அஸ்தம்
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை ரகசியமாகவே வைத்திருக்கும் அஸ்தம் நக்ஷத்திர அன்பர்களே, எதிலும் நிதானமாக செயல்படுவது நன்மை தரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உடல்நலத்திற்கு செலவு செய்ய வேண்டி வரலாம். எதிர்பார்த்த பணவரத்து தாமதமாக வந்து சேரும். எந்த வாக்குறுதியும் கொடுக்கும் முன் யோசித்து செயல்படுவது நல்லது. மற்றவர்களின் செயல்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம்.
உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். வருமானம் சீராக இருக்கும். விரும்பிய இடமாற்றங்களும் கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். சக ஊழியர்களுடன் நல்ல நட்பு தொடர்வதால் உங்களின் வேலைகள் குறித்த காலத்திற்குள் நிறைவேறிவிடும். உங்களின் வேலைத் திறனைக் கூட்டிக்கொள்ள புதிய அலுவலகப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
வியாபாரிகள் போட்டிகளையும், பொறாமைகளையும் சந்தித்தாலும் பொறுமையுடன் செயல்பட்டு அவற்றைச் சமாளிப்பீர்கள். உங்களின் சமயோஜித புத்தியால் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வீர்கள். பெண்கள் எடுத்த காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சாதூரியமான பேச்சு வெற்றிக்கு உதவும். அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். பிள்ளைகளிடம் அன்பு, பாசம் காட்டுவது நல்லது.
அரசியல்வாதிகளுக்கு கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்கு போராட்டங்கள் ஏற்படலாம். சிலருக்கு மேலிடம் பதவிகள் கொடுக்கும். வழக்கில் வெற்றி அல்லது நீண்ட நாட்களாக இழுபறியில் உள்ள பிரச்சினை முடிவில் செல்வம், உரிமை, அதிகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். பணிச்சுமை ஏற்படும். ஒரே நேரத்தில் அனைவருக்கும் வாக்கு கொடுப்பது என்பது கூடாது.
மாணவர்கள் பாடங்களை நன்கு படித்து மற்றவர்களின் மதிப்புக்கு ஆளாவீர்கள். திறமையான செயல்பாடுகள் வெற்றிக்கு உதவும்.
பரிகாரம்: சனிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலில் உள்ள கருடமூர்த்தியை வணங்கவும். எருக்க மலரை ஸ்ரீவினாயகருக்குப் படைக்கவும். முழுமுதற்கடவுளை வழிபட அனைத்து நன்மையே நடக்கும்.
+ பதவி உயர்வு தேடி வரும்
- உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை
சித்திரை
வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டு முன்னேறும் தன்மை உடைய சித்திரை நக்ஷத்திர அன்பர்களே, திடீர் டென்ஷன் உண்டாகும். நண்பர்கள், உறவினர்களிடம் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம். நீண்ட நாட்களாக வாங்க வேண்டும் என்று எண்ணிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிலும் அவசரம் காண்பிப்பதை தவிர்ப்பது நல்லது.
உத்தியோகஸ்தர்களுக்கு காத்திருந்த இடமாற்றம், பதவி உயர்வு தேடி வரும். மேன்மைகளை அடைவீர்கள். புதிய பணியில் சேர்ந்தவர்களுக்கு அமைதியான முறையில் மனச்சஞ்சலங்கள் விலகும். வெளிநாட்டு வேலை எதிர்பார்ப்பவர்களுக்கு அழைப்புகள் வந்து சேரும் காலமிது. எதிர்பாராத செலவுகள் நேரிடலாம். புதிய வியாபார ஒப்பந்தங்கள் நடந்தேறும். புதிய கடனுக்கான முயற்சிகளை முடித்துக் கொள்ளுதல் நன்மை பயக்கும்.
வியாபாரிகளுக்கு கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சிறப்பாகவே முடியும். நண்பர்கள் உண்மையான நட்புடன் பழகுவார்கள். அவர்களுடன் சேர்ந்து புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வியாபாரிகள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். புதிய சந்தைகளை நாடி பொருட்களை விற்பனை செய்வீர்கள். அரசு வழியிலும் சில நன்மைகள் உண்டாகும்.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அதன்மூலம் புகழும் நல்ல வருமானமும் பெறுவீர்கள். துறையில் பிரபலமானவர்களை சந்திப்பீர்கள். சமுதாயப் பணி செய்து உங்களின் பெயரை மேலும் உயர்த்திக் கொள்வீர்கள்.
பெண்மணிகளுக்கு குடும்பத்தில் சிறு சஞ்சலங்கள் ஏற்பட்டாலும் கணவரின் அன்பால் அவற்றிலிருந்து மீண்டு வந்து விடுவீர்கள். சிலருக்கு வயிறு சம்பந்தமான உபாதைகள் தோன்றி மறையும். அரசியலில் உள்ளவர்களுக்கு கோர்ட் விஷயங்களில் சுமூகமான முடிவுகள் வந்து சேரும். சிலருக்கு வழக்கில் வெற்றி அடைவதற்குண்டான வாய்ப்புகளை ஏற்படும்.
மாணவமணிகள் கடின உழைப்பை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. அதனால் படிப்பில் மட்டுமே கவனமாக இருக்கவும். பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் பேச்சைக் கேட்டு நடக்கவும். மற்றபடி உடல் ஆரோக்யத்திற்குத் தேவையான உடற்பயிற்சிகளைச் செய்வீர்கள். பரிகாரம்: வியாழக்கிழமைதோறும் சிவன் கோவிலை வலம் வாருங்கள். துளசிமாலையை பெருமாளுக்கு அர்ப்பணிக்கவும். எல்லாம் நல்லதே நடக்கும்.
+ பதவி உயர்வு தேடி வரும்
- எதிர்பாராத செலவுகள் நேரிடலாம்
சுவாதி
தோல்வியை வெற்றி படிகளாக ஆக்கிக் கொண்டு வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வரும் திறமை உடைய சுவாதி நக்ஷத்திர அன்பர்களே, வீண் மனக்கவலை ஏற்படலாம். கனவு தொல்லைகள் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். நண்பர்கள் மூலம் உதவி கிடைக்கும். ஆடம்பர செலவுகள் ஏற்படும். கோபத்தை கட்டுப்படுத்துவது நன்மை தரும். தடைபட்டிருந்த சுபகாரியங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நடைபெறும். வீடு கட்டும் முயற்சியில் உள்ளவர்களுக்கு துரித கதியில் பணிகள் நடைபெறும். உறவுகள், நண்பர்கள் மத்தியில் இருந்த கருத்து வேற்றுமை அகலும். மனஸ்தாபங்கள் நீங்கும். கணவன்-மனைவி இடையே ஒற்றுமை பலப்படும். உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். வழக்கு வியாஜ்ஜியங்களில் நிலுவைகள் தொய்வு ஏற்படலாம்.
ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். பிதுரார்ஜித சொத்து விஷயங்களில் நல்ல முடிவுகள் வந்து சேரும். குடும்பச் செலவினங்கள் தாராளமாகும். பிள்ளைகள் வழியில் கடன்பெற வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். உத்யோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் மதிப்பு உயரும். சக ஊழியர்களிடம் நல்ல முறையில் பேசிப் பழகுவீர்கள். அலுவலகத்தில் இருந்த பழைய சட்டப் பிரச்னைகள் நீங்கும்.
வியாபாரிகளுக்கு வருமானம் நல்ல முறையில் வந்தாலும் போட்டிகளைச் சந்திப்பீர்கள். எனவே பொறுப்புடன் நடந்துகொள்ளவும். நண்பர்களைக் கலந்தாலோசித்த பிறகே புதிய முதலீடுகளைச் செய்யவும். விரைவாக விற்கும் பொருட்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து விற்பனை செய்யவும். மற்றபடி செயல்படும் முறையை திருத்திக்கொண்டு பணியாற்றுவீர்கள்.
அரசியல்வாதிகளுக்கு கட்சியில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். உங்களின் பேச்சுத் திறனால் மாற்றுக் கட்சியினரையும் கவர்வீர்கள். தொண்டர்கள் உங்களுக்குக் கீழ் படிவார்கள். கட்சி மேலிடத்தின் ஆதரவால் வெளியூர் பயணங்களை மேற்கொண்டு வெற்றியடைவீர்கள்.
கலைத்துறையினருக்கு வருமானம் நன்றாக இருக்கும். அனைவரையும் கலந்தாலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை ஏற்பீர்கள். உங்கள் திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். சக கலைஞர்களுடன் விரோதம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளவும். பெண்மணிகளுக்கு கணவரின் ஆதரவு கிடைக்கும். புதிய ஆடை, அணிகலன்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப முன்னேற்றத்திற்குப் பாடுபடுவீர்கள். குழந்தைகளால் பெருமை அடைவீர்கள். உற்றார், உறவினர்களிடம் ரகசியங்களைப் பேச வேண்டாம்.
மாணவமணிகள் முயற்சிக்குத் தகுந்த மதிப்பெண்களைப் பெறுவீர்கள். பாடங்களை உடனுக்குடன் மனப்பாடம் செய்து படித்து வைத்துக்கொள்ளவும். உங்கள் கனவுகள் பலிக்கும். மற்றபடி விளையாட்டில் ஆர்வத்தைக் குறைத்துக் கொள்ளவும்.
பரிகாரம்: புதன்தோறும் பெருமாளுக்கு நல்லெண்ணெய் மற்றும் நெய் கலந்து விளக்கு ஏற்றவும். மரிக்கொழுந்தை அம்மனுக்குப் படைக்கவும்.
+ மனஸ்தாபங்கள் நீங்கும்
- வீண் மனக்கவலை ஏற்படலாம்