ஆன்மிகம்

இனி ஜெயம்தான் உங்களுக்கு; சங்கடஹர சதுர்த்தியில் ஆனைமுக தரிசனம்

வி. ராம்ஜி

சங்கடஹர சதுர்த்தியில், பிள்ளையாரை வழிபடுங்கள். அவருக்கு அருகம்புல் மாலை சார்த்தி வணங்குங்கள். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றியைத் தந்தருள்வார் விநாயகர்.

மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி நாள் வரும். இது விநாயகர் வழிபாட்டுக்கு உரிய அற்புதமான நாள். மாதாமாதம் வருகிற சிவராத்திரி, சிவ வழிபாட்டுக்கு உரியது என்பது போல், சஷ்டியானது முருகப்பெருமானின் வழிபாட்டுக்கு உகந்தது என்று கொண்டாடுவது போல், ஏகாதசி நாளில் மகாவிஷ்ணுவை தரிசித்து வழிபடுவது போல், சங்கட ஹர சதுர்த்தி நாளில், விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவது வழக்கம்.

இந்தநாளில், விநாயகர் அகவல் படித்தும் பூஜைகள் மேற்கொள்ளலாம். மாலையில், அருகில் உள்ள பிள்ளையார் கோயிலுக்குச் சென்று, ஆனைமுகனைத் தரிசியுங்கள். நலம் அனைத்தும் வழங்கி அருள்வார் ஆனைமுகத்தான் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

இன்றைய சங்கடஹர சதுர்த்தி நன்னாளில் (22.4.19) திங்கட்கிழமையில், விநாயகருக்கு கொழுக்கட்டையோ, சர்க்கரைப் பொங்கலோ நைவேத்தியம் செய்து வேண்டிக் கொள்ளுங்கள். உங்கள் காரியம் அனைத்தையும் வெற்றியாக்கித் தந்தருள்வார் விநாயகப் பெருமான்.

எடுத்தகாரியம் அனைத்திலும் துணையாக இருந்து அருள்பாலிப்பார். வெற்றியைத் தந்தருள்வார் விநாயகர்.

SCROLL FOR NEXT