சோம்பலுக்கு இடம் கொடுக்காமல் எறும்பு போன்று சுறுசுறுப்பாக இருக்கும் கேட்டை நட்சத்திர அன்பர்களே!
இந்த புத்தாண்டில் உல்லாசப் பயணங்கள் செல்ல நேரலாம். நற்பெயரும் புகழும் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபாடு இருக்கும். வாழ்க்கையில் எதிர்பாராத திருப்பங்களைச் சந்திக்க நேரலாம்.
எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும் சமாளித்துவிடும் திறமை இருக்கும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் வியாபார வளர்ச்சிக்காக துணிச்சலுடன் சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற வாய்ப்புகள் வந்து சேரும். சக ஊழியர்கள் மேலதிகாரிகளின் ஆதரவுடன் பணிகளை திறமையாக செய்து முடிப்பீர்கள்.
குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும். மனவருத்தத்துடன் சென்ற உறவினர்கள் வருத்தம் நீங்கி மீண்டும் வந்து சேருவார்கள். பெண்கள் பயணங்கள் செல்ல நேரிடும்.
எந்த பிரச்சினை வந்தாலும் அதை சமாளிக்கும் திறமை உண்டாகும். அடுத்தவர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். கலைத்துறையினருக்கு விடாமுயற்சியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பணவரவு திருப்தி தரும். அரசியல்வாதிகளுக்கு புத்தி தெளிவு ஏற்படும். பிரச்சினைகள் குறையும். தேவையான உதவி கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.
+: பணவரவு நன்றாக இருக்கும்.
-: உத்தியோகத்தில் மாறுதல்கள் வரலாம்.
பரிகாரம்: மஹாலக்ஷ்மியை அர்ச்சனை செய்து வணங்கி வர உடல் ஆரோக்கியம் பெறும். குடும்ப பிரச்சினை தீரும். வீட்டில் சுபிட்சம் நிலவும். கடன் தொல்லையில் இருந்து மீள்வீர்கள்.
மதிப்பெண்கள்: 84%