ஆன்மிகம்

இந்த வார விசேஷங்கள்!

வி. ராம்ஜி

ஆனி 4ம் தேதி, ஜூன் 19ம் தேதி, புதன்கிழமை : சோழவந்தான் ஸ்ரீஜனகை மாரியம்மன் பூக்குழி விழா. திருவல்லிக்கேணி ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள் கோயிலில், ஸ்ரீநரசிம்மருக்கு திருமஞ்சன சேவை

ஆனி 5ம் தேதி, ஜூன் 20ம் தேதி வியாழக்கிழமை : சங்கடஹர சதுர்த்தி.

ஆனி 6ம் தேதி, ஜூன் 21ம் தேதி வெள்ளிக்கிழமை : மதுராந்தகம் தீர்த்தவாரி. சென்னை ஸ்ரீசுகப்பிரம்ம ஆஸ்ரமத்தில் ஸ்ரீசுகப்பிரம்மர் ஜயந்தி விழா. திருவோண விரதம். உப்பிலியப்பன் கோயில் பெருமாள் புறப்பாடு. திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் ரதோத்ஸவம். கோயம்பேடு வைகுண்டவாசப் பெருமாள் சக்கர ஸ்நானம். காஞ்சி ஸ்ரீதேவராஜ சுவாமி ஜேஷ்டாபிஷேகம்.

ஆனி 7ம் தேதி, ஜூன் 22ம் தேதி சனிக்கிழமை :  சோழவந்தான் ஜனகை மாரியம்மன் ரிஷப வாகனத்தில் சேவை. திருநள்ளாறு சனீஸ்வரர் சிறப்பு ஆராதனை.

ஆனி 8ம் தேதி, ஜுன் 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை : சஷ்டி. சோழவந்தான் ஜனகை மாரியம்மன் முத்துப்பல்லக்கில் பவனி.

ஆனி 9ம் தேதி, ஜுன் 24ம் தேதி திங்கட்கிழமை : கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் கருடாழ்வாருக்கு திருமஞ்சன சேவை. சங்கரன்கோவில் ஸ்ரீகோமதி அன்னை புஷ்பப்பாவாடை தரிசனம்.  

ஆனி 10ம் தேதி, ஜுன் 25ம் தேதி செவ்வாய்க்கிழமை : திருப்பதி ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். சோழவந்தான் ஜனகை மாரியம்மன் ரதோத்ஸவம்.

SCROLL FOR NEXT