ஆன்மிகம்

2019: உத்திர நட்சத்திரத்துக்கான பலன்கள்!

பெருங்குளம் ராமகிருஷ்ணன்

உழைப்பிற்கும் சிக்கனத்திற்கும் பெயர் பெற்ற உத்திர நட்சத்திர அன்பர்களே!

இந்த புத்தாண்டில் பேச்சின் இனிமை சாதுர்யத்தின் மூலம் காரிய வெற்றி காண்பீர்கள். பணவரவு கூடும். சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். மனக்கவலை நீங்கும் படியான சூழ்நிலை இருக்கும். உற்சாகம் உண்டாகும்.

பயணத்தின் போது ஏற்பட்ட தடங்கல்  நீங்கும். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். போட்டிகள் விலகும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்கத் தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்துச் செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த பிரச்சினைகள் தீரும். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். பெண்களுக்கு எதிர்பாராத பணவரவு இருக்கும். மனக்கவலை நீங்கி உற்சாகம் உண்டாகும்.

கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு போட்டிகள் மறையும். ஒப்பந்தங்கள் தொடர்பான காரியங்கள் சாதகமாக பலன் தரும். அரசியல்வாதிகளுக்கு கடன் தொடர்பான பிரச்சினைகள் தீரும். பணவரவு அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

+: தன்னம்பிக்கை அதிகரிக்கும்

-: எடுக்கும் முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம்.

பரிகாரம்: சூரியனை வணங்க எல்லா காரியங்களும் அனுகூலமாகும். சூர்யோதயத்திற்கு முன்னதாக நீராடுங்கள். தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்யுங்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்யுங்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கையில் முன்னேற்றம் காணப்படும்.

மதிப்பெண்கள்: 79%

SCROLL FOR NEXT