ஆன்மிகம்

வார ராசிபலன் 04-09-2014 முதல் 10-09-2014 வரை (துலாம் முதல் மீனம் வரை))

சந்திரசேகர பாரதி

துலாம் ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 6-ல் கேது, 11-ல் சூரியன் சுக்கிரன் உலவுவதால் துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு கூடும். எதிரிகள் அடங்கிப் போவார்கள். ஆன்மிக, அறநிலையப் பணியாளர்கள் நிலை உயரப் பெறுவார்கள். அரசியல்வாதிகளுக்குச் செல்வாக்கு உயரும். நிர்வாகத் துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். முக்கியஸ்தர்களது சந்திப்பு நலம் தரும். கலைஞர்கள் வளர்ச்சி காண்பார்கள். பெண்களின் எண்ணம் ஈடேறும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் ஓரளவு பயன் தரும்.

தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். 2-ல் செவ்வாய் இருந்தாலும், குரு பார்ப்பதால் பொருளாதார நிலை உயரும். கணவன்-மனைவி உறவு நிலை சீராகும். உடன்பிறந்தவர்களாலும் தந்தையாலும் வாழ்க்கைத்துணையாலும் அனுகூலம் உண்டாகும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் ஆதாயம் கிடைத்துவரும். அரசு உதவி கிடைக்கும். தந்தையால் ஓரிரு எண்ணங்கள் நிறைவேறும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 4, 8, 10

திசைகள்: வடமேற்கு, கிழக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: மெரூன், வெண்மை, ஆரஞ்சு

எண்கள்: 1, 6, 7

பரிகாரம்: துர்கையையும் மகாவிஷ்ணுவையும் வழிபடவும்.

விருச்சிக ராசி வாசகர்களே

உங்கள் ராசிநாதன் செவ்வாய் ராசியிலேயே குரு பார்வையுடன் உலவுவது சிறப்பு. 9-ல் குரு, 10-ல் சூரியன், 11-ல் புதன், ராகு சஞ்சரிப்பது விசேஷமாகும். குடும்பத்தில் குதூகலம் நிறைந்திருக்கும். கேளிக்கை உல்லாசங்களிலும், விருந்து உபச்சாரங்களிலும் ஈடுபாடு உண்டாகும். வெற்றி வாய்ப்புக்கள் கூடும். எதிரிகள் அடங்குவார்கள். நல்ல தகவல் வந்து சேரும். போட்டிகளிலும் பந்தயங்களிலும் வெற்றி கிட்டும். அரசுப்பணிகள் ஆக்கம் தரும். நிர்வாகத்திறமை கூடும். வியாபாரிகளுக்கு உற்சாகமான சூழ்நிலை நிலவும்.

பணப் புழக்கம் அதிகரிக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். புதிய பொருட்களும் சொத்துக்களும் சேரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புகள் பயன்படும். புதிய பதவி, பட்டங்கள் தேடிவரும். செய்து வரும் தொழிலில் அபிவிருத்தி காணலாம். 12-ல் சனி உலவுவதால் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். கால் சம்பந்தமான உபாதைகள் உண்டாகும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 4, 8, 10

திசைகள்: வடகிழக்கு, தென்மேற்கு, கிழக்கு, வடக்கு, தென்கிழக்கு

நிறங்கள்: பொன் நிறம், வெண்சாம்பல் நிறம், பச்சை, இளநீலம், ஆரஞ்சு

எண்கள்: 1, 3, 4, 5, 6, 9

பரிகாரம்: ஆஞ்சநேயரை வழிபடவும். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவவும். ஹனுமன் சாலீஸா படிக்கவும். கேட்கவும் செய்யலாம்.

தனுசு ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 9-ல் சூரியன், சுக்கிரன், 10-ல் புதன், ராகு, 11-ல் சனி சஞ்சரிப்பது சிறப்பு. தொலைதூரத் தொடர்பு பயன்படும். தந்தையாலும் உற்றார் உறவினராலும் நலம் உண்டாகும். வேலையாட்கள் குறிப்பறிந்து நடந்து கொள்வார்கள். அரசு விவகாரங்கள் ஆக்கம் தரும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடன் செய்யும் தொழிலில் அபிவிருத்தி காணலாம். கலைத்துறையினருக்கு வாய்ப்புக்கள் கூடிவரும். அரசியல்வாதிகளுக்கு மதிப்பு உயரும். வியாபாரிகளுக்கு லாபம் கூடும்.

கணிதம், எழுத்து, பத்திரிகை, சிற்பம், ஓவியம், தரகு ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் செழிப்பான சூழ்நிலை நிலவும். 4-ல் கேது, 8-ல் குரு, 12-ல் செவ்வாய் இருப்பதால் உடல்நலனில் கவனம் தேவை. மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும். பொருள் கொடுக்கல்-வாங்கல் இனங்களில் விழிப்புடன் ஈடுபடுவதன் மூலம் நஷ்டமடையாமல் தப்பலாம். தாய் நலனில் கவனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 4, 8, 10

திசைகள்: தென்மேற்கு, மேற்கு, வடக்கு, தென்கிழக்கு, கிழக்கு

நிறங்கள்: ஆரஞ்சு, நீலம், பச்சை, புகை நிறம், இளநீலம், வெண்மை

எண்கள்: 1, 4, 5, 6, 8

பரிகாரம்: விநாயகர், தட்சிணாமூர்த்தி, முருகனை வழிபடவும். பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது நல்லது.

மகர ராசி வாசகர்களே

உங்கள் ராசிக்கு 3-ல் கேது, 7-ல் குரு, 8-ல் சுக்கிரன், 9-ல் புதன், 10-ல் சனி, 11-ல் செவ்வாய் உலவுவதால் துணிச்சலான காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். போட்டிகளில் வெற்றி கிட்டும். பொருள்வரவு கூடும். எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புக்கள் கூடிவரும். நல்லவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கலைத்துறையினருக்கு நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். வெளிநாடு சென்று கல்வி பயில சிலருக்கு வாய்ப்பு உண்டாகும்.

தொழிலில் அபிவிருத்தி காணலாம். செந்நிறப்பொருட்கள், மின் சாதனங்கள், கட்டடப் பொருட்கள், தளவாடங்கள், கூரிய ஆயுதங்கள் ஆகியவை லாபம் தரும். நிலபுலங்கள் சேரும். சொத்துக்களால் வருவாயும் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவி புரிய முன்வருவார்கள். சூரியன் 8-லும், ராகு 9-லும் இருப்பதால் தந்தை நலனில் கவனம் தேவை. அரசுப்பணிகளில் முழுக்கவனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 8, 10

திசைகள்: வடகிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, வடமேற்கு

நிறங்கள்: நீலம், வெண்மை, பொன் நிறம்..மெரூன், பச்சை.

எண்கள்: 3, 5, 6, 7, 8, 9

பரிகாரம்: சூரிய நாராயணரை வழிபடவும். தந்தைக்கும் தந்தை வழி உறவினர்களுக்கும் உதவவும். ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்வது நல்லது.

கும்ப ராசி நேயர்களே

8-ல் புதன், 10-ல் செவ்வாய் உலவுவது சிறப்பு. அறிவாற்றலும், செயல்திறமையும் பளிச்சிடும். எடுத்தக் காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். வியாபார முன்னேற்றத் திட்டங்கள் கைகூடும். எழுத்தாளர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் வரவேற்பு கூடும். பொறியியல், சட்டம், காவல், ராணுவம் ஆகிய துறைகளைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம் காண்பார்கள். நிலபுலங்களின் சேர்க்கை நிகழும். உடன்பிறந்தவர்கள் உதவுவார்கள். நண்பர்கள், உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். இதர கிரகங்களின் சஞ்சாரம் சிறப்பாக இல்லாததால் பேச்சில் நிதானம் தேவை. புதியவர்களை நம்பி எதிலும் ஈடுபட வேண்டாம்.

பயணத்தின்போது விழிப்புத் தேவை. பொருளாதாரம் சம்பந்தப்பட்ட இனங்களில் விழிப்புடன் ஈடுபடுவதன் மூலம் பிரச்னைகளுக்கு ஆளாகாமல் தப்பலாம். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் உண்டாகும். மக்கள் நலனில் அக்கறை தேவை. பிறரிடம் கோபப்படாமல் அன்புடன் பேசிப் பழகுவது நல்லது. பெரியவர்களின் அதிருப்திக்கு ஆளாகாமல் இருப்பது அவசியம்.

அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 4, 8, 10

திசைகள்: வடக்கு, தெற்கு

நிறங்கள்: பச்சை, சிவப்பு.

எண்கள்: 5, 9

பரிகாரம்: குருவையும், தட்சிணாமூர்த்தியையும் வழிபடவும். நாகர் வழிபாடு நலம் கூட்டும். பெரியவர்களை வணங்கி, அவர்களது நல்லாசிகளைப் பெறுவது நல்லது.

மீன ராசி வாசகர்களே

உங்கள் ராசிநாதன் குரு 5-ம் இடத்தில் சஞ்சரிப்பதாலும், சூரியன் 6-ம் இடத்திலும் செவ்வாய் 9-லும் உலவுவதால் புத்திசாலித்தனம் வெளிப்படும். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் கூடும். பணவரவு அதிகரிக்கும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். தந்தையாலும் பிள்ளைகளாலும் நலம் உண்டாகும். புதிய பதவி, பட்டங்கள் கிடைக்கும். தொலைதூரத் தொடர்பு பயன்படும்.

ஜன்ம ராசியில் கேதுவும், 6-ல் சுக்கிரன், 7-ல் புதன், ராகு, 8-ல் சனி உலவுவதால் எதிலும் நிதானமாக ஈடுபடவும். கோபத்தைக் குறைத்துக் கொள்ளவும். வாழ்க்கைத் துணை நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். கேளிக்கை, உல்லாசங்களைத் தவிர்க்கவும். கலைத்துறையினருக்கும் மாதர்களுக்கும் பிரச்சினைகள் சூழும். தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் உழைப்புக்கேற்ற பயன் கிடைக்காமல் போகும். வீண் செலவுகளைத் தவிர்ப்பது நல்லது. வண்டி, வாகனங்களில் செல்லும்போது பாதுகாப்பு தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: செப்டம்பர் 4, 10

திசைகள்: கிழக்கு, வடகிழக்கு, தெற்கு

நிறங்கள்: ஆரஞ்சு, பொன் நிறம், சிவப்பு

எண்கள்: 1, 3, 9

பரிகாரம்: ராகு, கேது, சனி ஆகியோருக்கு பிரீதி, பரிகாரங்கள் செய்யவும். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவவும். சுமங்கலிப் பிரார்த்தனை செய்வது நல்லது. ஏழைப் பெண்களுக்கு உதவவும்.

SCROLL FOR NEXT