திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சென்ற வாரம் செவ்வாய் கிழமை (ஜூன் 14) அன்று அங்குரார்ப்பணம் நடைபெற்றது. அங்குரார்ப்பணம் என்பது நவதானியங்களை நீரில் ஊறவைத்து அதை மண்ணில் விதைக்கும் பூஜையாகும். அங்குரார்ப்பணம் செய்வதற்கான அந்த மண்ணை வராகப் பெருமாளை மனதில் தியானித்து குழி தோண்டுவதற்கான வெள்ளி மண்வெட்டி திருவல்லிக்கேணி பார்த்த சாரதி ஆலயத்துக்குக் கொடையாக அளிக்கப்பட்டுள்ளது.
திருவல்லிக்கேணி ஆலயத்துக்கு வழங்கப்பட்ட ஒரு கிலோ எடையுள்ள வெள்ளி மண்வெட்டி.
ஜெயந்தி விழா
ஸ்ரீ சுகப் பிரம்ம மகரிஷி ஜெயந்தி விழா நேற்று தொடங்கியது. சென்னை தியாகராய நகரில் உள்ள முருகன் கல்யாண மண்டபத்தில் நடைபெறும் இந்த விழா ஜூன் 24-ம் தேதிவரை நடக்கிறது. விழாக் காலத்தில் அன்னதானம், பூஜைகள், ஹோமங்கள், ஆன்மிகச் சொற்பொழிவுகள் ஆகியவை நடைபெறும்.