ஆன்மிகம்

2019: பூசம் நட்சத்திரத்துக்கான பலன்கள்!

பெருங்குளம் ராமகிருஷ்ணன்

கடினமான வேலைகளையும் புன்சிரிப்போடு செய்யும் திறன் படைத்த பூச நட்சத்திர  அன்பர்களே!

இந்த புத்தாண்டில் மனக்கலக்கம் நீங்கும். எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளாக வேண்டி இருந்த நிலை நீங்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்பாலினத்தாரின் நட்பும், அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரிடலாம். வீண் செலவு மற்றும் உடல் நல பாதிப்பு ஏற்படலாம்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றத்துக்காக கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு நீடிக்கும்.  தொழில் விரிவாக்கம் பற்றிய எண்ணம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள்.

குடும்பத்தில் இருப்பவர்களின் நலனுக்காக  செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையே  அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி  செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்கள் உங்களை மதிப்பது மனதுக்கு இதமளிக்கும்.

பெண்களுக்கு மனதில் வீண்குழப்பம் உண்டாகும். உங்களிடம் ஆலோசனை கேட்டு உங்களை நாடி சிலர் வரக்கூடும். கலைத்துறையினருக்கு வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கி சென்று விடுவது நல்லது. அரசியல்வாதிகள் கடின உழைப்புக்குபின் முனனேற்றம் அடைவார்கள்.

உங்களுக்குப் பின்னால் உங்களைப் பற்றி புறம் பேசியவர்கள், உங்களிடம் சரண் அடைவார்கள். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன் தரும். சக மாணவர்களின் நட்பும் கிடைக்கும்.

+: குடும்பத்தில் அன்பு அதிகரிக்கும்.

-: மற்றவர்களின் விமர்சனத்திற்கு ஆளாக நேரிடலாம்.

பரிகாரம்:  கந்தர் சஷ்டி கவசத்தை தினமும் படித்து முருகனை வழிபாடு செய்து வர குழப்பங்கள் நீங்கும். சஷ்டி, கிருத்திகை நாட்களில் முருகன் கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள். சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்யுங்கள். செவ்வரளி மற்றும் செந்நிறப் பூக்கள் கொண்டு அலங்கரியுங்கள். எதிர்ப்புகள் அகலும்.

மதிப்பெண்கள்: 80%

SCROLL FOR NEXT