காஞ்சி ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 123 - வது ஜெயந்தி விழா மேற்கு மாம்பலம், அயோத்தியா மண்டபத்தில் மே 14 ம் தேதி முதல் 25 ம் தேதி வரை நடைபெற்றது. கணபதி ஹோமத்துடன் நடைபெற்ற இவ்விழாவில்,
ஸ்ரீசுதர்சன ஹோமம், ஸ்ரீ மகா ம்ருத்யுஞ்ஜய ஹோமம், ஸ்ரீதுர்கா ஸூக்த ஹோமம், ஸ்ரீபுருஷ ஸூக்த ஹோமம், ஸ்ரீ அஷ்டாஷரி ஹோமம், ஸ்ரீஸூக்த ஹோமம், ஸ்ரீசுப்பிரமணிய ஹோமம், ஸ்ரீநவகிரக ஹோமம், ஸ்ரீஆவஹந்தி ஹோமம், ஸ்ரீ சண்டி ஹோமம், ஸ்ரீதன்வந்த்ரி ஹோமம் ஆகியவை நடைபெற்றன. பத்மபூஷண் டி.ஹெச். விநாயக்ராம் குழுவினரின் இன்னிசை பின்னணியில் ஊஞ்சல் சேவை. இவ்விழாவில் மகா பெரியவர் திருவுருவப் படத்துக்கு 1008 வடை மற்றும் ஜாங்கிரி மாலை அலங்கரிக்கப்பட விழா நிறைவுற்றது.
எம்.சி. மெளலி தலைமையில் ஸ்ரீசந்திர சேகரேந்த்ர சரஸ்வதி பக்த ஜன ட்ரஸ்ட் குழுவினர் விழா ஏற்பாடுகளை சிறப்பாகச் செய்திருந்தனர்.