51 சக்தி பீடங்கள் குறித்த கிருதிகளை கலைமாமணி டாக்டர் ருக்மிணி ரமணி இயற்றி, பொருத்தமாக ராகம் அமைத்துள்ளார். இவர் தமிழ் தியாகராஜர் என்று அழைக்கப்படும் பாபநாசம் சிவனின் மகள் ஆவார். மீனாட்சி, காமாட்சி என்று அம்மன்களின் பெயர்களைக் கொண்ட கிருதிகள், கண் முன்னே அப்பெண் தெய்வங்களைக் கொண்டு நிறுத்துகிறது.
ராகம், தாளம் அமைக்கப்பட்ட இக்கிருதிகள் அனைத்தும் புத்தக வடிவில் தெளிவான கையெழுத்தில் எழுதப்பட்டுள்ளது புதுமை. குறுந்தட்டில் அமைந்துள்ள பாடல்களை மாம்பலம் சகோதரிகள் தங்களது இனிமையான குரலில் பாடியுள்ளனர். டாக்டர் ஆர்.ஹேமலதாவின் வயலினும் நெல்லை ஏ.பாலாஜியின் மிருதங்கமும் பொருத்தமாக அமைந்துள்ளது.
புத்தகம்: 51 - சக்தி பீடம் கிருதிகள், குறுந்தட்டு: 51 சக்தி பீடம் கிருதிகள் 1
ஆசிரியர்: டாக்டர் ருக்மிணி ரமணி, விலை: ரூ.250 (தனித்தனியே பெறலாம்)
கிடைக்குமிடம்: சிவானுகிருஹா டிரஸ்ட், சாரதாம்பாள் அடுக்ககம், மூன்றாம் தளம், நெ.38, கிருபாசங்கரி தெரு, மேற்கு மாம்பலம், சென்னை 600 033
தொடர்புக்கு: 98400 48638