ஆன்மிகம்

வார ராசிபலன் 16-10-2014 முதல் 22-10-2014 வரை (துலாம் முதல் மீனம் வரை)

சந்திரசேகர பாரதி

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் செவ்வாயும் 6-ல் கேதுவும் 12-ல் சுக்கிரனும் உலவுவதால் துணிச்சலான காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிரிகளின் கரம் வலுக் குறையும். போட்டிப் பந்தயங்களிலும்; வழக்கு, வியாஜ்ஜியங்களிலும் வெற்றி கிடைக்கும். இயந்திரப் பணிகள் லாபம் தரும். நிலம், மனை, வீடு, வாகனம் போன்ற சொத்துக்கள் சேரும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும்.

தொலைதூரத் தொடர்பு ஓரளவு பயன்படும். நற்காரியங்களில் பங்கு கொள்வீர்கள். சாதுக்களின் ஆசி கிடைக்கும். ஜலப்பொருட்கள் லாபம் தரும். உழைப்பு வீண்போகாது. 12-ல் சூரியன், புதன், ராகு ஆகியோர் உலவுவதால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது அவசியம். கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். உடல்நலனில் கவனம் தேவை. 18-ம் தேதி முதல் சூரியன் ஜன்ம ராசிக்கு இடம் மாறுவது சிறப்பாகாது. 20-ம் தேதி முதல் சுக்கிரன் வலுப்பெறுவதால் கலைஞர்களுக்கு வெளிச்சமான பாதை புலப்படும். புதிய ஆடை, அணிமணிகள் சேரும். அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: அக்டோபர் 20, 21.

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: சிவப்பு, மெரூன், வெண்மை, வான் நீலம்.

எண்கள்: 6, 7, 9.

பரிகாரம்: ஆதித்ய ஹ்ருதயம் படிக்கவும். துர்கையம்மனுக்கு நெய் தீபமேற்றி வழிபடவும்.

விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 9-ல், குருவும் 11-ல் சூரியன், புதன், சுக்கிரன், ராகு ஆகியோரும் உலவுவது சிறப்பு. நல்லவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தெய்வ தரிசனமும் சாது தரிசனமும் கிடைக்கும். தொலைதூரத்திலிருந்து நல்ல தகவல் வந்து சேரும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். காரியத்தில் வெற்றி கிட்டும். முக்கியஸ்தர்கள் உதவுவார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைக்கும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். நிர்வாகத் துறையினருக்கு வரவேற்பு கூடும். பிள்ளைகளால் பெற்றோருக்கும் பெற்றோரால் பிள்ளைகளுக்கும் நலம் உண்டாகும். வியாபாரிகள் அதிக லாபம் பெறுவார்கள்.

தொழிலதிபர்களது எண்ணம் நிறைவேறும். அயல்நாட்டுத் தொடர்புடன் செய்யும் வர்த்தகம் அபிவிருத்தி அடையும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். 18-ம் தேதி முதல் சூரியன் 12-ம் இடம் மாறி சனியோடு கூடுவது சிறப்பாகாது. தொழில் சம்பந்தமான சில பிரச்சினைகள் ஏற்படும். உடல்நலனில் கவனம் தேவை. கண், கால் சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். 20-ம் தேதி முதல் சுக்கிரன் 12-ம் இடம் மாறுவதால் வாழ்க்கைத்துணை நலனில் கவனம் தேவை. கலைஞர்கள் ஓரளவு வளர்ச்சி காண்பார்கள்.

அதிர்ஷ்டமான நாட்கள்: அக்டோபர் 20, 21.

திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு.

நிறங்கள்: பொன் நிறம், வெண்சாம்பல் நிறம், பச்சை, இளநீலம், ஆரஞ்சு.

எண்கள்: 1, 3, 4, 5, 6.

பரிகாரம்: கேதுவுக்கும் சனிக்கும் பிரீதி, பரிகாரங்களைச் செய்வது நல்லது. கால் ஊனம் உள்ளவர்களுக்கு உதவவும்.

தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 10-ல் சூரியன், புதன், ராகு ஆகியோரும் 11-ல் சனியும் சஞ்சரிப்பதால் எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். நல்லவர்களின் தொடர்பு நலம் தரும். அரசியல்வாதிகளுக்கும் அரசுப்பணியாளர்களுக்கும் அனுகூலமான போக்கு நிலவிவரும். அரசாங்க உதவி கிடைக்கும். பயணத்தால் அனுகூலம் உண்டாகும். மருத்துவர்களுக்கு நற்பெயர் கிடைக்கும். விஞ்ஞானிகள் புகழ் பெறுவார்கள். எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள்.

பொருள் வரவு திருப்தி தரும். குடும்பத்தில் குதூகலம் கூடும். சுபச் செலவுகள் சற்று அதிகரிக்கும். தொழிலாளர்கள், விவசாயிகள், பொதுநலப்பணியாளர்கள் நிலை உயரப் பெறுவார்கள். இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்கல் லாபம் தரும். 18-ம் தேதி முதல் சூரியன் 11-ம் இடம் மாறுவதால் நலம் கூடும். 20-ம் தேதி முதல் சுக்கிரன் 11-ம் இடம் மாறுவதால் கலைஞர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை உருவாகும். பெண்களின் எண்ணம் ஈடேறும். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான நாட்கள்: அக்டோபர் 20, 21.

திசைகள்: தென்மேற்கு, மேற்கு, வடக்கு, தென்கிழக்கு, கிழக்கு.

நிறங்கள்: ஆரஞ்சு, நீலம், பச்சை, புகை நிறம், இளநீலம், வெண்மை.

எண்கள்: 1, 4, 5, 8.

பரிகாரம்: குரு, கேது, செவ்வாய் ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்வது நல்லது. வேதவிற்பன்னர்களுக்கு உதவுவது நல்லது. எதிலும் அவசரப்படாமல் நிதானமாக ஈடுபடவும்.

மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் கேதுவும் 7-ல் குருவும், 9-ல் புதனும் சுக்கிரனும் 10-ல் சனியும் உலவுவதால் எதிர்ப்புக்கள் விலகும். வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். நண்பர்கள் உதவுவார்கள். உத்தியோகஸ்தர்களது நோக்கம் நிறைவேறும். பணப் புழக்கம் திருப்தி தரும். ஆன்மிகத்தில் நாட்டம் கூடும். தெய்வப் பணிகள் இப்போது ஈடேறும். தனவந்தர் சகாயம் கிடைக்கும். வெளிநாட்டுத் தொடர்புகள் ஆக்கம் தரும். இரக்க சுபாவம் வெளிப்படும். மற்றவர்களுக்கு தாராளமாக உதவுவீர்கள். வெளிவட்டாரப் பழக்கம் பயன்படும். தோட்டங்கள், ஆலைகள், தொழிற்சாலைகள் ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் வளர்ச்சி காண்பார்கள்.

இரும்பு, எஃகு, எண்ணெய் வகையறாக்கள் லாபம் தரும். கலைஞர்களுக்கு வரவேற்பு கூடும். கணவன்-மனைவி இடையே கருத்து ஒற்றுமை நிலவிவரும். தொலைதூரப் பயணத்தால் நலம் உண்டாகும். 18-ம் தேதி முதல் சூரியன் 10-ம் இடம் மாறுவதால் புதிய பதவிகள் கிடைக்கும். 20-ம் தேதி முதல் சுக்கிரன் 10-ம் இடம் மாறி தன் சொந்த வீட்டில் உலவுவதால் தொழிலில் அபிவிருத்தி காண வழிபிறக்கும். வேலையில்லாதவர்களுக்குத் தகுந்ததொரு வாய்ப்புக் கூடிவரும்.

அதிர்ஷ்டமான தேதி: அக்டோபர் 21.

திசைகள்: வடகிழக்கு, மேற்கு, வடக்கு, வடமேற்கு.

நிறங்கள்: நீலம், வெண்மை, பொன் நிறம், மெரூன்.

எண்கள்: 3, 5, 6, 7, 8.

பரிகாரம்: சூரியன், செவ்வாய், ராகு ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்கள் செய்வது நல்லது.

கும்ப ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 8-ல் புதனும், சுக்கிரனும் 11-ல் செவ்வாயும் உலவுவதால் புத்திசாலித்தனம் பளிச்சிடும். எதிர்பாராத பொருட்சேர்க்கை நிகழும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். கணிதம், எழுத்து, பத்திரிகை, தரகு போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். இன்சூரன்ஸ், பி.எஃப். போன்ற ஆயுள் சம்பந்தமான இனங்கள் லாபம் தரும். இயந்திரப் பணியாளர்கள் ஏற்றம் பெறுவார்கள். இன்ஜினீயர்களது நிலை உயரும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள்.

எதிர்ப்புக்களை வெல்லும் சக்தி பராக்கிரமம் உண்டாகும். செந்நிறப்பொருட்கள், கட்டிடப் பொருட்கள், ஆயுதங்கள், மின் சாதனங்கள் ஆகியவை லாபம் தரும். சூரியன், குரு, ராகு, கேது ஆகியோரது சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் சிறுசிறு இடர்ப்பாடுகள் அவ்வப்போது எற்படும். உஷ்ணாதிக்கத்தைக் குறைத்துக் கொள்ளவும். புதியவர்களிடம் அதிகம் நெருக்கம் வேண்டாம். பேச்சில் கடுமையைக் குறைத்துக் கொள்வது அவசியம். 18-ம் தேதி முதல் சூரியன் 9-ம் இடம் மாறுவதும் சிறப்பாகாது. தந்தை நலனில் கவனம் தேவை. 20-ம் தேதி முதல் சுக்கிரன் 9-ம் இடம் மாறுவதால் புனிதமான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். தொலைதூரத் தொடர்பு பயன்படும்.

அதிர்ஷ்டமான நாள்: அக்டோபர் 20.

திசைகள்: வடக்கு, தென்கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: வெண்மை, சிவப்பு, பச்சை.

எண்கள்: 5, 6, 9.

பரிகாரம்: சர்ப்ப சாந்தி செய்து கொள்ளவும். வேத விற்பன்னர்கள், குடும்பப் பெரியவர்களையும் வணங்கி, அவர்களது நல்வாழ்த்துக்களைப் பெறவும்.

மீன ராசி வாசகர்களே

உங்கள் ராசிநாதன் குரு 5-ம் இடத்தில் தன் உச்ச ராசியில் பலம் பெற்று உலவுவது சிறப்பு. செவ்வாய் 10-ல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. எடுத்த காரியத்தில் வெற்றி காணலாம். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். பிள்ளைகள் நலம் மகிழ்ச்சி தரும். மகப்பேறு பாக்கியம் உண்டாகும். பண வரவு அதிகமாகும். மந்திர உபதேசம் பெறுவீர்கள். தெய்வ காரியங்கள் நிறைவேறும். சாதுக்கள், மகான்கள் ஆகியோரது தரிசனம் கிடைக்கும். எதிரிகள் ஏமாந்து போவார்கள். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும்.

குடும்ப நலம் சிறக்கும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். பொறியியல், சட்டம், காவல், ராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் சாதனை பல படைப்பார்கள். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் உழைப்பும் அலைச்சலும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். கூட்டாளிகளால் சங்கடம் ஏற்படும். முதுகு, மற்றும் மறைமுக உறுப்புக்கள் சம்பந்தமான உபாதைகள் ஏற்பட்டு, குரு பலத்தால் விலகும். கெட்டவர்களின் சகவாசம் அடியோடு கூடாது.

அதிர்ஷ்டமான நாட்கள்: அக்டோபர் 20, 21.

திசைகள்: வடகிழக்கு, தெற்கு.

நிறங்கள்: பொன் நிறம், சிவப்பு.

எண்கள்: 3, 9.

பரிகாரம்: சனிப் பிரீதி செய்து கொள்ளவும். சர்ப்ப சாந்தி செய்து கொள்வதும் அவசியம். உடல் ஊனமுற்றவர்கள், ஆதரவற்றவர்கள், வயோதிகர்களுக்கு உதவவும்.

SCROLL FOR NEXT