புராணங்களில் பிரக்ருதி ஒரு தேவியாக, பிரபஞ்ச மனோபாவத்தின் உருவகமாக, பரிணாமத்துக்குத் தேவையான சக்தியாக குறிப்பிடப்படுகிறது. எனவே ஒவ்வொரு தேவனும் ஒரு சக்தியுடன் பிரிக்க முடியாதபடி இணைக்கப்பட்டுள்ளான். பிரக்ருதி, உற்பத்தி செய்வதற்கான உந்தம் ஆகும்.
கற்றலின் தருணம் எது?
மனிதர்கள் தங்களது எல்லா நேரத்தையும் எல்லா ஆற்றல்களையும் செலவிடுமாறு வாழ்க்கை முழுவதையும் கோரும் ஒரு சமூகத்தை உருவாக்கி விட்டனர். கற்பதற்கென ஓய்வான பொழுதே இல்லாமலிருப்பதால் அவர்களது வாழ்க்கை எந்திரத்தனமாகவும் கிட்டத்தட்ட அர்த்தமற்றதாகவும் ஆகிவிடுகிறது.
மனம் எதிலும் ஈடுபட்டிராத ஒரு நேரமே ஓய்வு நேரமாகும். அதுதான் எதையும் கவனிப்பதற்கானது. எதனாலும் ஆக்கிரமிக்கப்படாத மனத்தால் மட்டுமே எதையும் ஒழுங்காகக் கவனிக்கவும் முடியும். சுதந்திரமாகக் கவனிக்கும் பொழுதே கற்றலின் தருணமாகும். அப்போது மனம் எந்திரத்தனத்திலிருந்து விடுபடுகிறது.
- ஜே. கிருஷ்ணமூர்த்தி
தனியே...
இந்தச் சாலை வழி
யாரும் போவதில்லை
இந்த இலையுதிர் காலம்.