ஆன்மிகம்

காற்றில் கீதங்கள் 13: தில்லானா... தில்லானா!

வா.ரவிக்குமார்

கானக் குயில்களின் இசை நிகழ்ச்சிகள் எல்லாம் முடிந்து கோல மயில்களின் நாட்டிய நிகழ்ச்சிகள் பல மேடைகளிலும் அரங்கேறும் நேரம் இது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வாழ்ந்த சுவாதித் திருநாள் மகாராஜா, இசை உலகுக்கு பல முக்கியமான சாகித்யங்களை அளித்துள்ளார். அவற்றில் பலவற்றை நாட்டிய உலகமும் சுவீகரித்துக் கொண்டிருக்கிறது.

பரதநாட்டியத்தின் மார்க்கத்தில் தில்லானா ஒரு குறிப்பிடத்தகுந்த அம்சம். சாகித்யத்துக்கு அதிக முக்கியத்துவம் தராமல் ஜதிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து அமைக்கப்பட்டிருக்கும். சாகித்யத்தின் பங்கு குறைவாக இருப்பதால், நாட்டியக் கலைஞரின் அபிநயங்களுக்கும் நிருத்தம் போன்ற வகைக்கும் அதிக முக்கியத்துவம் தில்லானாவில் வெளிப்படாது.

துரித கதியில் நாட்டியக் கலைஞர் தம் கால்களால் வைக்கும் அடவுகளுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும். பல மேதைகள் தில்லானாக்களை படைத்து அளித்துள்ளனர்.

இன்றைக்கும் அநேக நாட்டிய மேடைகளில் ஆடப்படுவது சுவாதி திருநாளின் தனஸ்ரீ தில்லானா. மரபையும் நவீனத்தையும் இணைக்கும் பாலமாக சரண்யா ஸ்ரீநிவாஸன் மற்றும் மகேஷ் ராகவன் கூட்டணியில் ஒலிக்கிறது தனஸ்ரீ தில்லானா. கம்பீரமும் இனிமையும் சரிவிகிதத்தில் கலந்து சரண்யா ஜதிகளை பாடுவதற்கு ஏற்ப தனது ஐ-பாட்டில் அதற்கேற்ற இசையை மீட்டி அசத்துகிறார் மகேஷ் ராகவன்.

SCROLL FOR NEXT