ஆன்மிகம்

வார ராசி பலன் 24-3-2016 முதல் 30-3-2016 வரை (துலாம் முதல் மீனம் வரை)

சந்திரசேகர பாரதி

துலாம் ராசி வாசகர்களே

சூரியன், புதன், குரு, சுக்கிரன், ராகு ஆகியோர் அனுகூலமாக உலவுகிறார்கள். மதிப்பும் அந்தஸ்தும் உயரும். எதிரிகள் கட்டுக்குள் அடங்கி இருப்பார்கள். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழ வாய்ப்பு உண்டாகும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு, நல்ல இடத்துக்கு மாற்றம் ஆகியவை கிடைக்கும். கலைஞர்கள் சுபிட்சம் காண்பார்கள். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் தொழில்கள் லாபம் தரும். மருத்துவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். விஞ்ஞானிகள் புகழ் பெறுவார்கள். பயணத்தால் நலம் உண்டாகும்.

அயல்நாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழில் லாபம் தரும். முக்கியஸ்தர்கள் உதவி புரிவார்கள். மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெற வாய்ப்புக் கூடிவரும். வாரப் பின்பகுதியில் பண வரவு அதிகரிக்கும். வயிறு சம்பந்தமான உபாதைகள் சிலருக்கு ஏற்பட்டு விலகும். பிள்ளைகளால் நல்லதும் அல்லாததுமான பலன்கள் கலந்தவாறு ஏற்படும். 30-ம் தேதி முதல் புதன் 7-ம் இடம் மாறுவது சிறப்பாகாது. எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிக்கனம் தேவை. வீண்வம்பு கூடாது.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 25 (பிற்பகல்), 28.

திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு, தென்மேற்கு.

நிறங்கள்: வெண்மை, பொன் நிறம், கருப்பு.

எண்கள்: 1, 3, 4, 5, 6.

பரிகாரம்: விநாயகர் அகவல் படிப்பது நல்லது.

விருச்சிக ராசி வாசகர்களே

சுக்கிரன், ராகு ஆகியோர் அனுகூலமாக உலவுகிறார்கள். சூரியனும் குருவும் பரிவர்த்தனையாக இருப்பதால் நலம் உண்டாகும். செவ்வாய் ஜன்ம ராசியில் தன் சொந்த வீட்டில் இருப்பதால் ஓரளவு நலம் புரிவார். கலைத்துறையினருக்கு வரவேற்பு கூடும். தந்தையால் வார முன்பகுதியில் நலம் உண்டாகும். அரசு சம்பந்தமான காரியங்கள் வெற்றி தரும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். வாழ்க்கை வசதிகள் பெருகும். சுபச் செலவுகள் கூடும். பிள்ளைகளால் அளவோடு நலம் உண்டாகும்.

ஜன்ம ராசியில் சனி இருப்பதாலும் 4-ல் கேது உலவுவதாலும் அலைச்சலும் உழைப்பும் அதிகரிக்கும். உடல் சோர்வு ஏற்படும். தாய் நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும். சொத்துகள் சம்பந்தமான காரியங்களில் விழிப்புடன் ஈடுபடவும். பயணத்தால் அனுகூலம் பெற வாய்ப்பு உண்டு. புதியவர்களின் தொடர்பு பயன்படும். 30-ம் தேதி முதல் புதன் 6-ம் இடம் மாறுவதால் வியாபாரிகளுக்கு முன்னேற்றமான பாதை புலப்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 25 (முற்பகல்), 28.

திசைகள்: தென்மேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: புகை நிறம், கருஞ்சிவப்பு, இளநீலம்.

எண்கள்: 4, 6, 9.

பரிகாரம்: சனி, கேதுவுக்கு அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது. ஹனுமன் சாலீஸா படிப்பதும் கேட்பதும் சிறப்பாகும்.

தனுசு ராசி வாசகர்களே

புதன், குரு, சுக்கிரன், கேது ஆகியோர் அனுகூலமாக இருப்பதால் செய்து வரும் தொழிலில் சீரான வளர்ச்சியைக் காணலாம். பதவி உயர்வும் ஊதிய உயர்வும் கிடைக்கும். வியாபாரம் பெருகும். எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகு போன்ற தொழிகள் லாபம் தரும். கலைஞர்கள் வெற்றிப்படிகளில் ஏறுவார்கள். சுப காரியங்கள் நிகழும். பண வரவு வார முன்பகுதியில் திருப்திகரமாக இருந்துவரும்.

நண்பர்களும் உறவினர்களும் உதவுவார்கள். பிள்ளைகளால் அளவோடு நலம் உண்டாகும். பக்தி மார்க்கத்தில் ஈடுபாடு கூடும். உத்தியோகஸ்தர்களது நிலை உயரும். நிலபுலங்கள் அளவோடு லாபம் தரும். மாணவர்களது எண்ணம் ஈடேறும். 12-ல் செவ்வாயும் சனியும் உலவுவதாலும், வாரப்பின்பகுதியில் சந்திரன் 12-ம் இடம் மாறுவதாலும் எதிர்பாராத செலவுகளும் இழப்புகளும் ஏற்படும். கைப்பொருளைப் பத்திரப்படுத்தி வைத்துக் கொள்வது நல்லது. கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உடல் நலனில் அக்கறை தேவை. விரும்பதகாத இடமாற்றம் சிலருக்கு ஏற்படும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 25, 26.

திசைகள்: தென்கிழக்கு, வடகிழக்கு, வடக்கு, வடமேற்கு.

நிறங்கள்: பச்சை, இளநீலம், பொன்நிறம், மெரூன்.

எண்கள்: 3, 5, 6, 7.

பரிகாரம்: திருமுருகன், ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.

மகர ராசி வாசகர்களே

சூரியன், செவ்வாய், சுக்கிரன், சனி ஆகியோரது நிலை சிறப்பாக இருப்பதால் தொலைதூரத் தொடர்பு பயன்படும். மனதில் துணிவு கூடும். எதிரிகள் அடங்குவார்கள். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துகள் சேரும். சொத்துகள் மூலம் ஆதாயமும் கிடைக்கும். அரசுப் பணியாளர்கள், அரசியல்வாதிகள், நிர்வாகிகள் நிலை உயரப் பெறுவார்கள். உடன்பிறந்தவர்கள், தந்தை, வாழ்க்கைத்துணைவரால் நலம் உண்டாகும். உழைப்பு வீண்போகாது. பல வழிகளில் ஆதாயம் கிடைத்துவரும்.

செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காண வழிபிறக்கும். புதன், குரு, ராகு, கேது ஆகியோர் அனுகூலமாக உலவுவதால் குடும்பத்தில் சில இடர்பாடுகள் ஏற்படும். வியாபாரத்தில் அதிக கவனம் தேவை. தொழில் அதிபர்கள் விழிப்புடன் செயல்படுவது நல்லது. பொருளாதாரம் சம்பந்தமான இனங்களில் ஈடுபாடு உள்ளவர்களும், உத்தியோகஸ்தர்களும் பொறுப்புடன் காரியமாற்றினால் சரிவுக்கு ஆளாகாமல் தப்பலாம். புதியவர்களிடம் எச்சரிக்கை தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 25, 28.

திசைகள்: மேற்கு, தென்கிழக்கு, தெற்கு, கிழக்கு.

நிறங்கள்: நீலம், சிவப்பு, ஆரஞ்சு.

எண்கள்: 1, 6, 8, 9.

பரிகாரம்: திருமாலை வழிபடுவது நல்லது. குரு ஸ்தானத்தில் உள்ளவர்களை வணங்கி அவர்களது நல்வாழ்த்துகளைப் பெறவும்.

கும்ப ராசி வாசகர்களே

செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகியோர் நலம் புரியும் நிலையில் உலவுகிறார்கள். மனதில் துணிவு கூடும். எடுத்த காரியங்களில் திறம்பட ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். இயந்திரப்பணிகள் லாபம் தரும். வியாபாரம் பெருகும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நிகழும். நல்லவர்கள் உதவி புரிவார்கள். புதிய ஆடை, அணிமணிகளின் சேர்க்கை நிகழும். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும்.

பிறருக்குத் தாராளமாக உதவுவீர்கள். பண வரவு கூடும். பிள்ளைகளால் நலம் உண்டாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும். தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோர் வாரப் பின்பகுதியில் நலம் கூடப் பெறுவார்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்லதொரு வாய்ப்புக் கூடிவரும். ஏற்கெனவே வேலையில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வும் நல்ல இடத்துக்கு மாற்றமும் கிடைக்கும். எதிரிகள் ஏமாந்து போவார்கள். கொடுக்கல்-வாங்கல் லாபம் தரும். வாழ்க்கைத்துணைவரால் நலம் கூடும். கூட்டுத் தொழிலில் வளர்ச்சி காணலாம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: மார்ச் 25 (பிற்பகல்), 28.

திசைகள்: வடகிழக்கு, வடக்கு, தெற்கு, மேற்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: நீலம், பொன் நிறம், பச்சை, சிவப்பு.

எண்கள்: 3, 5, 6, 8, 9.

பரிகாரம் : நாகர் வழிபாடு அவசியம்.

மீன ராசி வாசகர்களே

சுக்கிரனும், ராகுவும் அனுகூலமாக உலவுகிறார்கள். செவ்வாய் 9–ல் இருந்தாலும் தன் சொந்த வீட்டில் இருப்பதால் ஓரளவு நலம் புரிவார். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புகள் கூடிவரும். நண்பர்களும் கூட்டாளிகளும் உதவுவார்கள். பெண்களுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவிவரும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் உடல் நலனில் கவனம் தேவை. உஷ்ணாதிக்கம் அதிகமாகும். தலை, அடிவயிறு சம்பந்தமான உபாதைகள் ஏற்படும்.

பொருள் கொடுக்கல்-வாங்கலில் கவனம் தேவை,. உத்தியோகஸ்தர்கள், ஆசிரியர்களுக்குச் சிறுசிறு பிரச்சிsனைகள் ஏற்படும். தந்தையால் ஓரளவு நலம் உண்டாகும். செய்து வரும் தொழிலில் அதிக கவனம் செலுத்தினால் வளர்ச்சி காணலாம். 30-ம் தேதி முதல் புதன் 2-ம் இடம் மாறுவதாலும் குருவின் பார்வையைப் பெறுவதாலும் பேச்சாற்றல் வெளிப்படும். நண்பர்களும் உறவினர்களும் ஆதரவாக இருப்பார்கள். மாணவர்களது மந்த நிலை விலகும். நிலபுலங்களால் வருவாய் கிடைக்கும்.

அதிர்ஷ்ட தேதிகள்: மார்ச் 25 (முற்பகல்), 28.

திசைகள்: தென்கிழக்கு, தென்மேற்கு, தெற்கு.

நிறங்கள்: புகை நிறம், சிவப்பு, இளநீலம்.

எண்கள்: 4, 6, 9.

பரிகாரம்: ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்வது நல்லது. குடும்பப் பெரியவர்களையும் குரு ஸ்தானத்தில் உள்ளவர்களையும் வணங்கி அவர்களது நல்வாழ்த்துக்களைப் பெறவும்.

SCROLL FOR NEXT