எந்த கடினமான சூழ்நிலையையும் நிதானமாகவும் நிறைவுடனும் அணுகும் புனர்பூச நட்சத்திர அன்பர்களே!
இந்தப் புத்தாண்டில் எதிர்ப்புகள் விலகும். பணவரத்து அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும். காரிய தடை, வீண் அலைச்சல் ஏற்படலாம். கெட்ட கனவுகள் வரலாம். திடீர் கோபம் ஏற்படும். எதிர்பாலினத்தாரிடம் கவனமாக பழகுவது அவசியம்.
தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். ஆர்டர் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். பழைய பாக்கிகள் வசூலாவது மனதிருப்தியைத் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணிசுமையால் டென்ஷனுடன் காணப்படுவார்கள். நிலுவையில் உள்ள தொகைகள் வந்து சேரலாம்.
குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சின்னசின்ன கருத்து வேற்றுமைகள் வரும். பிள்ளைகளின் செயல்பாடுகள் ஆறுதலைத் தரும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.
பெண்களுக்கு அடுத்தவர்களின் செயல்களால் கோபம் உண்டாகலாம். கொடுத்த கடனை திரும்பப் பெறுவதில் முழுமூச்சுடன் செயல்படுவீர்கள். கலைத்துறையினர் வெளிவட்டார பழக்க வழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. அரசியல்வாதிகள் எந்தக் காரியத்திலும் அவசர முடிவு எடுக்காமல் இருப்பதும் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதும் நல்லது. மாணவர்களுக்கு கவனத்தைச் சிதற விடாமல் வகுப்பை கவனிப்பது அவசியம். கூடுதலாக பாடங்களை படிக்க வேண்டி இருக்கும்.
+: பணவரத்து அதிகரிக்கும்
-: அடுத்தவர்களின் செயல்களால் டென்ஷன் ஏற்படலாம்
பரிகாரம்: நவக்கிரக குரு பகவானை வழிபட்டு வர மன அமைதி கிடைக்கும். வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு வெண்மை மற்றும் மஞ்சள் நிற பூக்களை அணிவித்து தரிசியுங்கள். நிம்மதி நிச்சயம். உயர்வு நோக்கி வாழ்க்கை முன்னேறும்.
மதிப்பெண்கள்: 82%