ஆன்மிகம்

மூலம் நட்சத்திரம்: விகாரி வருட பலன்கள்

செய்திப்பிரிவு

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

சட்டதிட்டங்களுக்கும், நீதி நேர்மை நியாயத்திற்குக் கட்டுப்பட்டு நடப்பவர்களான மூலம் நட்சத்திர அன்பர்களே.

இந்த வருடம் மனம் மகிழும் சம்பவங்கள் உண்டாகும். மன நிம்மதியும் மனோதிடமும் உண்டாகும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள். திடீர் செலவு உண்டாகும். கவனமாக இருப்பது நல்லது.

தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும். போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதனையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். புதிய பதவிகள் கிடைக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்படும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த  பிரச்சினைகள் தீரும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும். உறவினர் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

பெண்களுக்கு முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்களைச் செய்து முடிப்பதில் திறமை வெளிப்படும் பணவரத்து கூடும்.

கலைத்துறையினர் இரவு பகலாக உழைக்க வேண்டி இருக்கும். அடுத்தவர் வேலையையும் நீங்களே செய்யும் நிலை உருவாகும். எனினும் உதவிகள் கிடைக்கும். வரவேண்டிய பணம் இழுபறியாக இருந்தாலும் வந்து சேரும்.

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்திலிருந்து சந்தோஷமான செய்தி வரும். தொண்டர்கள் உங்கள் சொல்படி நடந்து கொள்வது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

மாணவர்களுக்கு கல்வியில்  நினைத்ததை விட கூடுதல் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். மனம் தளராது செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வணங்க காரிய அனுகூலம் உண்டாகும். மனக் கவலை தீரும்.

மதிப்பெண்கள்: 59% நல்ல மதிப்பெண்கள் எதிர்பார்க்கலாம்

+ மனதில் புதிய உத்வேகம் பிறக்கும்

- திடீர் செலவு உண்டாகும்.

SCROLL FOR NEXT