக்கு அர்ச்சனைகள் செய்யவும்.
ரிஷப ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 5-ல் குருவும் 8-ல் புதனும் சுக்கிரனும் 10-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். பொருளாதார நிலை உயரும். எதிர்பாராத பொருள்சேர்க்கை நிகழும். கலைஞர்களுக்கும் மாதர்களுக்கும் செழிப்பு கூடும். குடும்பத்தில் நற்காரியங்கள் நிகழும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். மாணவர்களது நிலை உயரும். உடன்பிறந்தவர்களாலும், மக்களாலும் நலம் உண்டாகும்.
வாழ்க்கைத் துணைவரால் நல்லதும் அல்லாததுமான பலன்கள் கலந்தவாறு ஏற்படும். ஆன்மிகவாதிகள், உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்கள் முன்னேற்றமான சூழ்நிலையைக் காண்பார்கள். தியானம், யோகாவில் ஈடுபாடு கூடும். தொலைந்துபோன பொருள் கிடைக்கும். பேச்சில் திறமை வெளிப்படும். தகவல் தொடர்பு ஆக்கம் தரும். மனத்தில் தெளிவும் தன்னம்பிக்கையும் பிறக்கும். பெரியவர்கள், தனவந்தர்கள் ஆகியோரது ஆசியும் ஆதரவும் கிடைக்கும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 4, 5.
திசைகள்: வடமேற்கு, வடகிழக்கு, தென்கிழக்கு, வடக்கு.
நிறங்கள்: மெரூன், இளநீலம், பொன் நிறம், பச்சை. l எண்கள்: 3, 5, 6, 7.
பரிகாரம்: சக்தி வழிபாடு நலம் தரும்.
மிதுன ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் ராகுவும், 6-ல் சூரியன், சனியும் உலவுவது நல்லது. அயல்நாட்டுத் தொடர்பு பயன்படும். பயணம் சார்ந்து வருவாய் கிடைக்கும். அரசியல்வாதிகள், அரசுப் பணியாளர்கள், நிர்வாகத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு அனுகூலமான போக்கு தென்படும். சமுதாயநலப் பணியாளர்களுக்குப் பாராட்டுகள் கிடைக்கும். நல்லவர்களின் தொடர்பு நலம் சேர்க்கும்.
8-ல் செவ்வாய் உலவுவதால் சிறு விபத்துக்கு ஆளாக நேரலாம்; எச்சரிக்கை தேவை. தீ, மின்சாரம், கூரிய ஆயுதங்கள், தளவாடங்கள் ஆகியவற்றின் பக்கம் நெருங்கும்போது பாதுகாப்பு அவசியமாகும். உடன்பிறந்தவர்களால் மன வருத்தம் உண்டாகும். சொத்து சம்பந்தமான காரியங்களில் விழிப்புடன் ஈடுபடுவது நல்லது. தந்தை நலனில் அக்கறை தேவை. ஜனனேந்திரிய உபாதைகள் உண்டாகும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 1, 2.
திசைகள்: தென்மேற்கு, மேற்கு, கிழக்கு.
நிறங்கள்: புகை நிறம், கருநீலம், ஆரஞ்சு. l எண்கள்: 1, 4, 8.
பரிகாரம்: சுப்பிரமணியரை வழிபடவும்.
கடக ராசி வாசகர்களே
புதன் ஒருவரே சாதகமாக உலவுகிறார். இதர முக்கியமான கிரகங்கள் சாதகமாக உலவாததால் சங்கடங்கள் ஏற்படவே செய்யும். பக்குவமாகச் சமாளிக்கவும். பிறரிடம் கோபப்படாமல் நிதானமாகப் பேசிப் பழகவும். வீண்வம்பு கூடாது. பொருள் கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை. பிறரால் ஏமாற்றப்பட நேரலாம். மக்கள் நலனில் அக்கறை செலுத்தவும். புதிய துறைகளில் முதலீடு செய்யலாகாது. அன்றாடப் பணிகளில் கூட அதிக கவனம் தேவை.
குடும்பத்தில் சலசலப்புக்கள் ஏற்படும். பிற மொழி, மத, இனக்காரர்களால் சங்கடங்கள் உண்டாகும். வாகனத்தில் செல்லும்போது எச்சரிக்கையுடன் இருப்பது அவசியமாகும். கலைஞர்களுக்கும் பெண்களுக்கும் பிரச்னைகள் சூழும். கணவன் மனைவி உறவு நிலை பாதிக்கும். விஷ பயம் ஏற்படும். உணவுப் பழக்கத்தில் கட்டுப்பாடு தேவை. ஆசிரியர்கள், ஆன்மிகவாதிகள் முன்னேற்றம் தடைபடும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 1, 4, 5 (பகல்).
திசை: வடக்கு. l நிறம்: பச்சை. l எண்: 5.
பரிகாரம்: நவக்கிரக ஜப, ஹோமம் செய்யவும். குல தெய்வத்தை வழிபடவும்.
சிம்ம ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் 5-ல் சுக்கிரனும் 6-ல் செவ்வாயும் உலவுவது நல்லது. மனத்துக்கினிய சம்பவங்கள் வாழ்க்கையில் நிகழும். மகப்பேறு அல்லது மக்களால் பாக்கியம் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் வார முன்பகுதியில் கூடிவரும். கலைத் துறையினருக்கு சுபிட்சம் கூடும். மாதர்களது எண்ணம் ஈடேறும். கேளிக்கைகளிலும், விருந்துபசாரங்களிலும் ஈடுபாடு கூடும். நல்லவர்கள் உங்களுக்கு நலம் புரிவார்கள். நற்காரியங்கள் நிகழும். எதிரிகள் அடங்குவார்கள்.
வழக்குகளில் வெற்றி கிடைக்கும். விளையாட்டுகளிலும் பந்தயங்களிலும் ஈடுபாடு உள்ளவர்களுக்குப் பரிசுகளும் பாராட்டுகளும் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் கூடும். கொடுக்கல் வாங்கல் லாபம் தரும். 4-ம் தேதி முதல் சுக்கிரன் 6-ம் இடத்திற்கு மாறுவதால் கணவன் மனைவி இடையே சலசலப்புக்கள் ஏற்படும்.
அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 1, 4, 5.
திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு, தெற்கு.
நிறங்கள்: இளநீலம், வெண்மை, பொன் நிறம். l எண்கள்: 3, 5, 6, 9.
பரிகாரம்: விநாயகரை வழிபட்ட பின்பு எக்காரியத்திலும் ஈடுபடவும்.
கன்னி ராசி வாசகர்களே
உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும், சனியும், 4-ல் புதனும் சுக்கிரனும் 6-ல் கேதுவும் உலவுவது நல்லது. நண்பர்களும் உறவினர்களும் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். செய்தொழில் வளர்ச்சி பெறும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். சமுதாய நல முன்னேற்றப் பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு வரவேற்பு கூடும். நிர்வாகத் திறமை வெளிப்படும்.
வியாபாரத்தில் வளர்ச்சி காண வாய்ப்புகள் கூடிவரும். கலைஞர்கள் வெற்றி நடைபோடுவார்கள். கேளிக்கை, உல்லாசங்களில் ஈடுபாடு உண்டாகும். புதிய ஆடை, அணிமணிகள், அலங்காரப் பொருட்கள், வாசனைத் திரவியங்களின் சேர்க்கையோ, ஆதாயமோ கிடைக்கும். ஆன்மிக, அறநிலையப்பணியாளர்களுக்கு மதிப்பு உயரும். மக்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு விலகும். பயணத்தின்போது விழிப்புத் தேவை.
அதிர்ஷ்டமான தேதிகள்: டிசம்பர் 1, 4, 5.
திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, மேற்கு, வடமேற்கு.
நிறங்கள்: வெண்மை, நீலம், பச்சை, மெரூன். l எண்கள்: 1, 5, 6, 7, 8.
பரிகாரம்: சுப்பிரமணியரை வழிபடவும்.