ஆன்மிகம்

2019 : அஸ்வினிக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்!

பெருங்குளம் ராமகிருஷ்ணன்

வைராக்கிய குணத்தால் அனைத்து காரியங்களையும் சாதித்துக் கொள்ளும் அஸ்வினி நட்சத்திர அன்பர்களே!

இந்த ஆங்கிலப் புத்தாண்டில் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி, நன்மதிப்பு பெறுவீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மனதில் ஏதேனும் டென்ஷன் உண்டாகலாம். உடற்சோர்வுகள் வரலாம். புதிய நபர்களின் அறிமுகமும் அவர்களால் நன்மையும் உண்டாகும்.

குரு சஞ்சாரத்தால் வீடு, வாகனம் தொடர்பான செலவு குறையும். வழக்கு விவகாரங்களில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்த தடங்கல்கள் நீங்கும். சாதூரியமான பேச்சு வியாபார விருத்திக்கு கைகொடுக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகப் பணி தொடர்பாக அலைய நேரிடலாம். குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்சினைகள் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே  விட்டுக் கொடுத்து செல்வதன் மூலம் நன்மை உண்டாகும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்ய முற்படுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும்.

பெண்களுக்கு எடுத்த காரியங்களை சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். சாதூரியமான பேச்சு வெற்றிக்கு உதவும். கலைத்துறையினருக்கு பொருளாதார உயர்வு, கடன்கள் குறையக் கூடிய அமைப்பு உண்டாகும். தேவையற்ற வம்பு வழக்குகள், மறைமுக எதிர்ப்புகள் மறையும்.

அரசியல்துறையினருக்கு பொருளாதார நிலை மிகச் சிறப்பாக அமையும். மேலிடத்துடன் ஒற்றுமை பலப்படும். மாணவர்கள், பாடங்களை நன்கு படித்து மற்றவர்களின் மதிப்புக்கு ஆளாவீர்கள். திறமையான செயல்பாடுகள் வெற்றிக்கு உதவும். 

+: தைரியம் அதிகரிக்கும்

-: முதலீடுகள் செய்யும் போது கவனம் தேவை

பரிகாரம்: விநாயகரை பூஜித்து வணங்க குடும்ப பிரச்சினை தீரும். விநாயகருக்கு வெள்ளெருக்கு மாலை சார்த்துங்கள். அருகம்புல் மாலை சார்த்தி வழிபடுங்கள். முடியும் போதெல்லாம் சுண்டல், கொழுக்கட்டை, தயிர்சாதம் என நைவேத்தியம் செய்து வழிபடுங்கள். கடன் கட்டுக்குள் இருக்கும்.

மதிப்பெண்கள்: 86%

SCROLL FOR NEXT